search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "KSCA Curators"

    இந்தியா - ஆப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டிக்கு சவாலான ஆடுகளம் தயார் செய்யப்படும் என ஆடுகள பராமரிப்பாளர் தெரிவித்துள்ளார். #INDvAFG
    சர்வதேச கிரிக்கெட் வாரியம் கடந்த வருடம் ஆப்கானிஸ்தானுக்கு டெஸ்ட் அந்தஸ்து வழங்கியது. ஆப்கான் கிரிக்கெட்டிற்கு உதவிகள் செய்து வரும் இந்தியாவிற்கு எதிராக வரலாற்று சிறப்புமிக்க முதல் டெஸ்டில் விளையாட அந்த அணி விரும்பியது. இதற்கு இந்தியாவும் சம்மதம் தெரிவித்தது.

    அதன்படி இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான டெஸ்ட் வருகிற 14-ந்தேதி நடக்கிறது. இந்த டெஸ்டிற்காக சின்னசாமி மைதானத்தில் பிட்ச் தயார் செய்யும் வேலை நடைபெற்று வருகிறது. அவ்வப்போது மழை பெய்தாலும் பிட்ச் பராமரிப்பாளர் இரவு பகலாக தயார் செய்யும் வேலையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இரண்டு அணிகளிலும் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். இதனால் ஆடுகளம் யாருக்கு சாதகமான வகையில் தயாரிக்கப்படும் என்று விவாதம் தொடங்கியுள்ளது. சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக அமைக்கப்பட்டால் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான் போன்றோர் அச்சுறுத்தலாக இருப்பார்கள்.

    இந்நிலையில் ஆடுகளம் ஐந்து நாட்கள் போட்டி நடைபெறும் வகையில் சவாலானதாக இருக்கும் என கர்நாடக கிரிக்கெட் சங்க ஆடுகளம் பராபரிப்பாளர் கே ஸ்ரீராம் கூறியுள்ளார்.



    இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்டிற்காக தயார் செய்யப்படும் ஆடுகளம் சிறந்ததாக இருக்கும். நாங்கள் இந்தியாவிற்காகவோ, ஆப்கானிஸ்தானிற்காகவோ ஆடுகளம் தயார் செய்து கொண்டிருக்கவில்லை. ஆனால், சிறந்த கிரிக்கெட் ஆட்டமாக இருக்கும்.

    ஆடுகளத்தில் சற்று புற்கள் இருக்கும். நாட்கள் ஆகஆக சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக மாறும். ஆட்டம் ஐந்து நாட்கள் நடைபெறும் வகையில் ஆடுகளம் இருக்கும். மழை அவ்வப்போது குறுக்கீடு செய்கிறது. அதை சமாளித்து தயார் செய்து வருகிறோம். எந்தவித நெறுடலும் இல்லாமல் ஆடுகளம் தயார் செய்து கொடுக்கப்படும்.
    ×