search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Karaikudi Kaalai vs Dindigul Dragons"

    தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் காரைக்குடி காளை வெற்றிக்கு 178 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது திண்டுக்கல் டிராகன்ஸ். #TNPL2018 #DDvKK
    தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 21-வது லீக் ஆட்டம் திருநெல்வேலியில் நடைபெற்று வருகிறது. காரைக்குடி காளை அணிக்கெதிரான இந்த ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் ஹரி நிஷாந்த், என் ஜெகதீசன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஹரி நிஷாந்த் 16 ரன்னிலும், ஜெகதீசன் 25 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினார்கள்.

    அதன்பின் வந்த பால்சந்தர் அனிருத் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஐந்தாவது வீரராக களம் இறங்கிய ஆர் விவேக் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 13 பந்தில் 5 சிக்ஸ், 2 பவுண்டரியுடன் 42 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.



    பால்சந்தர் அனிருத் 41 பந்தில் அரைசதத்தை கடந்தார். அரைசதம் அடித்த அடுத்த பந்தில் பால்சந்தர் அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 42 பந்தில் 5 பவுண்டரி, 1 சிக்சருடன் 53 ரன்கள் சேர்த்தார். பால்சந்தர் அனிருத் மற்றும் ஆர் விவேக் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் கடைநிலை வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க திண்டுக்கல் டிராகன்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 177 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

    இதனால் காரைக்குடி காளைக்கு 178 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது திண்டுக்கல் டிராகன்ஸ். காரைக்கு காளை அணியின் அஷ்வத் முகுந்தன் 4 ஓவர்கள் வீசி 36 ரன்கள் விட்டுக்கொடுத்து ஐந்து விக்கெட்டுக்கள் சாய்த்தார்.
    ×