search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kulsoom Nawaz"

    புற்றுநோயால் லண்டனில் மரணம் அடைந்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப் மனைவி குல்சூம் நவாஸ் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் கடிதம் அனுப்பியுள்ளார். #Modicondoles #KulsoomNawaz
    புதுடெல்லி:

    பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப் தற்போது அவென்பீல்டு ஊழல் வழக்கில் சிறையில் உள்ளார். இவருடன் இவரது மகள் மரியம் நவாஸ், மருமகன் சப்தார் ஆகியோரும் சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர்.
     
     நவாஸ் ஷரிப் மனைவி குல்சூம் நவாஸ் உடல்நலக் குறைவால் நேற்று உயிரிழந்தார். 68 வயதான இவர், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு லண்டனில் சிகிச்சை பெற்று வந்தார்.

    தனது மனைவியின் இறுதி சடங்கில் பங்கேற்க பரோல் கேட்டு நவாஸ் ஷரிப் விண்ணப்பித்திருந்தார். அவரையும் மகள் மரியம் நவாஸ் உள்ளிட்டோரையும் 3 நாட்கள் பரோலில் விடுவித்து கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

    குல்சூம் நவாஸ் ஆன்மா சாந்தியடைய லண்டன் நகரின் ரிஜென்ட் பார்க் பகுதியில் உள்ள பெரிய மசூதியில் நாளை ‘ஜனாஸா’ தொழுகை நடைபெறுகிறது. பின்னர், அங்கிருந்து விமானம் மூலம் பாகிஸ்தானுக்கு கொண்டு வரப்படும் குல்சூமின் உடல் லாகூரில் உள்ள நவாஸ் ஷரிப் வீட்டில் நாளை அடக்கம் செய்யப்படுகிறது.



    இந்நிலையில், குல்சூம் ஷரிப் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக,
    நவாஸ் ஷரிப்புக்கு அவர் அனுப்பியுள்ள இரங்கல் கடிதத்தில், கடந்த 2015-ம் ஆண்டில் நவாஸ் ஷரிப் பேத்தி திருமணத்துக்கு அறிவிக்கப்படாத பயணமாக லாகூர் சென்றிருந்தபோது மறைந்த குல்சூம் ஷரிப்பை சந்தித்த நிகழ்ச்சியை நினைவுகூர்ந்தார்.

    அவரது ஆன்மா இளைப்பாறல் அடையவும், அவரை பிரிந்து வாடும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் போதிய மனவலிமையை தருமாறும் இறைவனை பிரார்த்திப்பதாக அந்த கடிதத்தில் மோடி குறிப்பிட்டுள்ளார். #Modicondoles #KulsoomNawaz 
    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் மனைவி குல்சூம் சிகிச்சை பெற்றுவரும் லண்டன் மருத்துவமனையில் அவரது அறைக்குள் புகுந்த மர்ம நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
    லண்டன்:

    பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டால் பதவி நீக்கம் செய்யப்பட்ட நவாஸ் ஷெரிப்பின் மனைவி குல்சூம் ஷெரிப்(68). புற்றுநோயின் தீவிரத்தால் பாதிக்கப்பட்ட குல்சூம் பல மாதங்களாக லண்டன் நகரில் உள்ள வீட்டில் தங்கியவாறு சிகிச்சை பெற்று வருகிறார்.

    அவரது கணவர் நவாஸ் ஷெரிப், மகள் மரியம் ஷெரிப் உள்ளிட்டோர் பாகிஸ்தானில் இருந்து அவ்வப்போது லண்டன் சென்று அவரை பார்த்துவிட்டு வருவதுண்டு.

    அவ்வகையில், நேற்று நவாஸ் ஷெரிப், மகள் மரியம் ஷெரிப் ஆகியோர் குல்சூமை பார்ப்பதற்காக கடந்த வியாழக்கிழமை விமானம் மூலம் லண்டன் புறப்பட்டு சென்றனர். அவர்கள் சென்று சேருவதற்குள் நேற்று பின்னிரவில் கடுமையான மாரடைப்பால் பாதிக்கப்பட்ட குல்சூம் அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    அங்குள்ள தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ.) அனுமதிக்கப்பட்டுள்ள குல்சூம் சுயநினைவை இழந்து விட்டதாக தெரியவந்துள்ளது.


    இந்நிலையில், அவர் அனுமதிக்கப்பட்டிருக்கும் மருத்துவமனையின் காவலாளிகள் கண்ணில் படாமல் குல்சூம் சிகிச்சை பெற்றுவரும் அறைக்குள் நேற்று புகுந்த மர்ம நபரை மடக்கிப் பிடித்த ஒரு காவலாளி அவரை லண்டன் போலீசாரிடம் ஒப்படைத்தார்.

    நவீத் பாரூக் என்னும் அந்நபரை கைது செய்துள்ள போலீசார், அவர் யார்? என்ன நோக்கத்துக்காக நவாஸ் ஷெரிப் மனைவி இருக்கும் அறைக்குள் நுழைய முயன்றார்? என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். #KulsoomNawaz #Londonhospital
    ×