search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kumbh Mela"

    காஷ்மீர் தாக்குதல் எதிரொலியாக உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடந்து வரும் கும்பமேளாவுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. #PulwamaAttack #KumbhMela
    பிரயாக்ராஜ்:

    காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் மீது ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி நேற்று முன்தினம் நடத்திய கொடூர தாக்குதலில் 40-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்த சம்பவத்தை தொடர்ந்து நாடு முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன.



    அதன்படி உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடந்து வரும் கும்பமேளாவுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் அங்கு பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டிருக்கும் படையினர் அனைவரும் தீவிர உஷார் நிலையில் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளனர்.

    கும்பமேளாவில் புனித நீராட வரும் பக்தர்கள் அனைவரையும் தீவிரமாக கண்காணித்து வருவதாக கூறிய போலீஸ் அதிகாரிகள், கும்பமேளா நடைபெறும் பிரதான பகுதிகள் அனைத்திலும் கூடுதல் படைகள் குவிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தனர். மேலும் பக்தர்களின் பாதுகாப்புக்காக அதிநவீன தொழில் நுட்ப கருவிகளும் பயன்படுத்தப்படுவதாக அவர்கள் கூறினர். #PulwamaAttack #KumbhMela
    மராட்டிய மாநிலத்தில் பிடிபட்ட 9 பயங்கரவாதிகள் கும்பமேளா பக்தர்களை கொல்ல சதி திட்டம் தீட்டியது விசாரணையில் தெரியவந்துள்ளது. #ISMilitants
    மும்பை:

    நாடு முழுவதும் நாளை மறுநாள் குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.

    இதற்காக தலைநகர் டெல்லியிலும், மாநில தலைநகரங்களிலும் விழா ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

    இந்த நிலையில் குடியரசு தின விழா கொண்டாட்டத்தை சீர்குலைக்க இந்தியாவில் உள்ள சில பயங்கரவாத அமைப்புகள் சதி திட்டம் தீட்டி இருப்பதாக உளவுத்துறை இரு வாரங்களுக்கு முன்பு எச்சரிக்கை விடுத்தது. இதைத் தொடர்ந்து தேசிய விசாரணை குழுவினர் நாடு முழுவதும் கண்காணிப்பை தீவிரப்படுத்தினார்கள்.

    அப்போது உத்தரபிரதேசத்தில் ஒரு புதிய பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் நாசவேலைகளில் ஈடுபட தயாராகி வருவது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் அனைவரும் கூண்டோடு சுற்றிவளைத்து பிடிக்கப்பட்டனர்.

    அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் டெல்லி, மும்பை நகரங்களிலும் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்த தயார் நிலையில் இருப்பது தெரிய வந்தது.

    இந்த நிலையில் நேற்று மராட்டிய மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி வேட்டை நடத்தி பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 9 பேரை கைது செய்தனர். அவர்களது பெயர் மொகீன்கான், சல்மான்கான், தகீன்கான், பகத்ஷா, ஜமீன்குத்படி, முகமது மாசார்ஷேக், சர்ப்ரஷ் அகமது, ஜாகித் ஷேக் என்று தெரிய வந்தது. மற்றொருவர் 17 வயதான மைனர் ஆவார். இவர்கள் அனைவரும் ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படுகிறது.

    இந்த 9 பேரில் 4 பேர் அவுரங்காபாத்தைச் சேர்ந்தவர்கள். 5 பேர் மும்புரா பகுதியை சேர்ந்தவர்கள். அவர்களிடமிருந்து ஏராளமான ஆயுதங்கள், ஆவணங்கள், வி‌ஷ பாட்டில்கள் கைப்பற்றப்பட்டன. வி‌ஷப்பாட்டில்கள்தான் அதிக அளவில் இருந்தன.

    அவர்கள் 9 பேரையும் மும்பை போலீசார் தனி இடத்துக்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர்கள் மராட்டிய மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் நாசவேலைகளில் ஈடுபட திட்டமிட்டது தெரிய வந்தது.

    அதோடு உத்தரபிரதேச மாநிலத்திலும் அவர்கள் கைவரிசை காட்ட சதி திட் டம் தீட்டி இருந்தது அம்பலமானது. இதையடுத்து அவர்களில் 8 பேர் அவுரங்காபாத் கோர்ட்டில் நேற்று பிற்பகல் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை பிப்ரவரி 5-ந் தேதி வரை போலீஸ் காவலில் விசாரிக்க கோர்ட்டு அனுமதி அளித்தது. 17 வயது இளைஞர் மைனர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு காவலில் எடுக்கப்பட்டுள்ளார்.

    பிடிபட்டுள்ள 9 பேரும் 3 குழுக்களாக பிரிந்து நாச வேலையில் ஈடுபட தயாராகி வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. முதல் கட்டமாக குடியரசு தின விழாவில் கைவரிசை காட்ட அவர்கள் ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.


    அடுத்தக்கட்டமாக உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்து வரும் கும்பமேளா புனித நீராடலை சீர்குலைக்கவும் அவர்கள் திட்டமிட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கும்பமேளாவில் குழப்பத்தை ஏற்படுத்தவே அவர்கள் வி‌ஷப்பாட்டில்களை அதிகளவில் வாங்கி வைத்திருந்ததும் தெரிய வந்தது.

    கும்பமேளாவில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று புனித நீராடி வருகிறார்கள். மார்ச் மாதம் வரை இந்த கும்பமேளா நடக்கிறது. இடையில் ஏதாவது ஒருநாள் கும்பமேளா பகுதிக்கு சென்று உணவு மற்றும் தண்ணீரில் வி‌ஷத்தை கலந்து அதிகளவு உயிரிழப்பை ஏற்படுத்த அவர்கள் முடிவு செய்து இருந்தனர்.

    இவர்களுக்கு பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத இயக்கங்கள் பணம் மற்றும் பொருட்களை வழங்கி இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. அவர்களை பின்னால் இருந்து இயக்கியது யார் என்பது பற்றிய விசாரணையை மும்பை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர். #ISMilitants 
    பிரயாக்ராஜ் நகரில் கும்பமேளா கோலாகலமாக தொடங்கியது. இதில் முதல் நாளில் 1 கோடியே 40 லட்சம் பேர் புனித நீராடினர். #KumbhMela
    பிரயாக்ராஜ் :

    6 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிற கும்பமேளா, உத்தரபிரதேச மாநிலத்தில் பிரயாக்ராஜ் (அலகாபாத்) நகரில் கோலாகலமாக தொடங்கியது.

    இது மார்ச் மாதம் 4-ந் தேதி வரை 50 நாட்கள் தொடர்ந்து நடைபெறும். சாகாவரம் பெற்ற அமிர்தத்தின் துளிகள், வானில் கடவுள் திருமாலின் வாகனமான கருடன் சுமந்து சென்ற கும்பத்தில் (பானை) இருந்து அலகாபாத், அரித்துவார், உஜ்ஜைனி, நாசிக் ஆகிய 4 இடங்களில் விழுந்தது என்பது இந்து மக்களின் நம்பிக்கை.

    அந்த அமிர்தத்தின் துளிகள் விழுந்த இடங்களில் நடக்கிற கும்பமேளாவில் கலந்து கொண்டு புனித நீராடுவது சிறப்பாக கருதப்படுகிறது.

    அந்த வகையில் பிராயக்ராஜ் நகரில் (அலகாபாத்) நடக்கிற கும்பமேளா மிகவும் பிரபலமானது. உலகமெங்கும் உள்ள இந்து மக்கள் இங்கு வந்து புனித நீராடுவதை வாழ்வில் மிகப்பெரிய பாக்கியமாக கருதுகின்றனர்.

    பிரயாக்ராஜ் நகரில் கங்கை, யமுனை, (கண்ணுக்கு புலப்படாத) சரஸ்வதி ஆகிய நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் இந்த கும்பமேளா நேற்று முன்தினம் தொடங்கியபோது, முதல் நாளில் லட்சக்கணக்கான சாமியார்கள், வேத மந்திரங்கள் முழங்க புனித நீராடினர். அவர்கள் ஆடிப்பாடிக்கொண்டு ஊர்வலமாக வந்து திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியது கண்கொள்ளாக்காட்சியாக அமைந்தது.

    முதல் நாள் முடிவில் 1 கோடியே 40 லட்சம் பேர் புனித நீராடி உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

    கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் பக்திப்பெருக்குடன் புனித நீராடுவது மெய் சிலிர்க்க வைக்கும் அனுபவமாக அமைந்துள்ளது.

    வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளும் பிரயாக்ராஜ் நகருக்கு வந்து கும்பமேளாவை கண்டு செல்கின்றனர்.

    உத்தரபிரதேச மாநில அரசு, கும்பமேளா ஏற்பாடுகளுக்காக ரூ.4 ஆயிரத்து 200 கோடி ஒதுக்கி உள்ளது.

    இந்த கும்பமேளாவில் பவு‌ஷ் பூர்ணிமா (வரும் 21-ந் தேதி), மவுனி அமாவாசை (பிப்ரவரி 4-ந் தேதி), வசந்த பஞ்சமி (பிப்ரவரி 10-ந் தேதி), மாகி பூர்ணிமா (பிப்ரவரி 19-ந் தேதி), மகாசிவராத்திரி (மார்ச் 4-ந் தேதி) முக்கிய நாட்கள்.

    இந்த நாட்களில் பக்தர்கள் கடலென திரண்டு வந்து திரிவேணி சங்கமத்தில் சங்கமிப்பார்கள். கும்பமேளாவையொட்டி இந்த நகரில் மக்களுக்கு 6 மொழிகளில் ரெயில்கள் வருகை, புறப்பாடு அறிவிப்புகளை வெளியிட இந்திய ரெயில்வே சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது.

    ஆங்கிலம், குஜராத்தி, மராத்தி, கன்னடம், தமிழ், மலையாளம் ஆகியவைதான் அந்த 6 மொழிகள் ஆகும்.

    ஜனாதிபதி செல்கிறார்

    பிரயாக்ராஜ் நகரில் இன்று (வியாழக்கிழமை) காந்திய எழுச்சி மாநாடு தொடங்குகிறது. இந்த மாநாட்டை தொடங்கிவைப்பதற்காக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அங்கு செல்கிறார். #KumbhMela
    உத்தரப்பிரதேசத்தில் ஜனவரி முதல் மார்ச் வரை 3 மாதங்களுக்கு திருமணம் நடத்த தடை விதித்து முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். #KumbhMela #UPGovt #YogiAdityanath
    லக்னோ:

    உத்தரப்பிரதேச மாநிலத்தில் வருகிற ஜனவரி முதல் மார்ச் வரை 3 மாதங்கள் கும்பமேளா, புத்த பூர்ணிமா உள்ளிட்ட விசே‌ஷ நாட்கள் வருகின்றன.

    அப்போது அங்கு ஏராளமான மக்கள் திரண்டு கங்கை உள்ளிட்ட நதிகளில் புனித நீராடுவார்கள். உத்தரபிரதேசம் மட்டுமின்றி பிற மாநிலங்களை சேர்ந்தவர்களும் அங்கு தங்கி புனித நீராடி சாமி தரிசனம் செய்வார்கள்.

    இதனால் விசே‌ஷ நாட்களில் அங்கு மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். திருமண மண்டபங்கள் மற்றும் ஓட்டல்களில் தங்கி செல்வார்கள்.


    அப்போது திருமணங்கள் நடத்தினால் அவர்கள் தங்குவதற்கு பாதிப்பு ஏற்படும். எனவே ஜனவரி முதல் மார்ச் வரை 3 மாதங்கள் திருமணம் நடத்த தடை விதித்து முதல்- மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

    எனவே மாவட்ட நிர்வாகங்கள் அனைத்து திருமண மண்டபங்கள் மற்றும் ஓட்டல்களின் உரிமையாளர்களுக்கு ஒரு அரசாணை அனுப்பியுள்ளது. அதில் மேற்கண்ட 3 மாதங்கள் திருமணம் நடத்தவோ, ஓட்டல்களில் தங்கவோ முன்பதிவு செய்திருந்தால் அதை ரத்து செய்யும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. #KumbhMela #UPGovt #YogiAdityanath
    ×