என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Keerthy Chakra"
- ஜனாதிபதி திரௌபதி முர்மு வீரமரணமடைந்த அனுஷ்மான் சிங்கின் மனைவி ஸ்மிரிதி சிங்கிடம் கீர்த்தி சக்கராவை ஒப்படைத்தார்.
- ரேஷ்மா செபாஸ்டின் என்பவரது முக அமைப்பு மற்றும் ஹேர் ஸ்டைல் ஸ்மிரிதியைப் போல் உள்ளதால்
இந்திய ராணுவத்தில் கேப்டனாக பணியாற்றி வந்தவர் அனுஷ்மான் சிங். கடந்த வருடம் ஜூலை மாதம் சியாச்சனில் சார்ட் சர்கியூட்டால் ராணுவ முகாமில் ஏற்பட்ட தீ விபத்தில் சக ராணுவ வீரர்களையும் உயிர்காக்கும் மருந்துகளையும் மீட்கும் போராட்டத்தில் அனுஷ்மான் சிங் உயிரிழந்தார்.உயிரிழப்பதற்கு சில மாதங்களுக்கு முன்புதான் காதலி ஸ்மிரிதி சிங்குடன் அவருக்கு திருமணம் நடந்தது.
கடந்த ஜூலை 5 ஆம் தேதி ஜனாதிபதி திரௌபதி முர்மு வீரமரணமடைந்த அனுஷ்மான் சிங்கின் மனைவி ஸ்மிரிதி சிங்கிடம் கீர்த்தி சக்கராவை ஒப்படைத்தார். அதன்பின் ஸ்மிரிதி சிங் தங்களது வீட்டை விட்டு வெளியேறிவிட்டதாகவும், ராணுவத்தில் இருந்து வரும் எந்த பலன்களும் தங்களுக்கு கிடைக்கவில்லை என்றும் அனுஷ்மான் சிங்கின் பெற்றோர்கள் குற்றம்சாட்டியிருந்தனர். இந்நிலையில் ஸ்மிரிதி சிங்கை சுற்றி மற்றொரு சர்ச்சையும் ஏற்பட்டுள்ளது.
அதாவது, தற்போது ஜெர்மனியில் வசித்து வரும் கேரளாவைச் சேர்ந்த பிரபல இன்ஸ்ட்டாகிராம் பேஷன் இன்புளுயென்சர் ரேஷ்மா செபாஸ்டின் என்பவரது முக அமைப்பு மற்றும் ஹேர் ஸ்டைல் ஸ்மிரிதியைப் போல் உள்ளதால், ஸ்மிரிதி பேஷன் வீடியோக்களை எடுத்து வெளியிட்டு வருகிறார் என்று சில நெட்டிஸின்கள் பேஸ்புக் உள்ளிட்ட வெவ்வேறு சமூக வலைதளங்களில் மோசமான கமெண்ட்களை செய்து வந்த்துள்ளனர்.
எனவே இந்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பேஷன் இன்புளுயென்சர் ரேஷ்மா செபாஸ்டின், 'இது மிகவும் அபத்தமாக உள்ளது. எனது அடையாளத்தை பயன்படுத்தி ஸ்மிரிதி சிங் குறித்த தவறான தகவல்கள் பரப்பப்படுகிறது.எதற்கும் ஒரு எல்லை இருக்கிறது. இந்த வீடியோக்களில் உள்ளது ஸ்மிரிதி சிங் அல்ல. வீடியோவைப் பார்ப்பதற்கு முன் முதலில் மேலே உள்ள ப்ரொபைல் பாயோவை பார்த்துவிட்டு பின் கமெண்ட் செய்யுங்கள். தயவு செய்து பொய் செய்திகளையும், வெறுப்பையும் பரப்பாதீர்கள்' என்று தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் தெரிவித்துள்ளார். ரேஷ்மா செபாஸ்டினுக்கு இன்ஸ்ட்டாகிராமில் 3 லட்சத்துக்கும் மேல் ஃபாலோவர்ஸ் இருப்பது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்