என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Kudos"
- சோழவந்தான் மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
- உடற்கல்வி துறை ஆசிரியர் அருண்குமார் ஆகியோர்களை பள்ளி முதல்வர் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
சோழவந்தான்
தென்மாநில சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு இடையேயான தேக் வாண்டோ போட்டிகள் சென்னையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, ஆந்திரா, அந்தமான் நிக்கோபார் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் பங்கு பெற்றன.
3 நாட்கள் நடைபெற்ற போட்டிகளில் மதுரை கல்வி இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளி மாணவர்கள் ஒரு தங்கம், ஒரு வெள்ளி மற்றும் 3 வெண்கல பதக்கங்களை பெற்று தமிழகத்தில் அதிக பதக்கங்களை வென்றுள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவர்கள் அர்ஜுன், மிதுழ்செல்வன் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்கள் தேக் வாண்டோ பயிற்சியாளர் தேவா, உடற்கல்வி துறை ஆசிரியர் அருண்குமார் ஆகியோர்களை பள்ளி முதல்வர் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
- பத்திரகாளி வங்கியில் அடகு வைத்திருந்த தங்க நகைகளை மீட்டு அதனை ஒரு பையில் வைத்துக்கொண்டு சென்றார்.
- சாலையில் கிடந்த பையை வயதான மூதாட்டி எடுத்துச் செல்வது சி.சி.டி.வி. காட்சி ஆய்வில் தெரியவந்தது.
கடையநல்லூர்:
கடையநல்லூர் அருகே மேலக்கடையநல்லூர் கட்டி விநாயகர் கோவில் தென்வடல் தெருவில் வசித்து வருபவர் திருமலைச்சாமி. கூலித் தொழிலாளி. இவரது மனைவி பத்திரகாளி (வயது 50).
இவர் கடையநல்லூரில் உள்ள ஒரு வங்கியில் அடகு வைத்திருந்த 10 கிராம் எடையுள்ள மோதிரம், கைச்செயின் உள்ளிட்ட தங்க நகைகளை மீட்டு அதனை ஒரு பையில் வைத்துக்கொண்டு, கடைய நல்லூர் அரசு மருத்துவமனை பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் தவறி விழுந்த அந்த பையை யாரோ மர்ம நபர் எடுத்துச்சென்றனர்.
இதுகுறித்து பத்திரகாளி உடனடியாக கடையநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கருப்பசாமிபாண்டியன், ஏட்டு சங்கர் ஆகியோர் பஸ் நிறுத்தத்தில் உள்ள கண்காணிப்பு காமிராக்களை ஆய்வு செய்தனர். அப்போது சாலையில் கிடந்த பையை வயதான மூதாட்டி எடுத்துச் செல்வது தெரியவந்தது.
உடனடியாக பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்த அந்த மூதாட்டியிடம் இருந்து பையை போலீசார் மீட்டு பத்திர காளியிடம் ஒப்படைத்தனர். 5 நிமிடத்தில் துரிதமாக செயல்பட்டு தவறவிட்ட நகையை மீட்டுக் கொடுத்த போலீசாரை பொதுமக்கள் பாராட்டினர்.
- விருதுநகர் மாவட்ட அணிக்கு பாராட்டு விழா நடந்தது.
- சார்பு ஆய்வாளர் தேவதாஸ், சிவராமன் ஆகியோரை, காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் பாராட்டி கவுரவித்தார்.
ராஜபாளையம்
தமிழ்நாடு ஊர்க்காவல் படையினருக்கான 28-வது மாநில அளவிலான தொழில் முறை மற்றும் விளையாட்டுப் போட்டிகள் திருவண்ணாமலையில் நடந்தது.
இதில் மதுரை சரகம் சார்பில் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 25 ஊர்காவல் படையினர் கலந்து கொண்டனர். இறகுப்பந்து போட்டியில் துணை வட்டாரத் தளபதி அருள்செல்வி மாநில அளவில் 2-வது இடமும், முதலுதவி தொழில் முறை போட்டியில் 2-ம் இடமும், கயிறு இழுக்கும் போட்டி பெண்கள் பிரிவில் முதலிடமும், கயிறு இழுக்கும் போட்டி ஆண்கள் பிரிவில் தொடர்ச்சியாக 26 ஆண்டுகளாக வெற்றி பெற்று வந்த விழுப்புரம் சரகத்தை வீழ்த்தி முதலிடமும் பெற்றனர்.
ஒட்டுமொத்த விளையாட்டுப் போட்டிகளில் 2-ம் இடமும், ஒட்டுமொத்த தொழில் முறை மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் 2-ம் சேர்ந்து அதிக புள்ளிகள் பெற்று மாநில அளவில் முதலிடத்தையும் பெற்ற மதுரை சரகம் சார்பில் கலந்து கொண்ட விருதுநகர் மாவட்ட ஊர்க்காவல் படையினரை மதுரை சரக துணை தளபதி ராஜபாளையத்தை சேர்ந்த ராம்குமார்ராஜா, விருதுநகர் மாவட்ட வட்டார தளபதி அழகர்ராஜா வட்டாரத் துணைத் தளபதி டாக்டர் அருள்செல்வி, சார்பு ஆய்வாளர் தேவதாஸ், எழுத்தர் சிவராமன் ஆகியோரை, காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் பாராட்டி கவுரவித்தார்.
- பிளஸ்-2 தேர்வில் சாதனை படைத்த அரசு பள்ளி மாணவியை நகராட்சி தலைவர் பாராட்டினார்.
- மாணவி ஜனனியை பாராட்டி அவருக்கு சால்வை அணிவித்து பரிசு வழங்கினார்.
மானாமதுரை
பிளஸ்-2 தேர்வில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி ஜனனி 595 மதிப்பெண்கள் பெற்று அரசு பள்ளி அளவில் மாவட்டத்தில் சாதனை படைத்தார். இவருக்கு பல தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இந்த நிலையில் மானாமதுரை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு சென்ற நகராட்சி தலைவர் மாரியப்பன்கென்னடி மாணவி ஜனனியை பாராட்டி அவருக்கு சால்வை அணிவித்து பரிசு வழங்கினார். அப்போது துணைத் தலைவர் பாலசுந்தரம் மற்றும் ஆசிரியைகள் உடனிருந்தனர்.
- 25 ஆயிரம் மீட்டர் ஒட்டப்பந்தயத்தில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
- 5 ஆயிரம் மீட்டர், 15 ஆயிரம் மீட்டர் போட்டிகளிலும் பங்கேற்று தங்கபதக்கமும், சான்றிதழும் பெற்றார்.
ஊட்டி,
குன்னூர் டேன் டீ பகுதியை சார்ந்த தேயிலை தோட்டத் தொழிலாளர் உதயகுமார். இந்திய வனத்துறை ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் அரியனா மாநிலம் சண்டிகர் பஞ்சுளா மாவட்டத்தில் நடைபெற்ற தடகள போட்டியில் பங்கேற்றார். இதில் அவர் 25 ஆயிரம் மீட்டர் ஒட்டப்பந்தயத்தில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
மேலும் 5 ஆயிரம் மீட்டர் ஒட்டப்பந்தயத்திலும் முதலிடம் பிடித்து சாதனை படைத்தார். இதேபோல் கொல்கத்தாவில் சுவாமி விவேகானந்தா ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட மாஸ்டர் அத்லெட்டிக் போட்டியில் 5 ஆயிரம் மீட்டர், 15 ஆயிரம் மீட்டர் போட்டிகளிலும் பங்கேற்று தங்கபதக்கமும், சான்றிதழும் பெற்றார்.
தடகள போட்டிகளில் தங்கம் வென்ற தடகள வீரர் உதயகுமார், நீலகிரி மாவட்ட தி.மு.க செயலாளர் பா.மு. முபாரக்கை சந்தித்து, தான் வெற்றி பெற்ற தங்க பதக்கங்களையும், சான்றிதழையும் காண்பித்து வாழ்த்து பெற்றார். அப்போது குன்னூர் நகரக் செயலாளர் ராமசாமி, மாநில சிறுபான்மை பிரிவு துணைச் செயலாளர் அன்வர்கான், பொதுக்குழு உறுப்பினர் சதக்கத்துல்லா, ரஹீம் ஆகியோர் உடன் இருந்தனர்.
- போதை பொருட்களை இலங்கைக்கு கடத்த முயன்ற குற்றவாளிகளை இன்ஸ்பெக்டர் விஜயஅனிதா கைது செய்தார்.
- திருச்சியில் நடைபெற்ற விழாவில் விஜய அனிதாவுக்கு விருது வழங்கப்பட்டது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி கடல் பிராந்திய பகுதிகளில் இருந்து இலங்கைக்கு கடத்த முயற்சித்த பல கோடி மதிப்புள்ள போதை பொருட்கள், குற்றவாளிகளை கைது செய்து கடத்தல் தடுப்பு நடவடிக்கைகளில் சிறப்பாகச் செயல்பட்ட தூத்துக்குடி மாவட்ட கியூ பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயஅனிதா தமிழ்நாடு காவல்துறை உயர் அதிகாரிகளால் பாராட்டப்பட்டு கவுரவிக்கப்பட்டார்.
திருச்சி சுங்க இலாகா தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற சர்வதேச சுங்க தின விழாவில் தூத்துக்குடி மாவட்ட குற்ற புலனாய்வுத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜய் அனிதாவுக்கு திருச்சி சுங்க ஆணையர் அணில் விருது வழங்கி கவுரவித்து பாராட்டினார்.
- அனைத்து மாணவர்களும் செய்தித்தாள் வாசிக்கும் அளவிற்கு திறன் பெற்றுள்ளார்கள்.
- மாணவர்களும் விடுப்பு எதுவும் எடுக்காமல் வருகை தருவதுபாராட்டுக்குரியது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியம் காடுவெட்டி கிராமத்தில் இல்லம் தேடிக்கல்வி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
இல்லம் தேடிக் கல்வி மையத்தைதன்னார்வலர் ஷர்மிலி கடந்த 1 வருடங்களாக 30 மாணவர்களுக்கு சிறப்பாக பயிற்சி அளித்து வருகின்றார். அதனை சேத்திருப்புபள்ளி தலைமை ஆசிரியர் கண்காணித்து மாணவர்களை உற்சாகப்படுத்திவருகிறார்.
ஊராட்சி மன்ற தலைவர் சாந்தினிரமேஷ்மையத்திற்கு தேவையானவசதிகளை செய்து வருகிறார்.
ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் சுடர் மணி, அருள், சுப்பிரமணியன், ஜோதிமணி மற்றும் ஊர் முக்கியஸ்த ர்கள்அனைவரும் மையம் சிறப்பாக நடைபெறுவதற்கு உறுதுணையாக இருந்து வருகிறார்கள்.
முதல்-அமைச்சர் தொடங்கி வைத்த திட்டமான இல்லம் தேடிக்கல்வி திட்டம் கொரோனா காலத்தில் ஏற்பட்ட கற்றல் இடைவெளியை போக்கியுள்ளதுஎன்று பள்ளி தலைமை ஆசிரியர் பாலு கூறினார்.
மேலும் இதன் விளைவாக 30 மாணவர்களும் விடுப்பு எதுவும் எடுக்காமல் வருகை தருவதுபாராட்டுக்குரியது என்றும் அனைத்து மாணவர்களும் செய்தித்தாள் வாசிக்கும் அளவிற்கு திறன் பெற்றுள்ளார்கள்.
செய்தி த்தாள் வாசிப்பதன் மூலம் அனைத்து அறிவுகளையும் சேர்த்து வருகின்றனர்.மாணவர்களின் பெற்றோர்கள் இல்லம் தேடிக்கல்வி திட்டத்தைம பாராட்டி வருகின்றனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்