search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kerala Church priest"

    கேரளாவில் பாவமன்னிப்பு கேட்ட பெண்ணை மிரட்டி கற்பழித்த பாதிரியார் முன்ஜாமீன் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் பத்தனம் திட்டா பகுதியை சேர்ந்த ஒரு பெண் பாதிரியாரால் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இந்த நிலையில் அந்த பெண்ணுக்கு திருமணமும் நடந்தது.

    அந்த பெண்ணின் திருமணத்திற்கு முன்பு இந்த பாலியல் பலாத்காரம் நடந்ததால் அந்த பெண் அது பற்றி தனது கணவரிடம் கூறவில்லை. இதனால் அவர் அந்த பகுதியில் உள்ள ஒரு ஆலயத்திற்கு சென்று நடந்த விவரங்களை ஒரு பாதிரியாரிடம் கூறி தனக்கு பாவமன்னிப்பு வழங்கும்படி கேட்டார்.

    ஆனால் பாதிரியார் அந்த பெண்ணை மிரட்டி கற்பழித்து அதை வீடியோவாக தனது செல்போனில் பதிவு செய்து கொண்டார். இதை தனது நண்பர்களான மேலும் 3 பாதிரியார்களுடன் அவர் பகிர்ந்துகொண்டார். அந்த செல்போன் காட்சியை வைத்து மற்ற 3 பாதிரியார்களும் அந்த பெண்ணை கற்பழித்துவிட்டனர்.

    தனது மனைவியை பாதிரியார்கள் 4 பேர் கற்பழித்தது பற்றி தெரியவந்ததும் அதிர்ச்சி அடைந்த அந்த பெண்ணின் கணவர் அதுபற்றி உருக்கமாக வாட்ஸ்-அப்பில் தகவல் வெளிட்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து பாதிரியார்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழ்நிலை உருவானது.

    பாதிரியார்கள் ஜோப் மேத்யூ, ஜெய்ஸ்கே.ஜார்ஜ், ஆபிரகாம் வர்க்கீஸ், ஜாண்சன் வி.மேத்யூ ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. முதலில் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்த இந்த பாதிரியார்கள் போலீசாரின் நடவடிக்கை தீவிரமானதால் முன்ஜாமீன் கேட்டு கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். ஆனால் அவர்களது மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இதைதொடர்ந்து பாதிரியார் ஜோப்மேத்யூ போலீசில் சரணடைந்தார்.

    இந்த நிலையில் பாதிரியார் ஜாண்சன் வி.மேத்யூ கோழஞ்சேரி பகுதியில் ஒரு வீட்டில் பதுங்கி இருக்கும் தகவல் கிடைத்து அங்கு சென்ற போலீசார் அவரை கைது செய்தனர். கைதான 2 பாதிரியார்களும் தற்போது ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இந்த வழக்கில் ஜெய்ஸ்கே.ஜார்ஜ், ஆபிரகாம் வர்க்கீஸ் ஆகிய 2 பாதிரியார்களும் தொடர்ந்து தலைமறைவாக உள்ளனர். அவர்களை கைது செய்ய தனிப்படை போலீசார் தீவிர நடவடிக்கையில் இறங்கி உள்ளனர்.

    இந்த நிலையில் பாதிரியார் ஆபிரகாம் வர்க்கீஸ் தனக்கு முன்ஜாமீன் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். அவரது மனு மீதான விசாரணை விரைவில் நடைபெற உள்ளது. சுப்ரீம் கோர்ட்டில் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டால் அவரும் போலீசாரால் கைது செய்யப்படுவார்.

    இன்னொரு பாதிரியாரான ஜெய்ஸ்கே.ஜார்ஜ் தொடர்ந்து தலைமறைவாக உள்ளார். அவரையும் கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
    ×