search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kudankulam Nuclear Reactor"

    கூடங்குளம் 3-வது அணு உலைக்கான உபகரணங்களை ரஷியா அனுப்பி உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #KudankulamNuclearPowerPlant
    சென்னை:

    இந்திய அணுமின் கழகமும், ரஷிய அரசு நிறுவனமான ரொஸாட்டமும் இணைந்து நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் அணு மின்உற்பத்தி நிறுவனத்தை அமைத்து வருகிறது. தலா 1000 மெகாவாட் திறன்கொண்ட 6 அணு உலைகளில் 2 உலைகள் தற்போது இயங்கி வருகின்றன. 2 அணு உலைகளும் இதுவரை 2,703 கோடியே 30 லட்சம் யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்துள்ளன.

    3-வது மற்றும் 4-வது அணு உலைகளின் கட்டுமான பணிகள் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 29-ந்தேதி தொடங்கியது. தற்போது இதற்கான அடிப்படை கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

    கூடங்குளம் 3-வது அணு மின்நிலையத்துக்கு தேவைப்படும் முக்கிய பாகங்களையும், ஏற்கனவே உள்ள முதல் மற்றும் 2-வது அணு மின்நிலையங்களுக்கு தேவையான சில உதிரிபாகங்களையும் ரஷியா அனுப்பி உள்ளது.

    குறிப்பாக அணு உலைகளுக்கு தேவைப்படும் ஈரப்பதம் பிரித்து மறுவெப்பமேற்றி மற்றும் உயர் அழுத்த வெப்பமேற்றி கருவிகளை 3-வது அணு உலைக்காகவும், அணு உலையை குளிரூட்ட உதவும் பம்புகளுக்கான உதிரிபாகங்களை ஏற்கனவே உள்ள இரு அணு உலைகளுக்காகவும் அனுப்பியுள்ளது.

    ஈரப்பதம் பிரித்து மறு வெப்பமேற்றி கருவி 47 டன் எடையும், 7 மீட்டர் உயரமும், 4 மீட்டர் விட்டமும் கொண்டது. உயர்அழுத்த வெப்பமேற்றி கருவி 11 மீட்டர் நீளமும், 120 டன் எடையும் கொண்டது. அணு உலையில் இவை மிக முக்கியமான பகுதி. இங்குதான் உயர்அழுத்த நீராவியால் டர்பைன் இயக்கப்பட்டு வெப்ப ஆற்றல் மின் ஆற்றலாக மாற்றப்படுகிறது.

    கூடங்குளத்தில் அமைய உள்ள 3-வது அணு உலைக்காக பெறப்படும் பாகங்களின் மொத்த எடை ஆயிரம் டன்கள். இந்த இரு பாகங்களும் தலா 8 ஜோடிகள் இடம்பெறும். இந்த கருவிகள் ரஷியாவில் இருந்து கப்பல் மூலம் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இவை ஓரிரு வாரங்களில் கூடங்குளம் வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள். #KudankulamNuclearPowerPlant
    ×