search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "karnataka bypolls"

    கர்நாடக மாநிலத்தில் 3 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் இரு சட்டசபை தொகுதிகளில் இன்று நடைபெற்ற இடைத்தேர்தல்களில் பதிவான வாக்கு சதவீதம் தெரியவந்துள்ளது. #votingconcludes #karnatakabypolls
    பெங்களூரு:

    கர்நாடகம் மாநிலத்தின் சிவமோகா, பெல்லாரி, மாண்டியா ஆகிய 3 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் ராமநகரம், ஜம்கண்டி ஆகிய 2 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெற்றது.

    இந்த தொகுதிகளில் காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இந்த கூட்டணியை எதிர்த்து பா.ஜ.க. தனியாக களமிறங்கியது. பெல்லாரி உள்பட மொத்தமுள்ள ஐந்து தொகுதிகளில் சுயேட்சை வேட்பாளர்களுடன் சேர்த்து மொத்தம் 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

    இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்த நிலையில் இன்றைய இடைத்தேர்தல்களின் பதிவான வாக்கு சதவீதம் தொடர்பான விபரம் வெளியாகியுள்ளது.

    பாராளுமன்ற இடைத்தேர்தலை சந்தித்த சிவமோகாவில் 61.5 சதவீதம், பெல்லாரியில் 63.85 சதவீதம் , மாண்டியாவில் 53.93 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன,

    சட்டசபை  இடைத்தேர்தலை சந்தித்த  ராமநகரில்  73.71 சதவீதம் வாக்குகளும், ஜம்கண்டியில் 81.58 சதவீதம் வாக்குகளும் பதிவாகின.

    இன்று பதிவான வாக்குகள் நவம்பர் 6-ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. #votingconcludes #karnatakabypolls
    ×