search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Katrina Kaif"

    தடகள போட்டிகளில் பல்வேறு சாதனைகளை படைத்த பிடி.உஷாவின் வாழ்க்கையை திரைப்படமாக உருவாக்கும் பணிகளில் இயக்குநர் ரேவதி வர்மா ஈடுபட்டுள்ள நிலையில், அதில் கத்ரீனா கைப் நடிக்கவிருக்கிறார். #PTUsha
    தடகள போட்டிகளில் பல்வேறு சாதனைகளை படைத்தவர் பிடி.உஷா. கேரளாவில் கோழிக்கோடு மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட இவர் இந்திய விளையாட்டு வரலாற்றில் தவிர்க்க முடியாத வீராங்கனை. தேசிய மற்றும் சர்வதேசப் போட்டிகளில் இதுவரை 103 பதக்கங்களைக் குவித்துள்ளார்.

    இயக்குனர் ரேவதி வர்மா பி.டி.உஷாவின் வாழ்க்கை வரலாற்று படத்தை இயக்கப்போவதாக அறிவித்து இருந்தார்.

    அந்த பயோப்பிக்கில் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. பிரியங்கா ஏற்கெனவே குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோமின் பயோபிக் படத்தில் நடித்தார். தற்போது பி.டி.உஷா பயோபிக்கில் கத்ரீனா கைப் நடிக்கவிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.



    மலையாளம் மற்றும் தமிழ் படங்களை இயக்கும் ரேவதி வர்மா சமீபத்தில் மும்பைக்கு சென்று இருக்கிறார். கத்ரீனா கயூபிடம் பி.டி.உஷா பயோபிக்கின் கதையை கூறி இருக்கிறார். கத்ரீனாவுக்கும் கதை பிடித்துவிட்டது. இது பற்றிய அதிகாரபூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.

    கத்ரீனா தற்போது சூர்யவன்ஷி படத்தில் நடித்து வருவதால் அதன் படப்பிடிப்பு முடிந்ததும் பி.டி.உஷா பயோபிக்கில் அவர் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கத்ரீனா நடிக்கும் முதல் பயோபிக் இது என்பது குறிப்பிடத்தக்கது. #PTUsha #KatrinaKaif

    பிரபல நடிகர்களான பிரபுதேவா, அக்‌ஷய் குமார், சல்மான் கான், சோனாக்சி சின்ஹா, கத்ரினா கைப் உள்ளிட்டோர் மீது தனியார் நிறுவனம் வழக்கு பதிந்துள்ளது.
    நடிகர்கள் சல்மான்கான், அக்‌ஷய்குமார், ரன்வீர்சிங், நடிகைகள் சோனாக்சி சின்ஹா, கத்ரினா கைப் ஆகியோர் கலை நிகழ்ச்சி நடத்த பணம் வாங்கிக் கொண்டு ஏமாற்றியதாக அமெரிக்காவில் உள்ள சிக்காகோ நகர கோர்ட்டில் தனியார் நிறுவனம் ஒன்று நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளது. அந்த நிறுவனம் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    “அமெரிக்காவில் 100 ஆண்டு இந்திய சினிமாவை கொண்டாடும் வகையில் 2013-ம் ஆண்டு செப்டம்பர் 1-ந் தேதி கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்தோம். அதில் கலந்துகொண்டு நடனம் உள்ளிட்ட பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடத்த சல்மான்கான், பிரபுதேவா, அக்‌ஷய்குமார், ரன்வீர் சிங், நடிகைகள் சோனாக்சி சின்ஹா, கத்ரினாகைப் ஆகியோரை அழைத்து இருந்தோம்.

    இதற்காக சல்மான்கானுக்கு 2 லட்சம் அமெரிக்க டாலர் முன்பணமாக வழங்கப்பட்டது. கத்ரினா கைப்புக்கு 40 ஆயிரம் அமெரிக்க டாலரும், சோனாக்சி சின்ஹாவுக்கு 36 ஆயிரம் அமெரிக்க டாலரும் கொடுத்தோம். மற்றவர்களுக்கும் பணம் கொடுக்கப்பட்டது. ஆனால் அப்போது சல்மான்கான் ஒரு வழக்கு காரணமாக அமெரிக்கா வர இயலாது என்று கூறியதால் நிகழ்ச்சியை இன்னொரு நாளில் நடத்த தள்ளி வைத்தோம்.



    இதுவரை நிகழ்ச்சியை நடத்தி கொடுக்க அவர்கள் முன்வரவில்லை. அட்வான்ஸ் தொகையை திருப்பி வாங்குவதற்காக பல தடவை தொடர்பு கொண்டும் அவர்களோடு பேசமுடியவில்லை. இன்னொரு கலை நிகழ்ச்சிக்காக அந்த நடிகர்-நடிகைகள், அமெரிக்கா வர இருப்பதாக கேள்விப்பட்டோம். எங்களை ஏமாற்றியதால் அவர்கள் 10 லட்சம் அமெரிக்க டாலர்கள் நஷ்ட ஈடாக தர வேண்டும்”.

    இவ்வாறு மனுவில் குறிப்படப்பட்டு உள்ளது. இந்த வழக்கு இந்தி பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
    ×