search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "karur collector marriage day"

    பிறந்த நாள், திருமண நாள் உள்ளிட்ட விழாக்காலங்களில் ஒவ்வொருவரும் மரக்கன்றுகளை நட்டு பயிரிட வேண்டும் என்று கரூர் கலெக்டர் அன்பழகன் பேசினார்.

    கரூர்:

    கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கலெக்டர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலெக்டர் தெரிவித்ததாவது:-

    வருடத்திற்கு ஒரு முறை அந்தந்த வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நடைபெற்று வருகிறது. ஜமாபந்தி பொதுமக்களின் நில உடைமைகளை உறுதி செய்வதற்காகவும், வேளாண் விளை நிலம் வரி கணக்குகள் சரிபார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றன. அந்தந்த கிராமங்களின் வருவாய் கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டு பட்டா மாறுதல்கள் செய்யப்பட்டிருக்கும் நபர்களின் பெயர்கள் பதிவெடுகளில் உள்ளனவா? என்பதையும், பயிர் கணக்குகள் உள்ளிட்டவைகள் ஆய்வு செய்யப்படுகின்றன. மேலும், கூட்டு பட்டாவில் உள்ளவர்கள் தனிப் பட்டாவாக மாற்றிக் கொள்ளவும் உதவுகின்றது. பிறந்த நாள், திருமண நாள் உள்ளிட்ட விழாக்காலங்களில் ஒவ்வொருவரும் மரக்கன்றுகளை நட்டு பயிரிட வேண்டும். மேலும் நம் மாவட்டத்தில் விதைபந்து திட்டத்தின் கீழ் மாணவ, மாணவிகளை கொண்டு விதைகள் விதைத்திடவும் திட்ட மிடப்பட்டு தேவையான இடங்களில் தடுப்பணைகள் கட்டவும், அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். முருங்கை சாகுபடியை ஊக்குவிக்கும் விதமாக முருங்கையிலிருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் உற்பத்தி செய்து சந்தையிட விவசாயிகளுக்கு உதவப்படும். 

    இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

    ×