என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "karnataka election 2023"
- மைசூருவில் மட்டும் 11 தொகுதிகளில் 8 தொகுதிகளை காங்கிரஸ் தன் வசப்படுத்தியுள்ளது.
- பெல்லாரி மாவட்டத்தை காங்கிரஸ் முழுமையாக கைப்பற்றியது.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஒற்றுமை யாத்திரை தொடங்கினார். இந்த யாத்திரையானது கர்நாடக மாநிலத்தில் உள்ள 7 மாவட்டங்களில் நடைபெற்றது.
இந்நிலையில், கர்நாடக தேர்தலில் ராகுல் காந்தியின் யாத்திரை கை கொடுத்துள்ளது.
சாம்ராஜ் நகர், மைசூரு, மாண்டியா, தும்கூரு, பெல்லாரி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் உள்ள 51 தொகுதிகளில் 36 தொகுதியை காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது.
மைசூருவில் மட்டும் 11 தொகுதிகளில் 8 தொகுதிகளை காங்கிரஸ் தன் வசப்படுத்தியுள்ளது.
பெல்லாரி மாவட்டத்தை காங்கிரஸ் முழுமையாக கைப்பற்றியது.
- கர்நாடகாவில் வெற்றி வாகை சூடிய காங்கிரஸ் கட்சிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
- கர்நாடக மாநில தலைவர் டி.கே.சிவக்குமார், சித்தராமையா ஆகியோரை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு மு.க.ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளார்.
இந்தியா முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய கர்நாடகா சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது. கர்நாடகாவில் ஆட்சி அமைக்க தேவையான இடங்களில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது.
இந்நிலையில் கர்நாடகாவில் வெற்றி வாகை சூடிய காங்கிரஸ் கட்சிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, கர்நாடக மாநில தலைவர் டி.கே.சிவக்குமார், சித்தராமையா ஆகியோரை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு மு.க.ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளார்.
- வாக்குப்பதிவு நேரம் முடிவதற்கு முன்னரே வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்துச் சென்றதாக நினைத்து கிராம மக்கள் ஆத்திரம்.
- வாக்குப்பதிவு செய்யப்படாத கூடுதல் இயந்திரங்களை உடைத்து, வாகனங்கள் மீது தாக்குதல்.
கர்நாடகா மாநிலம் விஜயபுரா மாவட்டம் மசபினாலா கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில், வாக்குப்பதிவு பாதியில் நிறுத்தப்பட்டதாக கூறி வரிசையில் காத்திருந்த கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்துச் சென்றதற்கான முறையான காரணத்தை தெரிவிக்கப்படவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்தன.
வாக்குப்பதிவு செய்யப்படாத கூடுதல் இயந்திரங்களை உடைத்து, தேர்தல் அதிகாரிகளின் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆனால், வாக்குப்பதிவு நேரம் முடிவதற்கு முன்னரே வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்துச் சென்றதாக நினைத்து கிராம மக்கள் ஆத்திரமடைந்தது பின்னர் தெரியவந்தது.
கூடுதல் தேவைக்காக வைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு இயந்திரங்களை அதிகாரிகள் எடுத்து சென்ற நிலையில் பொதுமக்கள் ரகளையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், விஜயபுரா மாவட்டத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களை உடைத்த விவகாரத்தில் 23 பேரை கைது செய்து போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
- காலை 11 மணி நிலவரப்படி 20.99 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன.
- மதியம் 1 மணி நிவலரப்படி 37.25 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
224 தொகுதிகளை கொண்ட கர்நாடகாவில் இன்று சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகிறது.
இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.
காலை முதலே பல்வேறு கட்சி தலைவர்களும், பிரபலங்களும், பொது மக்களும் வாக்களித்து வருகின்றனர்.
அதன்படி, இன்று காலை 9 மணி நிலவரப்படி 7.55 சதவீதம் வாக்குகள் பதிவான. தொடர்ந்து, காலை 11 மணி நிலவரப்படி 20.99 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன.
மதியம் 1 மணி நிவலரப்படி 37.25 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.மதியம் 3 மணி நிவலரப்படி 52.18 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இதில் அதிகபட்சமாக ராம் நகரில் 63.36 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.
- காலை 9 மணி நிலவரப்படி 7.55 சதவீதம் வாக்குகள் பதிவான.
- காலை 11 மணி நிலவரப்படி 20.99 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன.
224 தொகுதிகளை கொண்ட கர்நாடகாவில் இன்று சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகிறது.
இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.
காலை முதலே பல்வேறு கட்சி தலைவர்களும், பிரபலங்களும், பொது மக்களும் வாக்களித்து வருகின்றனர்.
அதன்படி, இன்று காலை 9 மணி நிலவரப்படி 7.55 சதவீதம் வாக்குகள் பதிவான. தொடர்ந்து, காலை 11 மணி நிலவரப்படி 20.99 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன.
இந்நிலையில் மதியம் 1 மணி நிவலரப்படி 37.25 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
இதில் அதிகபட்சமாக உடுப்பி மாவட்டத்தில் 47.79 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.
குறைந்தபட்சமாக பெங்களூரு மத்திய மாவட்டத்தில் 29.41 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.
- வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்துச் சென்றதற்கான முறையான காரணத்தை தெரிவிக்கப்படவில்லை என குற்றச்சாட்டு.
- தேர்தல் அதிகாரிகளின் வாகனங்கள் மீது கிராம மக்கள் தாக்குதல்.
கர்நாடகா மாநிலம் விஜயபுரா மாவட்டம் மசபினாலா கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில், வாக்குப்பதிவு பாதியில் நிறுத்தப்பட்டதாக கூறி வரிசையில் காத்திருந்த கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்துச் சென்றதற்கான முறையான காரணத்தை தெரிவிக்கப்படவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்தன.
வாக்குப்பதிவு செய்யப்படாத கூடுதல் இயந்திரங்களை உடைத்து, தேர்தல் அதிகாரிகளின் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆனால், வாக்குப்பதிவு நேரம் முடிவதற்கு முன்னரே வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்துச் சென்றதாக நினைத்து கிராம மக்கள் ஆத்திரமடைந்தது பின்னர் தெரியவந்தது.
இந்நிலையில், கூடுதல் தேவைக்காக வைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு இயந்திரங்களை அதிகாரிகள் எடுத்து சென்ற நிலையில் பொதுமக்கள் ரகளையில் ஈடுபட்டனர்.
- காலை 9 மணி நிலவரப்படி 7.55 சதவீதம் வாக்குகள் பதிவான.
- 224 தொகுதிகளில் 58,545 வாக்குச்சாவடிகளில் வாக்குகள் பதிவாகியுள்ளது.
224 தொகுதிகளை கொண்ட கர்நாடகாவில் இன்று சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகிறது. இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.
இந்நிலையில், காலை முதலே பல்வேறு கட்சி தலைவர்களும், பிரபலங்களும், பொது மக்களும் வாக்களித்து வருகின்றனர்.
அதன்படி, இன்று காலை 9 மணி நிலவரப்படி 7.55 சதவீதம் வாக்குகள் பதிவான. தொடர்ந்து, காலை 11 மணி நிலவரப்படி 20.99 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன.
இதில் அதிகபட்சமாக உடுப்பி மாவட்டத்தில் 30.26 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் 16.77 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.
224 தொகுதிகளில் 58,545 வாக்குச்சாவடிகளில் வாக்குகள் பதிவாகியுள்ளது.
- தேர்தலில் பல்வேறு கட்சி தலைவர்களும், பிரபலங்களும், பொது மக்களும் வாக்களித்து வருகின்றனர்.
- காலை 9 மணி நிலவரப்படி 7.55 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன.
224 தொகுதிகளை கொண்ட கர்நாடகாவில் இன்று சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகிறது. இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், பல்வேறு கட்சி தலைவர்களும், பிரபலங்களும், பொது மக்களும் வாக்களித்து வருகின்றனர்.
காலை 9 மணி நிலவரப்படி 7.55 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. இந்நிலையில், மணப்பெண் ஒருவர் தங்களின் வாக்குகளை அளிக்க வாக்குச்சாவடிக்குள் வந்துள்ளார்.
சிக்கமகளூர் மாவட்டம் மூடிகீரே சட்டசபைத் தொகுதியில் உள்ள மக்கோனஹல்லி பகுதியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் மணக்கோலத்தில் வந்த பெண் ஒருவர் ஆர்வமாக வாக்களித்தார்.