search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Karnataka Chief Minister Kumaraswamy"

    பாராளுமன்ற தேர்தல் தொகுதிப் பங்கீட்டில் காங்கிரசிடம் நாங்கள் பிச்சை கேட்கவில்லை என்று கர்நாடக முதல் மந்திரி குமாரசாமி கூறியுள்ளார். #Kumaraswamy #Parliamentelection

    பெங்களூரு:

    கர்நாடக முதல் மந்திரி குமாரசாமி மைசூருவில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வரும் பாராளுமன்ற தேர்தல் தொகுதிப் பங்கீடு குறித்து சில காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக ஜே.டி.எஸ். கட்சிக்கு அதிகபட்சமாக 7 தொகுதிகளுக்கும் மேல் ஒதுக்கீடு செய்ய முடியாது என்று கூறி வருகின்றனர்.

    பாராளுமன்ற தேர்தல் தொகுதிப் பங்கீட்டில் காங்கிரசிடம் நாங்கள் யாசகம் (பிச்சை) கேட்கவில்லை.

    எங்கள் கட்சியின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு அதிக தொகுதிகளை கேட்பது எங்கள் உரிமை. காங்கிரஸ் கட்சியினரும் எங்களின் கவுரவத்துக்கு குறைவராமல் தொகுதிகளை ஒதுக்குவது குறித்து ஆலோசிக்க வேண்டும். என்றாலும் தேர்தல் நெருங்கும்போது, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் ஜே.டி.எஸ். மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாடு காண்பார் என நம்புகிறேன்.

    மேலும் கர்நாடகத்தில் ஜே.டி.எஸ். - காங்கிரஸ் கூட்டணியில் சிறந்த ஆட்சியை வழங்கி வருவதை எனது கடமையாக கொண்டுள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #Kumaraswamy #Parliamentelection

    காவிரி மேலாண்மை ஆணையம் குறித்த கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமியின் கருத்துக்கு ஜி.கே.வாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். #GKVasan #kumaraswamy
    சென்னை:

    தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைப்பதில் சிக்கல்கள் இருப்பதாகவும், மேலாண்மை ஆணையம் அமைப்பது சம்பந்தமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒப்புதல் பெற வேண்டும் என்றும் கூறியுள்ளார். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. இப்படி கர்நாடக முதல்-மந்திரி பேசியது தமிழக மக்கள் குறிப்பாக விவசாயிகள் மனதில் மிகுந்த வேதனையையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

    இந்திய இறையாண்மையை காப்பேன் என்றும் சட்டப்படி நடப்பேன் என்றும் உறுதிமொழி எடுத்துக்கொண்ட கர்நாடக முதல்-மந்திரி சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மதிக்காமல் செயல்படுவது மிகவும் வருத்தத்துக்கு உரியது. எனவே, கர்நாடக முதல்-மந்திரி நியாயத்துக்கு உட்பட்டு, நீதிக்கு தலைவணங்கி, மாநிலங்களுக்கு இடையேயான நல்லுறவுக்கு சாதகமாக பேசுவதும், செயல்படுவதும் தான் உகந்தது. மத்திய பா.ஜ.க. அரசு இனியும் பொறுமை காக்காமல் கர்நாடக அரசு மேலாண்மை ஆணையத்துக்கு உறுப்பினரை குறுகிய காலக்கெடுவிற்குள் நியமிக்க கட்டயாப்படுத்தி, மேலாண்மை ஆணையத்தை செயல்படுத்த முன்வர வேண்டும் என்று த.மா.கா. சார்பில் வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #GKVasan #kumaraswamy
    ×