என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "killing"
- உயிரிழந்த மாவோயிஸ்டுகளின் உடல்கள் கைப்பற்றப்பட்டு அவர்களிடம் இருந்த ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
- சமீப காலமாக சத்தீஸ்கரில் நடந்து வரும் ஆன்டி மாவோயிஸ்ட் ஆபரேஷனில் இதுவரை ஏராளமான மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினரால் 7 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொள்ளப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாராயன்பூர்- தண்டேவாடா- கொண்டாகவுன் ஆகிய பகுதிகள் சந்திக்கும் எல்லையில் மாவோயிஸ்ட்டுகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் நேற்று ஜூன் 7 ஆம் தேதி இரவு நடந்த மோதலில் இந்த என்கவுண்டர் நிகழ்ந்துள்ளது.
இந்த மோதலில் பாதுகாப்புப் படையினர் மூவர் காயமடைந்துள்ள நிலையில் அவர்கள் கிழக்கு பஸ்தர் பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்த மாவோயிஸ்டுகளின் உடல்கள் கைப்பற்றப்பட்டு அவர்களிடம் இருந்த ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
நெடுங்காலமாக சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம் நிலவி வருவது மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு தலைவலியாக இருந்து வருகிறது. அடர் கானகத்துக்குள் இவர்கள் இருப்பு கொண்டுள்ளதால் அவர்களை தேடுவதில் நடைமுறை சிக்கல்கள் உள்ளது.
இதற்கிடையில் அவ்வப்போது மாவோயிஸ்டுகளுக்கும் பாதுகாப்பு படைக்கும் இடையில் நடக்கும் மோதலில் உயிரிழப்புகள் ஏற்படுவது தவிர்க்கமுடியாததாக உள்ளது. சமீப காலமாக சத்தீஸ்கரில் நடந்து வரும் ஆன்டி மாவோயிஸ்ட் ஆபரேஷனில் இதுவரை ஏராளமான மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
- என்.ஆர்.காங்கிரஸ் பா.ஜனதா கூட்டணி ஆட்சி வந்த பிறகு போதைப் பொருட்களான கஞ்சா, அபின், போதை ஸ்டாம்ப் தாராளமாக விற்கப்படுகிறது.
- குழந்தை உயிரிழப்பானது மிகப்பெரிய அளவில் இந்தியா முழுவதும் மக்கள் மத்தியில் பேசப்படுகிறது.
புதுச்சேரி:
புதுவை மாநில மகிளா காங்கிரஸ் சார்பில் சிறுமி படுகொலை சம்பவத்தை கண்டித்தும், அதற்கு பொறுப்பேற்று முதல்- அமைச்சர் ரங்கசாமி ராஜினாமா செய்ய வலியுறுத்தி புதுச்சேரி அண்ணாசாலை ஒதியஞ்சாலை போலீஸ் நிலையம் அருகே உண்ணாவிரதம் நடந்தது.
100-க்கும் மேற்பட்ட பெண்கள் வாயில் கருப்பு துணி கட்டி பங்கேற்றனர்.
உண்ணாவிரதத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-
புதுச்சேரியில் நடந்த கொடூர சம்பவம் பெண்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா கூட்டணி பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறோம். என்.ஆர்.காங்கிரஸ் பா.ஜனதா கூட்டணி ஆட்சி வந்த பிறகு போதைப் பொருட்களான கஞ்சா, அபின், போதை ஸ்டாம்ப் தாராளமாக விற்கப்படுகிறது. கல்லூரி, பள்ளி, பல்கலைக்கழகம் முன்பாகவும் விற்கப்படுகிறது.
புதுவை கஞ்சா நகரமாகிவிட்டது. மக்கள் வசிக்கும் பகுதியில் ரெஸ்டோபார்கள் திறக்கப்படுவதால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
முதல்- அமைச்சரும், உள்துறை அமைச்சரும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் செய்யவில்லை. அதைத் தொடர்ந்தே இச்சம்பவம் நடந்துள்ளது. குழந்தை உயிரிழப்பானது மிகப்பெரிய அளவில் இந்தியா முழுவதும் மக்கள் மத்தியில் பேசப்படுகிறது.
குழந்தைகளை பள்ளி, கல்லூரிக்கு எப்படி அனுப்புவது? யார் பாதுகாப்பு என பெற்றோர்கள் பயத்தில் உள்ளனர்.
பெண் குழந்தைகளை பாதுகாப்போம் என பிரதமர் மோடி கூறினார். ஆனால் அதுபோல் நடக்கவில்லை. பா.ஜனதா ஆளும் மாநிலங்களிலும் இதேநிலைதான் உள்ளது.
குஜராத்தில் ஏராளமான பெண்கள் காணாமல் போயுள்ளனர். பெண்களை துச்சமாக மதிக்கும் பா.ஜனதா, பெண்களுக்கு பாதுகாப்பு தராத ஆட்சியாளர்கள் பதவி விலக வேண்டும்.
சிறுமி கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றத்தின் பின்னணியில் யார் இருக்கிறார் என தெரியவில்லை.
புதுவை அரசு வழக்கை பூசி மெழுக பார்க்கிறது. அத்துடன் கஞ்சா விநியோகம், எங்கிருந்து வருகிறது. யார் விநியோகம் செய்கிறாகள். எந்த அரசியல்வாதி பின்னணி, பல மாநிலங்களில் சேர்ந்து வருவதால் சி.பி.ஐ. விசாரணை வைத்தால் தான் இவ்வழக்கை முழு ரூபத்தை காணமுடியும். நடவடிக்கை எடுக்க முடியும்.
சிறுபான்மையினரை பாதிக்கும் என்பதால் காங்கிரஸ் கட்சி குடியுரிமை சட்டத்தை எதிர்க்கிறோம். புதுச்சேரியில் அமல்படுத்த முயற்சித்தால் எதிர்ப்போம்.
புதுச்சேரியில் காங்கிரஸ் வேட்பாளரை எதிர்த்து நிற்க யாருமில்லா நிலை பா.ஜனதாவில் உருவாகியுள்ளது. காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாகவுள்ளது. காங்கிரஸ் வேட்பாளரை கட்சித் தலைமை அறிவிக்கும் என்று கூறினார்.
- ஹமாஸ் அமைப்பினர் பதுங்கியுள்ளதாக கூறி அகதிகள் முகாம், பள்ளிகள் மீதும் இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்துகிறது.
- ஆஸ்பத்திரி, மரண மண்டலமாக மாறி வருகிறது என்று உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
காசா:
இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் ஒரு மாதத்துக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது.
ஹமாஸ் அமைப்பு நிர்வகித்து வரும் காசாமுனை பகுதி, இஸ்ரேலின் தாக்குதலில் நிர்மூலமாகி இருக்கிறது.
காசாவில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வான்வழி தாக்குதலில் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகி உள்ளன. மேலும் வடக்கு காசாவுக்குள் இஸ்ரேல் ராணுவம் தரை வழியாக புகுந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
ஹமாஸ் அமைப்பினர் பதுங்கியுள்ளதாக கூறி அகதிகள் முகாம், பள்ளிகள் மீதும் இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்துகிறது.
இந்த நிலையில் இரண்டு பள்ளிகள் மீது குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. ஜபாலியா அகதிகள் முகாமில் ஐ.நா. சபை நடத்தும் அல்-பகுரா பள்ளியில் ஏராளமானோர் தஞ்சம் அடைந்து இருந்தனர். இந்த பள்ளி மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டு வீசின.
இதில் அந்த கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் 50 பேர் பலியானார்கள். ஏராளமானோர் காயம் அடைந்தனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அதே போல் வடக்கு காசாவின் தால்-அல்-ஜாதார் பகுதியில் உள்ள பள்ளி மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இதற்கிடையே பள்ளிகள் மீதான தாக்குதலில் இடிபாடுகளில் பலர் சிக்கியுள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே சில நாட்களுக்கு முன்பு காசாவின் மிகப்பெரிய அகதிகள் முகாமான ஜபா லியா முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 200 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.நா. நடத்தும் பள்ளியின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது போர்க்குற்றம் என்றும் ஐ.நா. சபையை திட்டமிட்டு அவமதிக்கும் செயல் என்றும் எகிப்து கண்டனம் தெரிவித்துள்ளது.
வடக்கு காசாவின் மிகப்பெரிய ஆஸ்பத்திரியான அல்-ஷிபாவுக்குள் இஸ்ரேல் ராணுவம் புகுந்து சோதனை நடத்தியது. ஹமாஸ் அமைப்பினர் பதுங்கி இருந்ததாக கூறி அதிரடி நடவடிக்கை எடுத்தது.
இதற்கிடையே அல்-ஷிபா ஆஸ்பத்திரியில் இருந்து நோயாளிகள், மருந்துவ ஊழியர்களை வெளியேறுமாறு இஸ்ரேல் ராணுவம் உத்தரவிட்டது என்றும் இதனால் ஆஸ்பத்திரியில் இருந்து பலர் வெளியேறி வருவதாகவும் தகவல் வெளியானது.
ஆனால் ஆஸ்பத்திரியில் மக்களை வெளியேற உத்தரவிடவில்லை என்று இஸ்ரேல் தெரிவித்தது. ஆஸ்பத்திரியின் இயக்குனரின் கோரிக்கையை ஏற்று பொதுமக்கள் ஆஸ்பத்திரியில் இருந்து வெளியேற அனுமதித்தாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது. அவர்கள் தாமாக முன்வந்து வெளியேறுகிறார்கள் என்று தெரிவித்து இருக்கிறது.
அல்-ஷிபா ஆஸ்பத்திரியில் மின்சாரம் இல்லை, தண்ணீர் பற்றாக்குறை நிலவுகிறது. நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் திணறி வருகிறார்கள். அந்த ஆஸ்பத்திரி, மரண மண்டலமாக மாறி வருகிறது என்று உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
- நேற்று இரவு விஜயகுமாருக்கும், அவரது மனைவிக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது.
- இந்த சத்தம் கேட்ட சேட்டு, விஜயகுமார் வீட்டிற்கு சென்றுள்ளார். மேலும் எதற்கு இவ்வாறு சண்டை போட்டுக் கொள்கிறீர்கள்? என தட்டிக் கேட்டுள்ளார்.
ராசிபுரம்:
ராசிபுரம் அருகே குடும்ப தகராைற தட்டிக்கேட்ட முதியவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது அண்ணன் மகனை போலீசார் கைது செய்தனர்.
குடும்ப தகராறு
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் டவுன் எல்.ஐ.சி ஆபீஸ் பகுதியை சேர்ந்தவர் சேட்டு (வயது 60). இவரது அண்ணன் மகனான விஜயகுமார் (27), சேட்டுவின் வீட்டிற்கு அருகில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இந்த நிலையில், நேற்று இரவு விஜயகுமாருக்கும், அவரது மனைவிக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இந்த சத்தம் கேட்ட சேட்டு, விஜயகுமார் வீட்டிற்கு சென்றுள்ளார். மேலும் எதற்கு இவ்வாறு சண்டை போட்டுக் கொள்கிறீர்கள்? என தட்டிக் கேட்டுள்ளார்.
குத்தி கொலை
இதனால் ஆத்திரமடைந்த விஜயகுமார், நீங்கள் எதற்கு இதுபற்றி கேட்கிறீர்கள்? என்று கூறி, அங்கிருந்த கத்தியால் சேட்டுவை சரமாரியாக குத்தினார். இதில், சேட்டு ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.
இதை பார்த்து அதிர்ச்சி யடைந்த அக்கம் பக்கத்தில் இருந்தவர், உடனடியாக அவரை மீட்டு, ராசிபுரம் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், சேட்டு ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ராசிபுரம் போலீசார், சேட்டுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி விஜயகுமாரை கைது செய்தனர்.
அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. சேட்டுவை கொலை செய்ததது குறித்து அவர் போலீசாரிடம் பரபரப்பு வாக்கு மூலம் அளித்தார். அவரிடமிருந்து கொலைக்கு கத்தியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கணவன், மனைவி வீட்டில் சண்டையிட்டதை தட்டிக் கேட்ட முதியவர், அண்ணன் மகனால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் ராசிபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து தகவல் அறிந்த கடப்பா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று திலிப் குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
- பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் புலிவேந்தலாவை சேர்ந்தவர் அவினாஷ். இவர் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் எம். பி. ஆக உள்ளார்.
இவரது உதவியாளராக இருப்பவர் பாரத் குமார் யாதவ். இவர் கடப்பா மாவட்டத்தில் சூதாட்டம் கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட இடங்களில் பணம் வசூல் செய்து வந்தார்.
அதே பகுதியை சேர்ந்த திலீப் குமார் என்பவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. அவர் திருமண செலவுக்காகபாரத் குமாரிடம் பணம் வாங்கி உள்ளார். திலிப் குமார் வாங்கிய பணத்தை திருப்பி தரவில்லை என கூறப்படுகிறது. நேற்று முன்தினம் மதியம் வெளியே சென்று வருவதாக மனைவியிடம் கூறிவிட்டு திலிப் குமார் வெளியே சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை.
இந்நிலையில் கொடுத்த கடனை திருப்பி தருவது தொடர்பாக அதிரடி மகபூப் பாஷா என்பவர் முன்னிலையில் திலீப் குமாரும் பாரத்குமாரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த பாரத் குமார் வீட்டிற்கு சென்று துப்பாக்கி எடுத்து வந்து திலீப்குமார் மற்றும் மகபூப் பாஷாவை நோக்கி 3 ரவுண்டு சுட்டார். இதில் திலீப் குமார் மார்பு பகுதியில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.
மகபூப் பாஷாவுக்கு கை மற்றும் காலில் குண்டு பாய்ந்தது.
அவரை மீட்டு சிகிச்சைக்காக கடப்பா அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து தகவல் அறிந்த கடப்பா போலீஸ் சூப்பிரண்டு அன்புராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று திலிப் குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த பாரத் குமார் யாதவை கைது செய்தனர்.
பாரத் குமார் அவினாஷ் எம்.பி யின் உதவியாளராக இருந்ததால் அவருக்கு துப்பாக்கி எப்படி கிடைத்தது லைசன்ஸ் வாங்கிக் கொடுத்தது யார்? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடலூர் தேவனாம்பட்டினம் மற்றும் சோனங்குப்பம் மீனவர்களுக்கு முன் விரோத தகராறு இருந்து வந்தது.
- பஞ்சநாதனை பயங்கர ஆயுதங்களை கொண்டு குத்தியதில் பஞ்சநாதன் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும்3 மீனவர்கள் காயமடைந்தனர்.
கடலூர்:
கடலூர் தேவனாம்பட்டினம் மற்றும் சோனங்குப்பம் மீனவர்களுக்கு முன் விரோத தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 2018 -ம் ஆண்டு மே மாதம் 15 -ந் தேதி இவர்களுக்குள் மீண்டும் மோதல் ஏற்பட்டு கடலில் தாக்கிக் கொண்டனர். இதனை தொடர்ந்து கடலூர் தேவனாம்பட்டினத்தில் இருந்து நூற்றுக்கணக்கான மீனவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் சோனங்குப்பம் மீனவ கிராமத்திற்கு கடல் வழியாக சென்றனர். அப்போது சோனங்குப்பத்தை சேர்ந்த அ.தி.மு.க.பிரமுகர் பஞ்சநாதன் தேவனாம்பட்டினம் மீனவர்கள் இடையே பேச்சுவார்த்தையில் ஈடுபட சென்றார். இதில் ஆக்ரோஷமாக வந்த தேவனாம்பட்டினம் சேர்ந்த மீனவர்கள் பட்டப் பகலில் பஞ்சநாதனை பயங்கர ஆயுதங்களை கொண்டு குத்தியதில் பஞ்சநாதன் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும்3 மீனவர்கள் காயமடைந்தனர். இது குறித்து கடலூர் துறைமுகம் போலீசார் 21 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்
. மேலும் இந்த வழக்கு கடலூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் வழக்கு பதிவு செய்யப்பட்ட தினகரன் வழக்கு விசாரணையில் இருந்தபோது இறந்துவிட்டார். இதனை தொடர்ந்து கடந்த பிப்ரவரி 16- ந்தேதி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்த போது மார்ச் 4 -ந் தேதி வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி இன்று வழக்கு விசாரணைக்கு வந்து தீர்ப்பு வழங்கப்பட உள்ளதாக கூறப்பட்டது. இதனை தொடர்ந்து கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின் பேரில் கடலூர் நீதிமன்ற வளாகம், தேவனாம்பட்டினம், சோனாங் குப்பம் மற்றும் கடற்கரை பகுதிகளில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர் இதனை தொடர்ந்து இன்று காலை நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுபா அன்புமணி வருகிற 8 -ந்தேதிக்கு ஒத்தி வைத்தார். மேலும் எந்தவித அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க ஏராளமான போலீசார் ஆங்காங்கே ரோந்து பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர். இது மட்டும் இன்றி அந்த பகுதிகளில் காரணமின்றி பொதுமக்கள் கூடாத வகையில் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருந்தது. இன்று காலை முதல் கடலூர் மாவட்டம் முழுவதும் இந்த வழக்கு தொடர்பாக பெரும் பரபரப்பாக காணப்பட்டு வந்த நிலையில் வழக்கு ஒத்திவைக்கப்பட்ட காரணத்தினால் பரபரப்பு அடங்கி அமைதி யான நிலை தொடர்ந்தது.
- சிவகிரி அருகே விளாங்காட்டு வலசு பகுதியில் வளைவில் திரும்பும் போது பஸ்சும்,மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் பயங்கர சத்தத்துடன் மோதியது.
- இந்த விபத்து குறித்து சிவகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகிரி:
முத்தூரில் இருந்து ஈரோடு செல்வதற்காக தனியார் பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. பஸ் சிவகிரி அருகே விளாங்காட்டு வலசு பகுதியில் வந்து கொண்டிருந்தது.
எதிர் திசையில் மோட்டார் சைக்கிளில் சேலத்தை சேர்ந்த ஆர்.சந்தோஷ் (வயது 24), பி.சந்தோஷ் (24) என்ற வாலிபர்கள் வந்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு ஒரு வளைவில் திரும்பும் போது பஸ்சும்,மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் பயங்கர சத்தத்துடன் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் தூக்கி வீசப்பட்டதில் 2 பேரும் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனே அக்கம் பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே ஆர்.சந்தோஷ் இறந்து விட்டதாக கூறினர். மற்றொரு வாலிபருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து சிவகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:
குடியாத்தம் தாலுகா தாழையாத்தம் பச்சையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயபால் (வயது 36). காய்கறி வியாபாரி. இவருடைய மனைவி ரேணுகாவுக்கும், அதே பகுதியை சேர்ந்த சதீசுக்கும் (35) இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது.
இதனையறிந்த ஜெயபால், மனைவி ரேணுகாவை கண்டித்து கள்ளக்காதலை கைவிடும்படி கூறியுள்ளார். ஆனால் அவர் அதனை கைவிடாமல் ஜெயபாலுக்கு தெரியாமல் சதீசுடன் தொடர்ந்து பழகி வந்துள்ளார்.
இந்த நிலையில் சதீஷ் கடந்த 2015-ம் ஆண்டு நவம்பர் மாதம் 9-ந் தேதி ரேணுகாவை அவரது வீட்டில் சந்திந்து பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது வீட்டிற்கு வந்த ஜெயபால் அதனை கண்டு ஆத்திரமடைந்து வீட்டில் இருந்த கத்தியால் சதீசை சரமாரியாக குத்தினார். இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து குடியாத்தம் டவுன் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து ஜெயபாலை கைது செய்தனர். அவர் வேலூர் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
இது தொடர்பான வழக்கு விசாரணை வேலூர் மாவட்ட கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை மாவட்ட நீதிபதி ஆனந்தி விசாரித்தார்.
நேற்று அவர் இந்த வழக்கில் தீர்ப்பு கூறினார். அதில், சதீசை கத்தியால் குத்திக் கொலை செய்த ஜெயபாலுக்கு 5 ஆண்டு சிறைதண்டனை வழங்கினார்.
இதையடுத்து அவர் பலத்த போலீஸ் காவலுடன் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
249 உறுப்பினர்களை கொண்ட ஆப்கானிஸ்தான் பாராளுமன்றத்துக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. 2500-க்கும் அதிகமான வேட்பாளர்கள் மோதும் இந்த தேர்தலில் சுமார் 89 லட்சம் வாக்களிக்கவுள்ளனர். சுமார் ஐயாயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என அறிவுத்துள்ள தலிபான் பயங்கரவாதிகள், நாட்டின் பல பகுதிகளில் வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த சில நாட்களில் இவர்கள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதல்களில் பத்துக்கும் அதிகமான வேட்பாளர்களும் நூற்றுக்கணக்கான பொதுமக்களும் உயிரிழந்தனர். ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
தலிபான்களின் கோட்டை என்று கருதப்படும் கந்தஹார் மாகாணத்தில் உள்ள கவர்னர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கந்தஹார் மாகாணத்தின் காவல்துறை தலைவர் ஜெனரல் அப்துல் ரசிக், உளவுத்துறை தலைவர் மற்றும் ஒரு பத்திரிகையாளர் கொல்லப்பட்டனர். கவர்னர் உள்பட 13 பேர் காயமடைந்தனர்.
வாக்குப்பதிவின்போதும் தலிபான்கள் இதுபோன்ற கொடூரமான தாக்குதல்களில் ஈடுபடலாம் என அங்குள்ள பொதுமக்களிடையே பீதி நிலவியது.
இதனைதொடர்ந்து, கந்தஹார் மாகாணத்தில் மட்டும் பாராளுமன்ற தேர்தல் ஒருவாரத்துக்கு பின்னர் நடத்தப்படும் என ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானியின் செய்தி தொடர்பாளர் நேற்று அறிவித்தார்.
இந்நிலையில், இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியதும் வாக்குச்சாவடிகளாக மாற்றப்பட்ட பள்ளிகளில் ஏராளமான வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களிக்கச் சென்றனர். சில இடங்களில் வாக்குச்சாவடிகள் தாமதமாக திறந்ததால் அதிகாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையில் வாக்குவாதம் நடந்தது.
தலைநகர் காபுலில் உள்ள சில பள்ளிகள் மீது தலிபான் பயங்கரவாதிகள் இன்று வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் பீதியடைந்த வாக்காளர்கள் உயிர் பயத்தில் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.
இதேபோல் நாட்டின் பிறபகுதிகளிலும் வாக்குச்சாவடிகள் மீது தலிபான்கள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல் மற்றும் தேர்தல் சார்ந்த வன்முறை சம்பவங்களில் 13-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்ததாகவும் பலர் காயமடைந்ததாகவும் ஆப்கானிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. #Afghanelectionviolence #Kabulpollingstations #Afghanistanpoll
புதுச்சேரி:
வீராம்பட்டினம் தெற்கு தெருவை சேர்ந்தவர் ஜெயராஜ் (வயது 34). இவரது மனைவி அரியாங்குப்பம் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த வர்மா, பிரகாஷ், சுந்தர் ஆகிய 3 பேரும் அவரை கிண்டல் செய்தனர்.
அவர் வீட்டுக்கு வந்து ஜெயராஜியிடம் கூறினார். அவர் வந்து என் மனைவியை ஏன் கிண்டல் செய்கிறாய்? என கேட்டார். இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள் ஜெயராஜை கையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.
இதுகுறித்து ஜெயராஜ் அரியாங்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதேபோல் வீராம்பட்டினம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் உதயசிங் (35). ஜிப்மர் ஊழியர். இவர் வேலை முடிந்து வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தார்.
அரியாங்குப்பம் ஆர்.கே. நகர் நாகமுத்து மாரியம்மன் கோவில் தெருவில் வந்த போது, 3 பேர் சாலையில் நின்று கொண்டிருந்தனர். அவர்களை உதயசிங் ஓரமாக நில்லுங்கள் என கூறினார். எங்களை எப்படி ஓரமாக நிற்க சொல்லலாம்? என கூறி அவர்கள் உதய சிங்கை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து உதயசிங் அரியாங்குப்பம் போலீசில் புகார் கொடுத்தார்.
இந்த 2 சம்பவங்கள் குறித்தும் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாள் நேற்று நாடு முழுவதும் சேவை தினமாக கொண்டாடப் பட்டது. உத்தரகாண்ட் மாநிலம் பிதோராகார் மாவட்டம் தார்சுலா நகரில் ராணுவத்தினர் ஏற்பாடு செய்த மருத்துவ முகாமை மத்திய ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று தொடங்கிவைத்தார்.
முன்னதாக, நிர்மலா சீதாராமன் அந்த நகருக்கு வருகைதர இருப்பதை அறிந்த ஒருவர் தனது வாட்ஸ்-அப் குரூப்பில் நேற்று முன்தினம் இரவு 9.30 மணி அளவில் சர்ச்சைக்குரிய ஒரு தகவலை அனுப்பினார். அதில், ‘நான் நிர்மலா சீதாராமனை துப்பாக்கியால் சுடப்போகிறேன். நாளையே அவரது கடைசி நாள்’ என்று கூறியிருந்தார்.
அதற்கு மற்றொருவரும் பதில் அளித்து, இதுதொடர்பாக 2 பேரும் தகவல்களை பரிமாறிக் கொண்டனர். இதை கண்டுபிடித்த உளவுத்துறையினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்து எச்சரித்தனர். போலீசார் அந்த 2 பேரையும் கண்டுபிடித்து நேற்று காலை கைது செய்தனர். அவர்கள் மீது கொலை மிரட்டல், தகவல் தொழில்நுட்ப சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
அந்த வாட்ஸ்-அப் குரூப்பின் நிர்வாகி (அட்மின்) பற்றியும் விசாரணை நடக்கிறது. கைதான 2 பேருக்கும் பின்னணியில் யாராவது இருக்கிறார்களா?, அவர்களிடம் துப்பாக்கி உள்பட ஆயுதங்கள் இருக்கிறதா? என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. முதல்கட்ட விசாரணையில், அவர்கள் இருவரும் குடிபோதையில் இவ்வாறு தகவல்களை பரிமாறிக் கொண்டது தெரியவந்தது. ஆனாலும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராம்சந்திரா ராஜ்குரு தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்