என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Karnatak flood study"
பெங்களூரு:
கர்நாடகத்தில் குடகு, ஹாசன், தென்கன்னடம், சிக்கமகளூரு உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கடந்த மாதம் பலத்த மழை பெய்ததால் வெள்ளம் ஏற்பட்டு, ரூ. 8 ஆயிரம் கோடி மதிப்பிலான பயிர்கள் மற்றும் உள்கடட்டமைப்புகள் சேதம் அடைந்ததாக கர்நாடக அரசின் முதல்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து பிரதமர் மோடியை சந்தித்த முதல்வர் குமாரசாமி தலைமையிலான குழுவினர், வேள்ள சேதங்களை ஆய்வு செய்வதற்கு ஆய்வுக் குழுவை அனுப்புமாறு கேட்டுக் கொண்டனர்.
அதன்படி, வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களை மத்திய அரசின் இரு குழுக்கள் ஆய்வு செய்தனர். மத்திய உள்துறை இணை செயலாளர் அணில்மாலிக் தலைமையில் மத்திய நீர் ஆணையத்தின் கண்காணிப்புப் பொறியாளர் ஜிதேந்திரபன் வார், மத்திய வேளாண்துறை இணை இயக்குனர் பொன்னுசாமி ஒரு குழுவினர் குடகு மாவட்டத்தில் ஆய்வு செய்தனர்.
பெங்களூருவில் இருந்து புறப்பட்ட இக்குழு ஹாரங்கி சென்று, அங்கிருந்து சோம்வார்பேட் வட்டத்தின் ஹட்டிஹோளே கிராமத்துக்கு சென்றனர். அங்கு உள்கட்டமைப்பு சேதங்கள், பயிர் சேதங்களை பார்வையிட்டனர். பின்னர் முக்கூட்லு பகுதிக்கு சென்று, அங்கிருந்து ஜம்பூருக்கு சென்ற குழுவினர் தோட்டகலை சேதமங்களை ஆய்வு செய்தனர்.
அதன் பிறகு மடிக்கேரிக்கு சென்ற மத்திய ஆய்வு குழுவினர், அங்கு மாவட்ட கலெக்டரை சந்தித்து வெள்ள சேதங்கள் குறித்து கேட்டு அறிந்தனர். இந்த குழுவினர் வியாழக்கிழமை ஹெப்பட்டகெரி பகுதியில் உள்ள சண்முகா, குமாரசாமி காலனியில் ஏற்பட்டுள்ள உள்கட்டமைப்பு சேதங்களை பார்வையிடுகிறார்கள்.
அதன் பிறகு, தேவஸ்தூர் பள்ளி சந்திப்புக்கு சென்று அங்கு உள்கட்டமைப்பு சேதம், பயிர் சேதங்களை ஆய்வு செய்கிறார்கள். அதன் பிறகு தந்திபாலா பாலம், கலூர் சாலை, மண்டலப் பட்டி, குந்தரகோடி, மடே கிராமம், மொன்னன்கெரே பகுதிகளுக்கு சென்று அங்கும் வெள்ள சேதங்களை பார்வையிட்டு மதிப்பிடுகிறார்கள்.
இதேபோல, மத்திய நிதித்துறை துணைச் செயலாளர் பர்தெந்துகுமார்சிங் தலைமையில் மத்திய ஊரக மேம்பாட்டுத்துறை துணைச் செயலாளர் மாணிக் சந்திபண்டித், மத்திய தரைவழிப் போக்குவரத்து கழக மண்டல அதிகாரி சதானந்த்பாபு ஆகியோர் அடங்கிய மத்திய குழுவினர் தென்கர்நாடக மாவட்டத்தில் ஆய்வு செய்தனர். இதையடுத்து மங்களூரு சென்ற மத்திய ஆய்வுக்குழுவினர் அங்கிருந்து உடுப்பி சென்று, முல்கி, அட்யபாடி, பஜ்பே ஆகிய இடங்களில் பயிர் சேதம் மற்றும் உள்கட்டமைப்பு சேதங்களை பார்வையிட்டு, பின்னர் மங்களூரில் மாவட்ட கலெக்டருடன் ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்பின்போது, வெள்ள சேதங்கள் குறித்த மதிப்பீடுகளை மாவட்ட கலெக்டரிடம் கேட்டு அறிந்தனர்.
மங்களூருவில் இரவு தங்கும் ஆய்வு குழுவினர் நேற்று பண்ட்வால் வட்டத்தின் மூலார்பட்டனா, விட்லபண்டூரு, கணியூர், கல்லஜே, சுப்ரமணியா, குண்டியா ஆகிய பகுதிகளை ஆய்வு செய்து பயிர் சேதங்களை மதிப்பிட்டனர்.
இந்த இரு குழுவினரும் இன்று பெங்களூருவுக்கு வந்து முதல்-அமைச்சர் குமாரசாமி, தலைமைச் செயலாளர் டி.எம்.விஜய்பாஸ்கர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, வெள்ளச் சேதங்கள் குறித்து ஆய்வு செய்கிறார்கள். அதன் பிறகு புதுடெல்லி திரும்பும் இக்குழுவினர், வெள்ள பாதிப்புகள் குறித்து மத்திய அரசுக்கு அறிக்கை அளிக்க இருக்கிறார்கள்.
அதன் அடிப்படையில் வெள்ள நிவாரண உதவிகளை மத்திய அரசு அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் கட்டமாக ரூ.1,190 கோடி நிவாரண நிதி உதவியை மத்திய அரசிடம் கர்நாடக அரசு கேட்டு இருக்கிறது. #SouthWestMonsoon #KeralaRains #CMKumaraswamy
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்