search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kerala IG Sreejith"

    சபரிமலையில் ஐயப்ப பக்தர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், போலீசார் கடுமையான நடவடிக்கை எடுத்து பிரச்சினை ஏற்படுத்த மாட்டார்கள் என ஐஜி தெரிவித்தார். #Sabarimala #SabarimalaProtests #KeralaIG
    பத்தனம்திட்டா:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு கேரள மாநிலத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. தீர்ப்பைக் கண்டித்து தொடர் போராட்டங்கள் நடத்தி வந்த நிலையில், ஐப்பசி மாத பூஜைக்காக கோவில் நடை திறக்கப்பட்டதும் போராட்டம் வலுவடைந்தது.  தீர்ப்பை சுட்டிக்காட்டி சபரிமலைக்கு வந்த பெண்களை போராட்டக்குழுவினர் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.

    இந்நிலையில் கோவிலுக்குள் எப்படியும் நுழைந்தே தீர வேண்டும் என்ற எண்ணத்துடன் இன்று புறப்பட்ட பெண் பத்திரிகையாளர் கவிதா உள்ளிட்ட இரண்டு பெண்கள் பலத்த பாதுகாப்புடன் இன்று சன்னிதானத்தை நெருங்கினர். ஆனால், பக்தர்களின் எதிர்ப்பு காரணமாக அவர்களை திருப்பி அனுப்பும்படி கேரள அரசு உத்தரவிட்டது. பெண் பக்தர்களுக்கு பாதுகாப்பு தரலாம், ஆனால் பெண்ணியவாதிக்கு பாதுகாப்பு தர முடியாது என அரசு தெரிவித்துள்ளது.



    போராட்டம் நடத்திய பக்தர்களுடன் ஐஜி ஸ்ரீஜித், பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் அவர் கூறுகையில், சபரிமலையில் காவல்துறையினர் பிரச்சினையை ஏற்படுத்த மாட்டார்கள் என்று தெரிவித்தார்.

    ‘பக்தர்களுடனான மோதல் எங்களுக்குத் தேவையில்லை. உச்ச நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்துவது தான் எங்கள் கடமை. அரசின் முடிவுக்காக காத்திருக்கிறோம்’ என்றார் ஐஜி. #Sabarimala #SabarimalaProtests #KeralaIG
    ×