search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kannada certificate courses"

    சசிகலா கன்னடம் கற்பதில் ஆர்வமாக இருப்பதால், அவரை கன்னட சான்றிதழ் படிப்பில் சேர்ப்பதற்கு சிறை நிர்வாகத்தினர் முயற்சி மேற்கொண்டுள்ளனர். #Sasikala
    பெங்களூரு:

    சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் உள்ள சசிகலா கன்னடம் கற்று வருகிறார்.

    மற்ற கைதிகள் கன்னடத்தில் பேசினால், அதை அவரால் புரிந்து கொள்ள முடிகிறது. தற்போது அவர் கன்னடத்தில் எழுதவும் பயிற்சி பெற்று உள்ளார்.

    பெங்களூரு பல்கலைக்கழக தொலைதூர கல்வி மையம் கைதிகளுக்கு சான்றிதழ் படிப்பு இளநிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்புகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் பெங்களூரு சிறையில் உள்ள 257 கைதிகள் 2018-19ம் கல்வி ஆண்டில் இளநிலை பட்டம் மற்றும் முதுநிலை பட்டம் சான்றிதழ் படிப்புகளில் சேர்ந்துள்ளனர்.

    சசிகலாவையும் கன்னட சான்றிதழ் படிப்பில் சேர வைக்க முயற்சி நடக்கிறது. இது குறித்து பெங்களூரு பல்கலைக்கழக தொலை தூர கல்வி மைய டைரக்டர் மயிலரப்பா கூறியதாவது:-

    சசிகலா கன்னடம் கற்க ஆர்வமாக இருப்பதாக ஜெயில் நிர்வாகத்தினர் என்னிடம் தகவல் தெரிவித்தனர். நான் இந்த வாரம் ஜெயிலுக்கு சென்று கைதிகளை பார்க்க இருக்கிறேன். அப்போது கன்னட சான்றிதழ் படிப்பு தொடர்பான விவரங்களை சசிகலாவிடம் தெரிவிப்பேன். சான்றிதழ் படிப்புக்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தருமாறு அவரிடம் கோரிக்கை வைப்பேன்.

    சசிகலா கன்னடத்தில் பேசவும், எழுதவும் பயிற்சி பெற்றிருப்பதாக ஜெயில் அதிகாரிகள் என்னிடம் தெரிவித்தனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #Sasikala

    ×