search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Lahore Agreement"

    • இந்திய பிரதமர் வாஜ்பாய் உடன் மேற்கொண்ட லாகூர் ஒப்பந்தத்தை மீறினோம்.
    • கார்கில் தாக்குதல் நடத்தியது தவறுதான் என கட்சிக் கூட்டத்தில் ஒப்புக்கொண்டார் நவாஸ் ஷெரீப்.

    லாகூர்:

    பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப். இவர் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சியின் தலைவராக இருந்தார். பனாமா பேப்பர் வழக்கில் உச்ச நீதிமன்ற உத்தரவுபடி கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகினார். அதன்பின் இங்கிலாந்து சென்ற அவர் 4 ஆண்டுகள் கழித்து கடந்த அக்டோபர் மாதம் பாகிஸ்தான் திரும்பினார்.

    இந்த ஆண்டின் தொடக்கத்தில் பாகிஸ்தானில் பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதற்கிடையே, 6 ஆண்டுக்குப் பிறகு பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சி தலைவராக நவாஸ் ஷெரீப் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.

    இந்நிலையில், இந்திய பிரதமர் வாஜ்பாய் உடன் மேற்கொண்ட லாகூர் ஒப்பந்தத்தை மீறி கார்கில் தாக்குதல் நடத்தியது தவறுதான் என நவாஸ் ஷெரீப் ஒப்புக்கொண்டார்.

    இதுதொடர்பாக, நவாஸ் ஷெரீப் கூறுகையில், 1998-ம் ஆண்டு மே 28-ம் தேதி பாகிஸ்தான் 5 அணுகுண்டு சோதனைகளை நடத்தியது. அதன்பிறகு வாஜ்பாய் இங்கு வந்து எங்களுடன் ஒப்பந்தம் செய்தார். ஆனால் நாங்கள் அந்த ஒப்பந்தத்தை மீறினோம். கார்கில் மீது தாக்குதல் நடத்தியது எங்கள் தவறு தான் என தெரிவித்தார்.

    ×