என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » kovai king
நீங்கள் தேடியது "kovai king"
தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் இன்றைய ஆட்டத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் கோவை கிங்ஸ் அணி எளிதாக வீழ்த்தியது. #TNPL
திண்டுக்கல்:
தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் இன்றைய ஆட்டத்தில் திருச்சி வாரியர்ஸ் - கோவை கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற கோவை கிங்ஸ் பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி பேட்டிங் செய்தது. தொடக்க வீரர் பரத் ஷங்கர் 24 ரன்களும், பாபா இந்திரஜித் 3 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
அடுத்து வந்த மணி பாரதி 10 ரன்னிலும், எஸ் அரவிந்த் டக்அவுட்டிலும் பெவிலியன் திரும்பினார்கள். சுரேஷ் குமார் 33 பந்தில் 35 ரன்களும், சோனு யாதவ் 20 பந்தில் 21 ரன்களும் அடிக்க திருச்சி வாரியர்ஸ் சரியாக 20 ஓவரில் 124 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.
125 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கோவை அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அபினவ் முகுந்த் மற்றும் ஷாருக் கான் நல்ல தொடக்கம் தந்தனர். ஷாருக்கான் 67 ரன்களிலும், அந்தோனி தாஸ் 7 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
14 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழப்புக்கு கோவை அணி வெற்றி இலக்கை எட்டியது. அபினவ் முகுந்த் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஷாருக்கான் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
×

X