search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Karnataka outcome"

    வெறும் அற்ப அரசியல் லாபத்துக்காக, கர்நாடகத்தில் ஆட்சியமைக்க மதசார்பற்ற ஜனதாதளத்துக்கு காங்கிரஸ் கட்சி வாய்ப்பு வழங்கிய நிமிடத்தில்தான் ஜனநாயக படுகொலை நிகழ்ந்தது என்று அமித்ஷா கூறியுள்ளார். #Amitsha #KarnatakaCMRace
    புதுடெல்லி:

    கர்நாடகாவில் பா.ஜனதாவை ஆட்சியமைக்குமாறு கவர்னர் அழைப்பு விடுத்ததற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்து உள்ளது. மாநிலத்தில் ஜனநாயக படுகொலை நிகழ்த்தப்பட்டுள்ளதாக அந்த கட்சியும், அதன் தலைவர் ராகுல் காந்தியும் கூறியுள்ளனர். இதற்கு பா.ஜனதா தலைவர் அமித்ஷா நேற்று பதிலடி கொடுத்தார்.



    இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில் கூறுகையில், ‘கர்நாடகாவில் பா.ஜனதா 104 இடங்களை பெற்று இருக்கிறது. ஆனால் காங்கிரஸ் கட்சிக்கோ 78 இடங்களே கிடைத்துள்ளன. எனவே அங்கு பா.ஜனதா ஆட்சியமைக்கவே மக்கள் வாக்களித்துள்ளனர். காங்கிரஸ் முதல்-மந்திரி மற்றும் பல மந்திரிகள் தோல்வியடைந்துள்ளனர். வெறும் 37 இடங்களை பெற்றுள்ள மதசார்பற்ற ஜனதாதளமும், பல இடங்களில் டெபாசிட்டை பறிகொடுத்துள்ளது. இதை புரிந்துகொள்ளும் அளவுக்கு மக்கள் புத்திசாலிகள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

    மாநில வளர்ச்சியை கவனத்தில் கொள்ளாமல் வெறும் அற்ப அரசியல் லாபத்துக்காக, கர்நாடகத்தில் ஆட்சியமைக்க மதசார்பற்ற ஜனதாதளத்துக்கு காங்கிரஸ் கட்சி வாய்ப்பு வழங்கிய நிமிடத்தில்தான் ஜனநாயக படுகொலை நிகழ்ந்தது என்று கூறியுள்ள அமித்ஷா, இது அவமானகரமானது என்றும் தெரிவித்துள்ளார்.

    இதைப்போல காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில்தான் நாட்டில் அவசர நிலை கொண்டுவரப்பட்டதாகவும், காங்கிரஸ் கட்சிதான் அரசியல் சட்டத்தின் 356-வது பிரிவை தவறாக பயன்படுத்தியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.  #Amitsha #KarnatakaCMRace
    ×