search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Lakshapradsana worship"

    • பிரகாரங்களை வலம் வந்து வழிபடுவது லட்சபிரதட்சணம் எனப்படும்.
    • அறிந்தும் அறியாமல் செய்த பாவங்கள் நம்மை விட்டு விலகும்.

    ஆலய வழிபாட்டில் இறைஅருளை பெற எத்தனையோ வழிகள் இருந்தாலும் ஆலய பிரகாரங்களை வலம் வந்து தரிசனம் செய்யும் முறைக்கு அதிக பலன்கள் தரும் ஆற்றல் உண்டு. எனவேதான் ஆலயத்துக்கு சென்றதும் பிரகாரங்களை அவசியம் சுற்றி வர வேண்டும் என்றார்கள்.

    ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் வரும் சயன ஏகாதசி தொடங்கி கார்த்திகை மாதம் வரும் உத்தான ஏகாதசி வரை தினமும் ஆலயங்களுக்கு சென்று பிரகாரங்களை வலம் வந்து வழிபட வேண்டும் என்று நமது முன்னோர்கள் வகுத்து வைத்து இருக்கிறார்கள்.

    பிரகாரங்களை வலம் வந்து வழிபடும் இந்த வழிபாட்டை லட்சபிரதட்சணம் என்று அழைக்கிறார்கள். ஜூலை மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை செய்ய வேண்டிய இந்த வழிபாட்டின் போது லட்சம் தடவைக்கு மேல் ஆலய பிரகாரங்களை வலம் வந்து விட முடியும் என்று நமது முன்னோர்கள் கணித்துள்ளனர். எனவே இதற்கு லட்சபிரதட்சண வழிபாடு என்று சொல்கிறார்கள்.

    ஆண்டுக்கு ஒரு தடவையே வரும் இந்த சிறப்பான வழிபாடு இன்று விஷ்ணு சயனிக்கும் ஏகாதசி அன்று தொடங்குகிறது. 12.11.2024 வரை தினமும் இந்த பிரகாரம் வலம் வரும் வழிபாட்டை செய்ய வேண்டும்.

    ஆலயத்தில் அரச மரம், துளசி இருந்தால் அவற்றை காலையில் மட்டுமே வலம் வந்து வழிபட வேண்டும். இந்த வழிபாட்டை வேதவியாசர் ஒரு தடவை தர்மருக்கு அறிவுறுத்தி செய்ய வைத்ததாக புராணங்களில் சொல்லப்பட்டு உள்ளது.

    ஆலயத்தை வலம் வரும் இந்த வழிபாட்டை செய்து முடித்தால் மிகுந்த பலன்கள் கிடைக்கும். குறிப்பாக அறிந்தும் அறியாமல் செய்த பாவங்கள் நம்மை விட்டு விலகும்.

    ×