search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Karnataka Local Body Election"

    கர்நாடகாவில் உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை 98 சதவிகிதம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் 982 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. #KarnatakaLocalBodyElection2018 #Congress #BJP
    பெங்களூரு:

    கர்நாடகத்தில் மைசூரு, துமகூரு, சிவமொக்கா ஆகிய 3 மாநகராட்சிகள் உள்பட 105 நகர உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஆகஸ்டு 31-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் 67.51 சதவீத ஓட்டுகள் பதிவாயின. 30 வார்டுகளில் வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    எல்லாவற்றையும் சேர்த்து மொத்தம் 2709 இடங்களுக்கு நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டன. 
    இந்த தேர்தலில் பா.ஜ.க, காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் தனித்து போட்டியிட்டதால், எதிர்பார்ப்பு  அதிகரித்தது. 

    அறிவிக்கப்பட்ட 2664 இடங்களில், காங்கிரஸ் 982 இடங்களையும், பாஜக 929 இடங்களையும், மதசார்பற்ற ஜனதா தளம் 307 இடங்களையும் கைப்பற்றியுள்ளன. நகர்ப்புறங்களில் பாஜக அதிக இடங்களில் பாஜகவும், கிராமப்புறங்களில் காங்கிரசும் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.

    காங்கிரஸ் - மஜத கூட்டணியின் வளர்ச்சி அரசியல் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளதாகவும், பாஜகவின் பொய் பிரசாரத்தை நிராகரித்து விட்டதாகவும் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுர்ஜீவாலா தெரிவித்துள்ளார்.  
    கர்நாடகா உள்ளாட்சி தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி தனித்து போட்டியிடும் என்ற தேவேகவுடாவின் அறிவிப்பால் காங்கிரஸ் அதிர்ச்சியடைந்துள்ளது. #DeveGowda #JDS #Congress
    பெங்களூர்:

    மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் தேவேகவுடா பெங்களூரில் நேற்று பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

    கர்நாடகாவில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி அமைப்பது பற்றி மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவுடன் பேச்சு நடத்தினேன்.

    உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி வைத்தால் இரு கட்சி தொண்டர்களிடமும் குழப்பம் ஏற்படும் நிலை உள்ளது. எனவே உள்ளாட்சி தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் தனித்து போட்டியிடும்.

    ஆட்சி செய்வதில் இரு கட்சிகளின் கூட்டணி நீடிக்கும். அதில் எந்தவித குழப்பமும் இல்லை. எனவே தனித்து போட்டியிடுவதால் ஆட்சிக்கு எந்த பிரச்சினையும் இல்லை.

    மதச்சார்பற்ற ஜனதா தளம் தனித்து போட்டியிடுவது பற்றி நிர்வாகிகளிடமும் கருத்து கேட்கப்பட்டுள்ளது. அவர்களது முடிவை அறிய நான் வருகிற 11-ந் தேதி தொடங்கி 4 நாட்கள் சுற்றுப் பயணம் செய்ய உள்ளேன். அதன் பிறகு உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் விபரம் வெளியிடப்படும்.



    நாங்கள் உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவதை காங்கிரஸ் கட்சி புரிந்து கொள்ளும் என்று நம்புகிறேன். எனவே எங்கள் கூட்டணியில் எந்த பிளவும் ஏற்படாது.

    உள்ளாட்சி தேர்தலுக்காக மட்டுமே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு தேவேகவுடா கூறினார். #DeveGowda #JDS #Congress

    ×