search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "karparatchambigai temple"

    பாபநாசம் வட்டம், திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை அம்மன் கோவிலில் வைகாசி விசாக பெருவிழா விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது.
    பாபநாசம் வட்டம், திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை அம்மன் கோவிலில் வைகாசி விசாக பெருவிழா நேற்று காலை விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. விழாவையொட்டி நேற்று காலை விக்னேஸ்வர பூஜையும், கணபதி ஹோமமும் நடைபெற்றது. இன்று(வெள்ளிக்கிழமை) காலை 8 மணிக்கு நவக்கிரக ஹோமம், மாலை 6 மணிக்கு வாஸ்து சாந்தி நடக்கிறது.

    நாளை(சனிக்கிழமை) காலை 6.40 மணிக்கு மேல் கொடியேற்றமும், மாலை ஆன்மிக சொற்பொழிவும், மகாலட்சுமி குழுவினர் பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடக்கிறது. 20-ந்தேதி இரவு 7 மணிக்கு காந்திமதியின் இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது. வருகிற 23-ந்தேதி பச்சைக்காளி, பவளக்காளியுடன் சிவன், சக்தி மற்றும் காவடி கரகாட்ட நிகழ்ச்சி நடக்கிறது. 25-ந்தேதி இரவு 7.30 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், 27-ந்தேதி காலை 10.30 மணிக்கு மேல் தேரோட்டமும், 28-ந்தேதி பஞ்ச மூர்த்திகள் தீர்த்தவாரியும் நடக்கிறது.

    29-ந்தேதி மாலை அம்மன் விடையாற்றி விழா உற்சவமும், 30-ந்தேதி மாலை 6 மணிக்கு சண்டிகேஸ்வரர் விடையாற்றி விழா உற்சவமும் நடைபெறுகிறது. விழா நாட்களில் தினமும் பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலா நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல்அலுவலர் முரளிதரன், தக்கார் கிருஷ்ணன் ஆகியோர் மேற்பார்வையில் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர். 
    ×