search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "karnataka எடியூரப்பா"

    காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளின் எம்.எல்.ஏக்கள் சுதந்திரமே இல்லாமல் சொகுசு விடுதிகளில் சிறைவைக்கப்பட்டுள்ளதாக கர்நாடக முதல்வர் எடியூரப்பா கவலை தெரிவித்துள்ளார். #BSYeddyurappa #JDS #Congress
    பெங்களூரு:

    கர்நாடகாவில் பெரும்பான்மை பெறாத நிலையில், தனிப்பெரும் கட்சியாக உள்ள பாஜகவை ஆட்சியமைக்க கவர்னர் வாஜுபாய் வாலா அழைப்பு விடுத்தார். அத்துடன் எடியூரப்பாவுக்கு முதல் மந்திரியாக இன்று பதவிப் பிரமாணமும் செய்து வைத்தார். 

    கர்நாடக முதல்வராக பதவியேற்ற பின்னர் கட்சி நிர்வாகிகள் மற்றும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏ.க்கள் மத்தியில் பேசிய எடியூரப்பா, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளின் எம்.எல்.ஏக்கள் சுதந்திரமே இல்லாமல் சொகுசு விடுதிகளில் கடுமையான சூழலில் சிறைவைக்கப்பட்டுள்ளதாக விமர்சனம் செய்தார்.

    மேலும், அக்கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களின் செல்போன்கள் பிடுங்கி வைக்கப்பட்டுள்ளது அதனால் அவர்களின் குடும்பத்தினரிடம் கூட பேச முடியாத நிலையில் அவர்கள் உள்ளனர். இது போன்ற முயற்சிகளின் மூலம் பாஜக பெரும்பான்மை பெறுவதை தடுக்க முடியாது. அடுத்த 15 நாட்களுக்குள் கவர்னர் கூறியது போலவே பாஜக பெரும்பான்மை நிச்சயம் நிரூபிக்கும் என முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.  #BSYeddyurappa #JDS #Congress
    ×