என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Knitwear Exporters Association"
- 3 ஆண்டுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தி, புதிய நிர்வாகிகள் பதவியேற்கின்றனர்.
- 6 ஆண்டுகளாக ராஜாசண்முகத்தை தலைவராக கொண்டு ஏற்றுமதியாளர் சங்க நிர்வாகம் செயல்பட்டு வருகிறது.
திருப்பூர் :
பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் 1,168 பேரை உறுப்பினராக கொண்டு செயல்படுகிறது திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம். இந்த சங்கத்தில் தலைவர், 2துணை தலைவர், பொதுச்செயலாளர், 2 இணை செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட 7 நிர்வாக பதவி, 20 செயற்குழு உறுப்பினர் பதவிகள் உள்ளன.3 ஆண்டுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தி, புதிய நிர்வாகிகள் பதவியேற்கின்றனர்.
கடந்த 2016 மற்றும் 2019 தேர்தல்களில் வெற்றி பெற்றதால், 6 ஆண்டுகளாக ராஜாசண்முகத்தை தலைவராக கொண்டு ஏற்றுமதியாளர் சங்க நிர்வாகம் செயல்பட்டு வருகிறது.கடந்த 2019ல் தேர்வான நிர்வாகத்தின் பதவிக்காலம் முடிவடைய உள்ளது. புதிய நிர்வாகம் அமைவதற்காக சங்க தேர்தல் நடத்தவேண்டியுள்ளது. இதுகுறித்து முடிவு செய்வதற்காக, ஏற்றுமதியாளர் சங்க செயற்குழு, அப்பாச்சி நகரில் உள்ள சங்க அரங்கில் கூடியது. சங்க தலைவர் ராஜாசண்முகம் தலைமை வகித்தார்.இந்த கூட்டத்தில் 2022-2025க்கான புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய வரும் செப்டம்பர் 30-ந் தேதி சங்க தேர்தல் நடத்துவது, அன்று மாலை 32வது பொதுக்குழு கூட்டம் நடத்துவது என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.ஓட்டுப்பதிவு மற்றும் பொதுக்குழு கூட்டம் முதலிபாளையத்தில் உள்ள நிப்ட்--டீ கல்லூரியில் நடைபெற உள்ளது. தேர்தல் நடைமுறை தொடர்பான தேதிகள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.