search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Koniyamman"

    • நெல்லிப்பொடி - சாந்தி உண்டாகும்
    • வில்வப்பொடி - யோகம் அளிக்கும்

    கோனியம்மனுக்கு அபிஷேகம் செய்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும். அதன் விவரம் வருமாறு:-

    சந்தன தைலம்- சுகம் தரும்

    திருமஞ்சனம்- சம்பத்து நல்கும்

    பாசிப்பயறு மாவு- மகிழ்ச்சியாய் வாழலாம்

    அரிசி மாவு - உயர்பதவி அடையலாம்

    நெல்லிப்பொடி - சாந்தி உண்டாகும்

    வில்வப்பொடி - யோகம் அளிக்கும்

    பஞ்சாமிர்தம் - கல்வி அறிவு பெருகும்

    பால் - மனக்கவலை தீரும்

    தயிர் - மனநோய் அகலும்

    தண்ணீர்- சாந்தி உண்டாகும்

    நெய் - தொழில் சிறக்கும்

    தேன் - குரல் இனிமை பெறும்

    வெல்லம் - துக்க நிவர்த்தி அளிக்கும்

    கரும்புச்சாறு - மன அமைதிபெறும்

    இளநீர் - பக்தி பெருகும்

    எலுமிச்சம்பழம் - விதியை வெல்லலாம்

    சாதம் - சகல பாக்கியம் உண்டாகும்

    திருநீறு - துன்பம் நீங்கும்

    சந்தனம் - நிலம் வீடு வாங்கலாம்

    நல்லெண்ணெய் - ஐயம் நீங்கும்

    பழவகை - திருவருள் பெறலாம்

    வாழைப்பழம் - வறுமை ஒழியும்

    கரும்புச் சர்க்கரை - குழந்தைபேறு கிட்டும்

    எள் - சனி பயம் நீங்கும்

    மாம்பழம்- வெற்றியை கொடுக்கும்

    பூ மாலை- உடல் பிணி தீரும்

    பரிவட்டம்- பெருஞ்செல்வம் பெருகும்

    பச்சரிசி- தீராக்கடன் தீரும்

    மஞ்சள் தூள் - விபத்துகள் தவிர்க்கலாம்

    தேங்காய்- பொன்பொருள் சேரும்

    பேரிச்சம்பழம்- கடல் கடந்து செல்லலாம்

    கல்கண்டு- வாகனம் வாங்கலாம்.

    முந்திரி- பிரிந்தவர் ஒன்று சேரலாம்

    ஏலம்- தீமைகள் நீங்கும்

    உலர் திராட்சை- சங்கடங்கள் தீரும்

    எள்ளுமாவு- மரணபயம் நீங்கும்

    எள்ளுருண்டை- அரசு வேலை பெறலாம்

    எள்ளு சாதம் - பகை நீங்கும்

    பன்னீர் - நன்னடத்தை உண்டாகும்

    கும்ப ஜலம்- சாந்தி உண்டாகும்

    • கோனி அம்மனுக்கு வலதுபுறத்தில் தம்பதி சமேதராக நவக்கிரகங்கள் அமைத்துள்ளனர்.
    • பின் பகுதியில் ஆதி கோனியம்மன் பஞ்ச முக விநாயகர் வள்ளி தெய்வானை உடன் சுப்பிரமணியர் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர்.

    கோனி அம்மனுக்கு வலதுபுறத்தில் தம்பதி சமேதராக நவக்கிரகங்கள் அமைத்துள்ளனர்.

    பின் பகுதியில் ஆதி கோனியம்மன் பஞ்ச முக விநாயகர் வள்ளி தெய்வானை உடன் சுப்பிரமணியர் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர்.

    வடக்கு வாசலில் சுமார் 1 ஏக்கர் பரப்பளவில் உள்ள தளத்தில் ராஜகோபுரம் அமைந்துள்ளது.

    அம்பிகை சன்னதி எதிரே சிம்மவாகனம் உள்ளது. முன்மண்டபத்தில் சரஸ்வதி, லட்சுமி துர்க்கை ஆகிய தேவியர் உள்ளனர்.

    இங்கு வேண்டிக் கொள்ள திருமணத்தடை நீங்கும் குழந்தைப்பேறு கிட்டும் நோய்கள் நீங்கும் தொழில் விருத்தி அடையும் என்பது நம்பிக்கை.

    கோனியம்மனை வேண்டி தங்கள் வீட்டுப்பிள்ளைக்கு வரன் கிடைக்கப்பெற்றவர்கள் கோவிலிலேயே நிச்சயதார்த்த நிகழ்ச்சியை நடத்துகின்றனர்.

    மணமக்கள் வீட்டார் இருவரும் ஒரு கூடையில் உப்பை நிறைத்து அதன் மேலே மஞ்சள் தேங்காய் வெற்றிலை பாக்கு பூ வைக்கின்றனர்.

    கோனியம்மன் சாட்சியாக திருமணத்தை உறுதி செய்கின்றனர்.

    நோய் நீங்கவும் மாங்கல்ய பாக்கியத்திற்கும் வேண்டிகொள்கின்றனர்.

    • போகும் வழியெல்லாம் அம்மனுக்கு சிறப்பு மண்டகபடி நடைபெறும்.
    • சிறப்பு நாதஸ்வரத்துடன் அம்மன் உலா வரும் காட்சி கண்ணுக்கு விருந்தாக அமையும்.

    தெப்ப திருவிழாவின்போது இரவு இந்திர விமான பல்லக்கில் உற்சவமூர்த்தியை புறப்பாடு செய்து,

    ராஜவீதி, ஒக்கிலியர் வீதி, ஐந்து முக்கு, பெரிய கடை வீதி, ஒப்பணக்கார வீதி, வைசியாள் வீதி, சலீவன் வீதி வழியாக,

    அருள்மிகு வேணுகோபால் சுவாமி திருக்கோவிலை அடைந்து அதிகாலை 4 மணியளவில்,

    அங்குள்ள தெப்பக்குளத்தில் தெப்ப திருவிழா நடத்துவர்.

    போகும் வழியெல்லாம் அம்மனுக்கு சிறப்பு மண்டகபடி நடைபெறும்.

    சிறப்பு நாதஸ்வரத்துடன் அம்மன் உலா வரும் காட்சி கண்ணுக்கு விருந்தாக அமையும்.

    தெப்பம் ஆடியபின்னர் தேர்நிலை திடலில் வாணவேடிக்கை நடைபெறும்.

    அதன்பின்பு கோவிலில் சிறப்பு அபிஷேகமும் தரிசனமும் நிகழ்வுறும்.

    மாலையில் கொடியிறக்கம் நடைபெறும். 

    • இக்கோவில் கோயம்புத்தூருக்கு வடக்கில் துடியலூருக்கு செல்லும் வழியில் சங்கனூர் பள்ளத்தருகே இருந்து பாழடைந்தது.
    • மக்கள் இதனை கோனியம்மன் பழைய கோவில் எனக் கூறுகின்றனர்.

    பெயர் பெற்ற கோவன்புத்தூரின் காவல் தெய்வமாக அமைந்த சக்திதான் கோனியம்மன்.

    நமது செந்தமிழ்நாட்டிலே ஓரிடத்தில் பத்து குடிசைகள் சேர்ந்தாற்போல் அமைந்தாலும் அந்த இடத்தில் ஒரு மண்மேடை கட்டி அதன் மீது கூரை வேய்ந்து நடுவில் மண் திட்டில் ஓர் பிம்பத்தை அமைத்து தெய்வமாக தொழுவதும், அரசும்,வேம்பும் சேர்ந்து மரமாக வளர்ந்த நிழலில் கல்நட்டு தெய்வமாக வழிபடுவதும் நம் முன்னோர் வகுத்த வழியாகும்.

    இவ்வாறு தான் காடு திருத்தி மக்கள் வாழும் நிலமாக பண்படுத்தியபோது இருளர் தலைவனான கோவன் தங்கள் குடிசைக்கருகில் வடபாகத்தில் சிறு கோவிலொன்றெடுத்து ஒரு கல் நட்டு தானும் தன் இனத்தார்களும் குலதெய்வமென வழிபட்டு விழாசெய்தும் கொண்டாடினான்.

    இக்கோவில் கோயம்புத்தூருக்கு வடக்கில் துடியலூருக்கு செல்லும் வழியில் சங்கனூர் பள்ளத்தருகே இருந்து பாழடைந்தது.

    மக்கள் இதனை கோனியம்மன் பழைய கோவில் எனக் கூறுகின்றனர்.

    பல்லாண்டுக்குபின் இளங்கோசர் கொங்கு நாட்டினை ஆண்ட காலத்தில் சேரர் படையெடுத்தால் தடுக்க ஒரு மண்கோட்டையையும், மேட்டையும் புதிதாக கோவன் புத்தூரிலே கோசர்கள் கட்டினார்கள்.

    அங்ஙனம் கட்டிய கோட்டைக்கு காப்பு தெய்வமாகவும் தன் பெயர் விளங்கும் வண்ணமும் சிறுகோவிலொன்றெடுத்து அதில் வைத்து வணங்கிய தெய்வத்துக்கு கோனியம்மன் என பெயரிட்டு கோவில் கொள்ள செய்தனர்.

    அக்கோவிலே தற்போது கோவை மாநகரின் நடுவில் விளங்கும் கோனியம்மன் கோவில் ஆகும்.

    • கோனியம்மன் கோவில் கோயம்புத்தூரின் மையப்பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற அம்மன் கோவில் ஆகும்.
    • இக்கோவிலை மையமாகக் கொண்டே கோயம்புத்தூர் நகரம் அமைக்கப்பட்டது.

    கோனியம்மன் கோவில் கோயம்புத்தூரின் மையப்பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற அம்மன் கோவில் ஆகும்.

    இக்கோவிலை மையமாகக் கொண்டே கோயம்புத்தூர் நகரம் அமைக்கப்பட்டது.

    இக்கோவிலின் வரலாறு 13 ஆம் நூற்றாண்டளவில் அமைந்தது. இருளர்களால் 600 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது.

    பழங்குடியினரின் ஆட்சிக்காலத்திற்குப் பின்னர் முக்கியத்துவத்தை இழந்த இக்கோவிலை மைசூர் மன்னர்களில் ஒருவர் சீரமைத்தார்.

    கோவில் நடை திறந்திருக்கும் நேரம்:

    காலை 6.00 மணி முதல் மதியம் 12.30 மணி வரை

    மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை

    • மாசியில் 14 நாள் திருவிழா தமிழ்மாதப்பிறப்பு பவுர்ணமி ஆடி வெள்ளி.
    • தை வெள்ளி நவராத்திரி திருக் கார்த்திகை தனுர்மாத பூஜை .

    மாசியில் 14 நாள் திருவிழா தமிழ்மாதப்பிறப்பு பவுர்ணமி ஆடி வெள்ளி.

    தை வெள்ளி நவராத்திரி திருக் கார்த்திகை தனுர்மாத பூஜை .

    தைப்பொங்கல் தீபாவளி.

    ஆடி மாதம் முழுவதும் ஊஞ்சல் உற்சவம் நடக்கும். அமாவாசை பவுர்ணமி நாட்களில் விசேஷ பூஜை உண்டு.

    தேர் திருவிழாக்கள் :

    1. பூச்சட்டு

    2. அக்னிசட்டு

    3. திருவிளக்கு பூஜை

    4. மகிழ்வுந்து திருவிழா

    5. தீப உற்சவம்

    6. வசந்த விழா

    • 2008 ஆம் ஆண்டு இத்திருக்கோவிலின் நுழைவாயிலில் 833/4 அடி உயர ஏழுநிலை ராஜகோபுரம் கட்ட தமிழக அரசு அனுமதி வழங்கியது.
    • பல கோடி ரூபாய் செலவில் நடைபெற்ற இப்பணிக்கு இந்து சமய அறநிலையத்துறை ரூபாய் முப்பது லட்சம் வழங்கியது.

    2008 ஆம் ஆண்டு இத்திருக்கோவிலின் நுழைவாயிலில் 833/4 அடி உயர ஏழுநிலை ராஜகோபுரம் கட்ட தமிழக அரசு அனுமதி வழங்கியது.

    பல கோடி ரூபாய் செலவில் நடைபெற்ற இப்பணிக்கு இந்து சமய அறநிலையத்துறை ரூபாய் முப்பது லட்சம் வழங்கியது.

    பொதுமக்கள் மற்றும் உபயதாரர்கள் மூலம் மீதமிருந்த செலவுகள் செய்யப்பட்டன.

    திருக்கோவில்களில் 12 வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் திருக் குடமுழுக்கு விழா, புதிய இராஜகோபுரத்துடன் ஜூலை 11, 2014 இல் நடைபெற்றது.

    பூஜை நேரம்

    1. காலசந்தி காலை 7.00 மணி

    2. உச்சிகாலம் நண்பகல் 12.00 மணி

    3. சாயரட்சை இரவு 7.00 மணி

    4. அர்த்த ஜாமம் இரவு 8.30 மணி

    • கோனியம்மன் கோவில் கோயம்புத்தூரின் மையப்பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற அம்மன் கோவில் ஆகும்.
    • இக்கோவிலை மையமாகக் கொண்டே கோயம்புத்தூர் நகரம் அமைக்கப்பட்டது.

    கோனியம்மன் கோவில் கோயம்புத்தூரின் மையப்பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற அம்மன் கோவில் ஆகும்.

    இக்கோவிலை மையமாகக் கொண்டே கோயம்புத்தூர் நகரம் அமைக்கப்பட்டது.

    இக்கோவிலின் வரலாறு 13 ஆம் நூற்றாண்டளவில் அமைந்தது. இருளர்களால் 600 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது.

    பழங்குடியினரின் ஆட்சிக்காலத்திற்குப் பின்னர் முக்கியத்துவத்தை இழந்த இக்கோவிலை மைசூர் மன்னர்களில் ஒருவர் 'மகிசாசுர மர்த்தினி' அமைப்பில் சீரமைத்தார்.

    இக்கோவில் கோவை மத்திய பேருந்து நிலையத்திலிருந்து இரண்டு கி.மீ தொலைவிலும், கோவை ரயில் நிலையத்திலிருந்து நடந்து வரும் தூரத்திலும் அமைந்துள்ளது.

    • அம்பிகை சன்னதி எதிரே சிம்மவாகனம் உள்ளது. முன்மண்டபத்தில் சரஸ்வதி, லட்சுமி துர்க்கை ஆகிய தேவியர் உள்ளனர்.
    • ஆடி மாதம் முழுவதும் ஊஞ்சல் உற்சவம் நடக்கும். அமாவாசை பவுர்ணமி நாட்களில் விசேஷ பூஜை உண்டு.

    அம்பிகை சன்னதி எதிரே சிம்மவாகனம் உள்ளது. முன்மண்டபத்தில் சரஸ்வதி, லட்சுமி துர்க்கை ஆகிய தேவியர் உள்ளனர்.

    ஆடி மாதம் முழுவதும் ஊஞ்சல் உற்சவம் நடக்கும். அமாவாசை பவுர்ணமி நாட்களில் விசேஷ பூஜை உண்டு.

    அம்மனுக்கு வலதுபுறத்தில் தம்பதி சமேதராக நவக்கிரகங்கள் அமைத்துள்ளனர்.

    பின் பகுதியில் ஆதி கோனியம்மன் பஞ்ச முக விநாயகர் வள்ளி தெய்வானை உடன் சுப்பிரமணியர் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர்.

    வடக்கு வாசலில் சுமார் 1 ஏக்கர் பரப்பளவில் உள்ள தளத்தில் ராஜகோபுரம் அமைந்துள்ளது.

    இங்கு வேண்டிக் கொள்ள திருமணத்தடை நீங்கும் குழந்தைப்பேறு கிட்டும் நோய்கள் நீங்கும் தொழில் விருத்தி அடையும் என்பது நம்பிக்கை.

    கோனியம்மனை வேண்டி தங்கள் வீட்டுப்பிள்ளைக்கு வரன் கிடைக்கப்பெற்றவர்கள் கோவிலிலேயே நிச்சயதார்த்த நிகழ்ச்சியை நடத்துகின்றனர்.

    மணமக்கள் வீட்டார் இருவரும் ஒரு கூடையில் உப்பை நிறைத்து அதன் மேலே மஞ்சள் தேங்காய் வெற்றிலை பாக்கு பூ வைக்கின்றனர்.

    கோனியம்மன் சாட்சியாக திருமணத்தை உறுதி செய்கின்றனர்.நோய் நீங்கவும் மாங்கல்ய பாக்கியத்திற்கும் வேண்டிகொள்கின்றனர்.

    • கொங்கு நாடான கோவை மாநகர் ஆதியில் அடர் மரங்கள் நிறைந்த காடாக இருந்தது.
    • இருளர்களின் தலைவன் கோவன் அதனை சீர்படுத்தி நகராக மாற்றி ஆட்சி புரிந்து வந்தான்.

    கொங்கு நாடான கோவை மாநகர் ஆதியில் அடர் மரங்கள் நிறைந்த காடாக இருந்தது.

    இருளர்களின் தலைவன் கோவன் அதனை சீர்படுத்தி நகராக மாற்றி ஆட்சி புரிந்து வந்தான்.

    ஒரு சமயம் அவன் ஆட்சி புரிந்த பகுதியில் பஞ்சம் ஏற்பட்டு மக்கள் வாழ வழியின்றி தவித்தனர்.

    அவர்களின் நிலையைக் கண்ட கோவன் தனது ஆட்சியின் கீழ், வசிக்கும் மக்கள் வாழ்வில் நன்மைகள் பல பெற்று பஞ்சம் பிணிகள் ஏற்படாமல் சிறந்து வாழ்ந்திட வேண்டி வனப்பகுதியில் சிறு நிலத்தை சீரமைத்து அங்கு கல் ஒன்றினை வைத்து அம்மனாக எண்ணி வழிபடத் தொடங்கினான்.

    அதன்பிறகு கொங்கு நாட்டு மக்கள் செழிப்புற்று திகழ்ந்தனர்.

    அதன்பின் இருளர்கள் அந்த அம்மனையே தங்களது குலதெய்வமாக எண்ணி கோவில் கட்டி வழிபடத் தொடங்கினர்.

    இக்கோவில் கோவைக்கு வடக்கு திசையில் அமைந்தது. அம்பிகை காவல் தெய்வமாக நகரைக் காத்தாள்.

    அவனது ஆட்சி முடிந்த பல்லாண்டுகளுக்குப்பின் இப்பகுதியை இளங்கோசர் என்பவர் ஆண்டு வந்தார்.

    அப்போது சேரமன்னர் ஒருவர் படையெடுத்து வந்தார்.

    அவரின் படையெடுப்பில் இருந்து நாட்டைக் காக்க கோவன்புத்தூரின் மையத்தில் ஓர் கோட்டையையும் மண்மேட்டையும் கட்டி காப்புத்தெய்வமான அம்மனை அங்கு வைத்து வழிபட்டார்.

    இவளே கோனியம்மனாக வழிபடப்படுகிறாள்.

    ×