search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kashmir militants"

    ஜம்மு-காஷ்மீரில் உள்ள பாரமுல்லா மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 30 வயது நபர் கழுத்து அறுபட்ட நிலையில் இன்று பிரேதமாக மீட்கப்பட்டார். #Manabductedbymilitants #abductedmanfounddead
    ஸ்ரீநகர்:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம், சோபியான் மாவட்டம், துஜ்ஜார் பகுதியை சேர்ந்த வியாபாரி தவ்சீப் அஹ்மத் கானி(30). கடந்த புதன்கிழமை இவர் கடையில் இருந்தபோது பயங்கரவாதிகள் இவரை கடத்திச் சென்றனர். தவ்சீப் அஹ்மத் கானியை கண்டுபிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

    இந்நிலையில், வடக்கு காஷ்மீர் மாவட்டத்தில் உள்ள சேக் ஹர்வான் பகுதியில் ஒரு பழத்தோட்டத்தில் கழுத்து அறுபட்ட நிலையில்  தவ்சீப் அஹ்மத் கானியின் பிரேதத்தை போலீசார் இன்று கண்டெடுத்துள்ளனர்.

    அவரை கடத்திச் சென்ற விதம், கொல்லப்பட்ட முறையை பார்க்கும்போது இது லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகளின் வெறிச்செயலாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக போலீசார் குறிப்பிட்டுள்ளனர். #JKManabducted #Manabductedbymilitants #abductedmanfounddead
    காஷ்மீரில் பயங்கரவாதிகள் துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #JammuKashmir

    ஸ்ரீநகர்:

    காஷ்மீர் மாநிலத்தில் நாசவேலையில் ஈடுபடும் பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் வேட்டையாடி வருகிறார்கள்.

    இதனால் ஆத்திரம் அடைந்த பயங்கரவாதிகள் சமீபத்தில் போலீஸ் நிலையத்தை குண்டு வீசி தாக்கினார்கள். துப்பாக்கியாலும் சுட்டனர். இதில் ஒரு போலீஸ்காரர் பலியானார்.

    இந்த நிலையில் ஸ்ரீநகரின் மையப் பகுதியான கர்பாலி மொகல்லா என்ற இடத்தில் பயங்கரவாதிகள் நுழைந்து துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர்.

    இதில் 2 பேர் குண்டு பாய்ந்து பலியானார்கள். அவர்கள் இருவரும் தேசிய மாநாட்டு கட்சி தொண்டர்கள் என தெரிய வந்தது.

    அரசியல் காரணங்களுக்காக அவர்களை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர். பயங்கரவாதிகளை போலீசார் தேடி வருகிறார்கள். #JammuKashmir

    காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் சிறப்பு போலீஸ் அதிகாரியை பயங்கரவாதிகள் கடத்திச் சென்று விட்டனர். #Policeofficerkidnapping

    ஸ்ரீநகர்:

    காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் ட்ரால் பகுதியில் செய்னாத்தர் கிராமத்தை சேர்ந்தவர் முடாசீர் அகமது. இவர் சிறப்பு போலீஸ் அதிகாரி ஆக பணியாற்றுகிறார். நேற்று இரவு வீட்டில் தனியாக இருந்த அவரை பயங்கரவாதிகள் கடத்திச் சென்று விட்டனர்.

    அவரை மீட்கும் நடவடிக்கையில் போலீசார் தீவிரமாக உள்ளனர்.

    காஷ்மீரில் ஹிட்-லிஸ்ட் பட்டியலில் 21 பயங்கரவாதிகளின் பெயர் பட்டியலை நேற்று பாதுகாப்பு படையினர் வெளியிட்டனர். #JammuandKashmir

    புதுடெல்லி:

    பாகிஸ்தான் ஆதரவுடன் காஷ்மீர் மாநிலத்தில் அட்டகாசம் செய்து வரும் பயங்கரவாதிகளை கூண்டோடு ஒழித்துக் கட்ட மத்திய அரசு அதிரடி திட்டங்களை வகுத்துள்ளது.

    இந்த திட்டத்தை அமல் படுத்த முதல்-மந்திரியாக இருந்த மெகபூபாவும் சில கட்சி தலைவர்களும் தடையாக இருந்தனர். தற்போது காஷ்மீரில் கவர்னர் ஆட்சி கொண்டு வரப்பட்டுள்ளதால் பாதுகாப்பு படையினரின் திட்டம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.

    காஷ்மீரில் வருகிற 28-ந் தேதி அமர்நாத் யாத்திரை தொடங்க உள்ள நிலையில்
    ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஒரு பிரிவினர் அந்த யாத்திரையை சீர்குலைக்க சதி திட்டம் தீட்டி இருப்பதாக உளவுத்துறை மூலம் பாதுகாப்பு படையினருக்கு தெரிய வந்தது. அனந்த்நாக் மாவட்டத்தில் அந்த பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதை அறிந்து பாதுகாப்பு படையினர் நேற்று அங்கு சென்று அவர்களை வேட்டையாடினார்கள்.

    அதில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் காஷ்மீர் மாநில தலைவனாக இருந்த தாவூத் அகமது சலாபி மற்றும் அவனது 3 கூட்டாளிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இது காஷ்மீரில் பதுங்கியுள்ள மற்ற பயங்கரவாதிகளிடம் அதிர்ச்சியையும், பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    இந்த நிலையில் காஷ்மீரில் சுட்டுக் கொல்லப்பட வேண்டிய 21 முக்கிய பயங்கரவாதிகளின் பெயர் பட்டியலை நேற்று பாதுகாப்பு படையினர் வெளியிட்டனர். அந்த 21 பேரில் 11 பேர் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதிகள் ஆவார்கள். 7 பேர் லஸ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் ஆவார்கள்.

    2 பேர் ஜெய்ஷ்-இ- முகம்மது என்ற பயங்கரவாத அமைப்பையும் ஒருவன் அன்சர் கஸ்வத்-உல்-ஹிந்த் எனும் பயங்கரவாத அமைப்பையும் சேர்ந்தவர்கள். இவர்களில் 6 பயங்கரவாதிகள் மிக, மிக தேடப்படும் பயங்கரவாதி பட்டியலில் உள்ளனர். இந்த 21 பயங்கரவாதிகளும் உடனடியாக அழிக்கப்பட வேண்டியவர்கள் என்று பாதுகாப்பு படை உயர் அதிகாரி கூறியுள்ளார்.

    அந்த அதிகாரி மேலும் கூறுகையில், ‘‘ஹிட்-லிஸ்ட் பட்டியலில் உள்ள 21 பயங்கரவாதிகளையும் அழித்து விட்டாலே போதும், காஷ்மீரில் மீண்டும் அமைதி திரும்பி விடும். அதோடு அந்த அமைப்புகளின் செயல்பாடுகளையும் முடக்க முடியும்’’ என்றார்.

    அழிக்கப்பட வேண்டிய 21 பயங்கரவாதிகளில் தெற்கு காஷ்மீர் பகுதியைச் சேர்ந்த அல்தாப் அகமது தர், கோபியன் பகுதியைச் சேர்ந்த ஜீனத்-உல்-இஸ்லாம், பாகிஸ்தானில் இருந்து வந்து பாரமுல்லா மாவட்டத்தில் பதுங்கி இருக்கும் அபு ஆகிய 3 பயங்கரவாதிகளும் மிக, மிக முக்கியமானவர்களாக கருதப்படுகிறது. வெடிகுண்டுகள் தயாரித்து வழங்க பயிற்சி பெற்ற இவர்கள் காஷ்மீரில் அப்பாவி இளைஞர்களை ஆயுதம் ஏந்த தூண்டி வருகிறார்கள்.

    சுட்டுக் கொல்லப்பட இருக்கும் இந்த 21 பயங்கரவாதிகளில் 3 பேர் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள். இவர்களது தலைக்கு ரூ.12 லட்சம் பரிசு தரப்போவதாக பாதுகாப்பு படையினர் அறிவித்துள்ளனர்.

    21 பயங்கரவாதிகளை வேட்டையாடவே கமாண்டோ படையினர் காஷ்மீரில் களம் இறக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தங்கள் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர். #JammuandKashmir

    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் ரோந்து சென்ற 2 போலீசார் மற்றும் பொதுமக்களில் ஒருவரும் படுகாயம் அடைந்தனர். #JammuKashmir #MilitantsAttack
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள காகா சராய் பகுதியில் மாநில போலீசாருடன் பாதுகாப்பு படையினர் ரோந்து சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர்.

    இந்த தாக்குதல் 2 போலீசாரும், பொதுமக்களில் ஒருவரும் படுகாயம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து, பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தினர்.

    காயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். இதையடுத்து, அந்த பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். #JammuKashmir #MilitantsAttack
    ×