search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Karthi 18"

    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் கார்த்தி முதல் முறையாக ஜோடி இல்லாமல் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். #Karthi18 #Karthi
    கார்த்தி நடிக்கும் 18-வது புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று ஆரம்பரமானது. பெயரிடப்படாத இப்படத்திற்கு தற்காலிகமாக ‘கார்த்தி 18’ என்று பெயரிடப்பட்டுள்ளனர். ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘கடைக்குட்டி சிங்கம்’ என அடுத்தடுத்து மாபெரும் வெற்றிப்படங்களைக் கொடுத்து வரும் கார்த்தியுடன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இணைந்திருக்கிறார்.

    சிறந்த திரைக்கதை, சிறந்த இயக்கம் என ‘மாநகரம்’ படம் மூலம் அனைவராலும் பாராட்டுப்பெற்ற லோகேஷ் கனகராஜ் இயக்கும் இரண்டாவது படம் இது. கதாநாயகி இல்லாத இப்படத்தில் நரேன் (அஞ்சாதே), ரமணா, ஜார்ஜ் மரியான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களாக நடிக்க, மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது.

    முழுக்க முழுக்க ஆக்‌ஷன் திரில்லர் படமாக மிகவும் பிரம்மாண்டமாக உருவாக இருக்கிறது. சாம்.சி.எஸ். இப்படத்திற்கு இசையமைக்கிறார். சென்னை மற்றும் திருநெல்வேலியில் இப்படம் உருவாகிறது. இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் மற்றும் விவேகானந்தா பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறார்கள்.



    கார்த்தியின் நடிப்பில் உருவாகியுள்ள ‘தேவ்’ படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
    மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக இயக்கும் படத்தில் கார்த்தி நாயகனாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. #Karthi #LokeshKanagaraj
    கடந்த ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘மாநகரம்’. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்தப் படத்தில், சந்தீப் கி‌ஷன், ஸ்ரீ, ரெஜினா, சார்லி ஆகியோர் நடித்தனர். ஆக்‌‌ஷன் திரில்லர் படமான இதற்கு, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.

    கடந்த ஆண்டு வெளியான தமிழ்ப் படங்களில், முக்கியமான படமாகவும் அமைந்தது. ‘மாநகரம்’ படத்தைத் தொடர்ந்து தன்னுடைய இரண்டாவது படத்தின் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார் லோகேஷ் கனகராஜ். அந்த படத்தில் கார்த்தி ஹீரோவாக நடிக்கலாம் என்று கூறப்படுகிறது. விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கார்த்தி தற்போது தேவ் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி கடைசி வாரத்தில் ரிலீசாக இருக்கிறது. #Karthi #LokeshKanagaraj

    ×