search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kanawar Yatra"

    • முஸ்லிம்களாகிய நாங்கள் எப்போதும் கன்வார் யாத்திரைக்கு வரும் சிவபக்தர்களை வரவேற்கிறோம்.
    • இதற்கு முன்பு இதுமாதிரி மசூதிகள் மறைக்கப்பட்டதில்லை

    புனித மாதமான சவான் (ஷ்ரவான்) மாதம் வரும் திங்கட்கிழமை தொடங்குகிறது. இதனையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் (Kanwariyas) பல்வேறு மாநிலங்களில் இருந்து டெல்லி மாநிலம் வழியாக ஹரித்வார் செல்வார்கள்.

    அவர்கள் கங்கையில் புனித நீர் எடுத்து சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வார்கள். இதனை கன்வார் யாத்திரை என அழைப்பார்கள். இந்த யாத்திரை ஆகஸ்ட் 2-ந்தேதி முடிவுடையும்.

    இந்நிலையில், உத்தரகண்ட் மாநிலத்தின் ஹரித்வார் நகரில் கன்வார் யாத்திரை செல்லும் வழியில் உள்ள மசூதி மற்றும் மஸார் வெள்ளைத்துணி கொண்டு மறைக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, அந்த வெள்ளைத்துணி அகற்றப்பட்டது.

    மசூதி வெள்ளைத்துணி வைத்து மறைக்கப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்தது.

    இந்த விவகாரம் தொடர்பாக பேசிய காங்கிரஸ் தலைவர் நயீம் குரேஷி, "முஸ்லிம்களாகிய நாங்கள் எப்போதும் கன்வார் யாத்திரைக்கு வரும் சிவபக்தர்களை வரவேற்கிறோம். அவர்களுக்கு வரும் வழியில் உணவு, தண்ணீர் வழங்கி வருகிறோம். ஹரித்வாரில் உள்ள இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான நல்லிணக்கத்திற்கு இதுதான் உதாரணம். இதற்கு முன்பு இதுமாதிரி மசூதிகள் மறைக்கப்பட்டதில்லை" என்று தெரிவித்தார்.

    ×