search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "karnakata elections"

    கர்நாடக மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என மத்திய மந்திரி சதானந்த கவுடா கூறியுள்ளார். #KarnatakaVerdict #KarnatakaElectionResults
    பெங்களூரு:

    கர்நாடகாவில் வாக்கு எண்ணிக்கை நடந்து வரும் நிலையில், பா.ஜ.க கட்சி அதிக எண்ணிக்கையிலான இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது.

    இந்நிலையில் மத்திய புள்ளியல் மற்றும் திட்ட அமலக்கத்துறை மந்திரி சதானந்த கவுடா தனிப் பெரும்பான்மையுடன் பா.ஜ.க கட்சி கர்நாடகாவில் ஆட்சி அமைக்கும் என கூறியுள்ளார்.

    கூட்டணி என்ற பேச்சுக்கே இடம் இல்லை, ஆட்சி அமைக்க 112 தொகுதிகள் போதுமானதாகும். ஆனால், 112 தொகுதிக்கும் அதிகமான இடங்களில் பா.ஜ.க முன்னிலை பெற்று வருகிறது என அவர் தெரிவித்துள்ளார். 
    #KarnatakaVerdict #KarnatakaElectionResults     
    கர்நாடக தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வரும் நிலையில், பாஜக ஆட்சியமைப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. #KarnatakaVerdict #KarnatakaElectionResults
    பெங்களூர்:

    கர்நாடகத்தில் மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் 2 இடங்கள் தவிர 222 தொகுதிகளுக்கு கடந்த 12-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்த தேர்தலில் 72.36 சதவீத ஓட்டுகள் பதிவாயின. இந்நிலையில், பதிவான வாக்குகள் எண்ணும் பணி 38 மையங்களில் நடந்து வருகிறது.

    தொடக்கத்தில் இருந்து காங்கிரஸ் - பாஜக இடையே கடும் போட்டி நிலவி வந்தது. இரு கட்சிகளும் மாறிமாறி முன்னிலை பெற்று வந்தன.

    பெரும்பான்மைக்கு தேவையான 112 இடங்களை இன்னும் எந்த கட்சியும் எட்டாத நிலையில்,  பாஜக 100 தொகுதிகளை தாண்டி முன்னிலை பெற்று வருகிறது.

    காங்கிரஸ் 67 தொகுதிகளிலும், மஜத 40 தொகுதிகளிலும் முன்னிலை பெற்று வருகின்றன. பெரும்பான்மைக்கு இன்னும் சில இடங்களே தேவை என்ற நிலையில், பாஜக முன்னிலை வகித்து வரும் நிலையில், அங்கு பாஜகவே ஆட்சியமைக்க அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

    எனினும், பாஜக ஒருவேளை பெரும்பான்மை பெறவில்லை என்றால், காங்கிரஸ் - மஜத கூட்டணி அமைத்து ஆட்சியமைக்கும் என தெரிகிறது. #KarnatakaVerdict #KarnatakaElectionResults
    ×