search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kondagattu"

    தெலுங்கானா மாநிலத்தில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் பலியானோர் எண்ணிக்கை 60 ஆக அதிகரித்துள்ளது. #Telangana #BusAccident
    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலம் கொண்டாகட்டு மலைப்பகுதியில் பயணிகளுடன் வந்து கொண்டிருந்த பேருந்து ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்ததால், மலைப்பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல் துறையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக செயல்பட்டனர். இந்த விபத்தில் 7 குழந்தைகள் உள்பட 52 பேர் வரை இறந்ததாக முதல்கட்ட தகவல் வெளியானது. 

    இந்த விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள 5 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதையடுத்து, பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 57 ஆக அதிகரித்தது.

    இந்நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த 3 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதைத்தொடர்ந்து, பேருந்து விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்தது.

    இதற்கிடையே, பேருந்து விபத்து ஏற்படுத்திய டிரைவர் சீனிவாசராவ் சென்ற வாரம் சிறந்த ஓட்டுனர் விருது வாங்கியவர் என்பது தெரிய வந்துள்ளது. #Telangana #BusAccident
    தெலுங்கானா மாநிலத்தில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் பலியானவர்கள் குடும்பத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். #Telangana #BusAccident #Modi
    புதுடெல்லி:

    தெலுங்கானா மாநிலம் கொண்டாகட்டு மலைப்பகுதியில் பயணிகளுடன் வந்து கொண்டிருந்த பஸ் ஒன்று திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதையடுத்து, அந்த மலைப்பள்ளத்தாக்கில் அந்த பேருந்து கவிழ்ந்து விழுந்தது.
     
    விபத்து குறித்து தகவலறிந்த ஆம்புலன்ஸ் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்தனர். காவல்துறையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக செயல்பட்டனர் இந்த விபத்தில் குழந்தைகள், பெண்கள் உள்பட 57 பேர் வரை இறந்துள்ளனர். விபத்தில் காயமடைந்து 20-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், பேருந்து விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறுகையில், தெலுங்கானா பேருந்து விபத்து குறித்து அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். விபத்தில் பலியானவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் விபத்தில் காயமடைந்தோர் விரைவில் குணமடைய வேண்டும் எனவும் பதிவிட்டுள்ளார். #Telangana #BusAccident #Modi
    தெலுங்கானா மாநிலத்தில் பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலியானோர் எண்ணிக்கை 57 ஆக உயர்ந்துள்ளது. #Telangana #BusAccident
    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலம் கொண்டாகட்டு மலைப்பகுதியில் பயணிகளுடன் வந்து கொண்டிருந்த பஸ் ஒன்று திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதையடுத்து, அந்த மலைப்பள்ளத்தாக்கில் அந்த பேருந்து கவிழ்ந்து விழுந்தது.
     
    இந்த விபத்து குறித்து ஆம்புலன்ஸ் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக செயல்பட்டனர்.



    இந்த கோர விபத்தில் 7 குழந்தைகள் உள்பட 52 பேர் வரை இறந்ததாக முதல்கட்டமாக தகவல் வெளியானது. விபத்தில் காயமடைந்து 20-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், இந்த விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள 5 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதையடுத்து, பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 57 ஆக அதிகரித்துள்ளது. #Telangana #BusAccident
    ×