search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kidnapping arrest"

    • திண்டிவனம் டாஸ்மாக் கடைகளுக்கு புதுவை மதுபானம் சப்ளை செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • விசாரணையில் புதுவைவி லிருந்து மதுபானங்களை கடத்தி திண்டிவனம் பகுதியில் விற்பனை செய்தது தெரிய வந்தது.

    விழுப்புரம்:

    லையத்துக்கு உட்பட்ட பல்வேறு மதுபான பார்களில் தொடர்ந்து கள்ளத்தனமாக.போலி மற்றும் புதுவை மது பாட்டில்கள் விற்கப்பட்டு வருகிறதாக திண்டிவனம் ஏஎஸ்பி அபிஷேக் குப்தாவிற்கு ரகசிய தகவல் வந்தது.

    இதையடுத்து பல்வேறு முறை சோதனை செய்யும் செல்லும்போது அங்கிருந்த வர்கள் சில போலீசாரால் தப்பித்து விடுவதாக தனிப்ப டைபோலீசாருக்கு தகவல் வந்தது

    இதையடுத்து தனிப்படை போலீசார் திண்டிவனம் பகுதியில் கூலித் தொழி லாளர்கள் போல பார்களில் இன்று காலை தனிப்படை போலீசார் சென்றனர்

    அப்பொழுது கூலித் தொழிலாளர் போல் வந்தது போலிஸ் என தெரியாமல் அரசு பார்களில் புதுவை மதுபானம் விற்பனை செய்த திண்டிவனம் சலவாதி பகுதியை சேர்ந்த அன்பு 35, பிரகாஷ் 23,திண்டிவனம் ரொட்டிக்கர தெரு பகுதியை சேர்ந்த குமார் 46, ஆகியோரை கைதுசெய்தனர்.

    விசாரணையில் புதுவைவி லிருந்து மதுபானங்களை கடத்தி திண்டிவனம் பகுதியில் விற்பனை செய்தது தெரிய வந்தது. அவரிடம் இருந்த 30,ஆயிரம் ரூபாய் பணம்,30 புதுவை மது பாட்டி ல்கள் பறிமுதல் செய்து அவர்க ளை நீதிமன்றத்தில் ஆச்சரியப்ப டுத்தி சிறையில் அடைத்தனர்.

    கம்பம் அருகே மின்சாரம் தாக்கி உயிரிழந்த யானையின் தந்தத்தை வெட்டி திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் கம்பம் பகுதியிலிருந்து கேரளாவிற்கு யானை தந்தங்கள் கடத்தப்படுவதாக வனத்துறையினருக்கு தகவல் வந்தது. தமிழக தென்மண்டல முதன்மை வன பாதுகாவலர் தொபாசிஜானா, மேகமலை வனஉயிரினகாப்பாளர் கலாநிதி ஆகியோர் கேரளாவிற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    அப்போது பெரியார் புலிகள் காப்பகத்தை சேர்ந்த வனத்துறையினர் யானை தந்தங்களை விற்பனை செய்ததாக 2 பேரை கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் குள்ளப்பகவுண்டன்பட்டியை சேர்ந்த கங்கா, பிரபு என தெரியவந்தது.

    சுருளிஆறு, மின்நிலையம் அருகே வண்ணாத்திபாறை, காப்புக்காடு, உடுப்பிஆறு வனப்பகுதியில் இறந்துகிடந்த யானையின் தந்தங்களை வெட்டி எடுத்து வந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    அவர்கள் 2 பேரையும் கைது செய்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தனர். அப்போது அங்கு 25 வயது மதிக்கத்தக்க ஆண்யானை உயரழுத்த மின்கம்பியில் சிக்கி மின்சாரம் பாய்ந்து இறந்து கிடந்ததும் அவற்றின் தந்தங்கள் வெட்டி கடத்தப்பட்டதும் தெரியவந்தது.

    யானை இறந்து 5 நாட்களுக்கு மேல் இருக்கலாம். உடலை பிரேத பரிசோதனை செய்து வனப்பகுதியில் புதைத்தனர். தொடர்ந்து இப்பகுதியில் யானைகள் மின்சாரம் தாக்கி பலியாவது வனஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    மேலும் கங்கா, பிரபு ஆகியோர் யானை தந்தத்தை எங்கு கடத்த முயன்றனர் என்பது குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×