search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Lamp puja"

    • சிறப்பு ஹோமம் நடைபெற்று, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
    • விளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.

    சுவாமிமலை:

    கும்பகோணம் காவிரிக்கரை செட்டிப்ப டித்துறை விஸ்வநாதர் கோவில் நிர்வாகக்குழு சார்பில் காவிரிக்கு நன்றி தெரிவித்து வழிபடும் 75-ம் ஆண்டு காவிரி பொங்கல் விழா கும்பகோணம் ராசராசேந்திரன் பேட்டை காவிரி படித்துறையில் நேற்று மாலை நடைபெற்றது.

    விழாவில் விருத்தாம்பாள் சந்திரமோகன் அனைவரையும் வரவேற்றார்.

    ஆனந்தி தமிழழகன், கஸ்தூரி முருகன், உமாமகேஸ்வரி பாலசுப்பிரமணியன், லதா முருகன் மற்றும் ராஜகுமாரி சுந்தரமூர்த்தி ஆகியோர் குத்துவிளக்கேற்றினர்.

    சிறப்பு விருந்தினராக கும்பகோணம் மாநகராட்சி துணை மேயர் சு.ப.தமிழழகன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

    பார்த்தசாரதி, வந்தனா சிதம்பரநாதன் மற்றும் கும்பகோணம் மாநகர் நல அலுவலர் பிரேமா சதீஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

    முடிவில் சாவித்திரி செல்வ கணபதி நன்றி கூறினார்.

    தொடர்ந்து, கட ஸ்தாபனம், சிறப்பு ஹோமம் நடைபெற்று, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    பின்னர், கடம் புறப்பட்டு காவிரி நதிக்கு பால், சந்தனம், மஞ்சள் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் நடைபெற்றது.

    பின், காவிரி அன்னைக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    பின்னர், காவிரியில் துணை மேயர் தமிழழகன் மற்றும் ஆனந்தி தமிழழகன் ஆகியோர் தீபத்தை மிதக்க விட்டனர்.

    விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு காவிரி அன்னையை வணங்கி வழிபட்டனர்.

    முன்னதாக விளக்கு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு குடும்ப மேன்மைக்காக விளக்கேற்றி மங்கள பொருட்கள் மற்றும் சர்க்கரை பொங்கல் நெய்வேத்தியம் கொண்டு மேளதாளம் முழங்க அர்ச்சனை செய்து வழிபட்டனர்.

    முடிவில் விளக்கிற்கு மங்கள ஆர்த்தி செய்தனர்.

    • ஆன்மீகசேவர் ரத்னா விருது பெற்ற கே.லட்சுமண குமார்தலை மையில் 1008 விளக்கு பூஜை நடைபெற்றது.
    • மிளகாய்மண்டி அதிபர்கள் குபேரன், பாரத், சந்தானம் ஆகியோர் செய்திருந்தனர்.

    கடலூர்:

    திருச்சி மாவட்டம், தொட்டி யம்வட்டம் நாகைய நல்லூர் கிராமம் மேய்க்கல் நாயக்கன் பட்டி பதி னெட்டாம் படி கருப்பசாமி கோவிலில் உலக நன்மை வேண்டிவந்தாரை வாழ வைக்கும் வரம்தரும் பதினெட்டாம்படி கருப்ப சாமிகோவிலில் தெய்வஅருளை பெற்ற இளஞ் சித்தர், ஆன்மீகசேவர் ரத்னா விருது பெற்ற கே.லட்சுமண குமார்தலை மையில் 1008 விளக்கு பூஜைநடைபெற்றது.

    இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு வேண்டுதல் நிறை வேறவும்நேர்த்தி கடனுக்காக வும் விளக்கேற்றி பூஜை செய்தனர். இதற்கான ஏற்பாடுகளைபதி னெட்டாம்படி கருப்பசாமி வழிபாட்டு மன்றத்தினர், விழாகுழுவினர், கிராம மக்கள் ஆகியோருடன் பண்ருட்டி, ஆரணி பி.கே.மிளகாய்மண்டி அதிபர்கள் குபேரன், பாரத், சந்தானம் ஆகியோர் செய்திருந்தனர்.

    • பகல் 2 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகமும், தீபாராதனையும், சாகை வார்த்தல் நிகழ்ச்சியும், மாலை 3 மணிக்கு செடல் பெருவிழாவும் நடந்தது.
    • வருகிற 20-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலையில் மஞ்சள் நீராட்டு விழா மற்றும் பாவாடை ராயனுக்கு படையல் பூைஜயும் நடைபெறுகிறது.

    கடலூர்:

    கடலூர் மஞ்சக்குப்பம் ராஜாம்பாள் நகரில் புத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாத உற்சவம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று (12-ந் தேதி) விநாயகர் பூைஜயுடன் தொடங்கியது. இன்று காலை 6 மணிக்கு புத்துமாரியம்மனுக்கு புனிதநீர் கொண்டு வருதல் நிகழ்ச்சியும், பகல் 2 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகமும், தீபாராதனையும், சாகை வார்த்தல் நிகழ்ச்சியும், மாலை 3 மணிக்கு செடல் பெருவிழாவும் நடந்தது. அதனை தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு அம்மனுக்கு கும்பம் கொட்டுதல் நிகழ்ச்சியும், இரவு 8 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வீதிஉலா நிகழ்ச்சி நடக்கிறது. நாளை (14-ந் தேதி) மாலை 5 மணிக்கு திருவிளக்கு பூஜை நடக்கிறது. வருகிற 20-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலையில் மஞ்சள் நீராட்டு விழா மற்றும் பாவாடை ராயனுக்கு படையல் பூைஜயும் நடைபெறுகிறது.

    • அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
    • ஏராளமான பெண்கள் குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டனர்.

    நாகப்பட்டினம்:

    திருப்பூண்டி அடுத்த கீழையூர் மகா மாரியம்மன் கோவிலில் ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து தமிழ் முறைப்படி திருமறை மந்திரங்கள் ஓத 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து ஏராளமான சுமங்கலி பெண்கள் குத்து விளக்கை அம்பாளாக பாவித்து குங்கும அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • கும்பகோணத்தில் பிரசித்திபெற்ற மங்களாம்பிகா சமேத ஆதிகும்பேஸ்வரர் கோவில் உள்ளது.
    • உலக நலன் வேண்டி விளக்கு பூஜை நடந்தது.

    கும்பகோணம்:

    கும்பகோணத்தில் உள்ள பிரசித்திபெற்ற மங்களாம்பிகா சமேத ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் ஆடி மாத 3-வது வெள்ளிக்கிழமையை யொட்டி உலக நலன் வேண்டியும், நாடு செழிக்கவும், உலக அமைதி நிலவவும், உலக மக்கள் அனைவரும் உயர்ந்த ஞானம், உயர்ந்த அறிவு, சந்தோசம் பெற வேண்டி விளக்கு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

    • பொன் காளியம்மன் கோவிலில் ஆடி பவுர்ணமி முன்னிட்டு கோவிலை சேர்ந்த அனைத்து குடிப்பாட்டு மக்கள் சார்பில் 501 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
    • முன்னதாக ஸ்ரீ பொன்காளியம்மன் மஞ்சள் காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    பரமத்தி வேலூர்:

    பரமத்திவேலூர் தாலுகா ராமதேவம் கிராமத்தில் அமைந்துள்ள பொன் காளியம்மன் கோவிலில் ஆடி பவுர்ணமி முன்னிட்டு கோவிலை சேர்ந்த அனைத்து குடிப்பாட்டு மக்கள் சார்பில் 501 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. முன்னதாக ஸ்ரீ பொன்காளியம்மன் மஞ்சள் காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதைத் தொடர்ந்து அனைத்து குடிப்பாட்டு மக்கள் சார்பில் பெண்கள் 501 திருவிளக்கேற்றி மகாலட்சுமி பூஜை, திருவிளக்கு பூஜை, மஞ்சள் பூஜை, குங்குமம், மலர்களால் அர்ச்சனை செய்து பூஜைகள் செய்தனர்.

    உலக மக்கள் அமைதி வேண்டியும், மாணவர்கள் கல்வி செல்வம் பெருகவும், மாதம் மும்மாரி மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும், மக்கள் நோய் நொடி இன்றி நலமுடன் வாழவும் சிறப்பு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. திருவிளக்கு பூஜையின் போது புரோகிதர்கள் பக்தி பாடல் பாடிய போது திருமணமான பெண்கள், இளம் பெண்கள் அருள் வந்து பக்தி பரவசத்துடன் ஆடினர். அவர்களை உறவினர்கள், கோவில் பூசாரிகள், திருநீர், எலுமிச்சம்பழம் கொடுத்து அமைதிபடுத்தினர். இந்த பூஜையில் பல மாவட்டங்களில் இருந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.

    • பெண்கள் குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    நாகபட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அருகே கூரத்தாங்குடி கிராமத்தில் சிவா விஷ்ணு கோயில் அமைந்துள்ளது. திருக்கடையூரில் எமனுக்கு ஏற்பட்ட சாபம் நீங்க எமன் லிங்கம் பிடித்து வழிபட்ட ஸ்தலம் என்பது இதன் சிறப்பு.

    இக்கோயிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு தாயார் ஸ்ரீ குங்குமவள்ளி அம்மனுக்கு 108 குத்து விளக்கு பூஜை நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு பால், பன்னீர் ,சந்தனம் உள்ளிட்டவை கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

    தொடர்ந்து ஏராளமான பெண்கள் சுமங்கலிகள் குத்து விளக்கை அம்பாளாக பாவித்து குங்கும அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர் அதைத் தொடர்ந்து அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    • வாழைமரத்தால் ஆன 18 படிகள் உள்ளிட்ட அழகிய தோரணங்களுடன் அய்யப்பன் சன்னதி உருவாக்கப்பட்டிருந்தது.
    • செண்டைமேளம் முழங்க நடந்த இந்த விழா கேரள பாரம்பரிய முறைப்படி நடந்தது.

    உடுமலை : 

    உடுமலை தில்லை நகரில் ரத்தினாம்பிகை உடனமர் ரத்தினலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் வளாகத்தில் ஸ்ரீஅய்யப்பன் சன்னதி உள்ளது. இங்கு கேரள பாரம்பரிய முறைப்படி ஸ்ரீஅய்யப்பன் விளக்கு மஹோத்சவம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக முழுவதும் வாழைமரத்தால் ஆன 18 படிகள் உள்ளிட்ட அழகிய தோரணங்களுடன் அய்யப்பன் சன்னதி உருவாக்கப்பட்டிருந்தது.

    விழாவையொட்டி காலை 6 மணிக்கு கணபதிஹோமம், 7.30 மணிக்கு வாழைமரத்தால் உருவாக்கிய அம்பலத்தில், அய்யப்பசாமி பிரதிஷ்டை, மதியம் 12 மணிக்கு உச்சிகாலபூஜை நடந்தது. மாலையில் உடுமலை ருத்ரப்பாநகர் ஸ்ரீ சித்தி விநாயகர் கோவிலில் இருந்து தாளப்பொலிவுடன் பாலக்கொம்பு எழுந்தருளல் நிகழ்ச்சி நடந்தது. செண்டை மேளம் முழங்க நடந்த இந்த நிகழ்ச்சியில் இரண்டு புறமும் பெண்கள் விளக்கு ஏந்தி ஊர்வலமாக வந்தனர்.

    இதைத்தொடர்ந்து ஸ்ரீதர்மசாஸ்தா சபரி யாத்திரை குழுவினரின் அய்யப்ப பஜனையும் நடந்தது. இரவு பாலக்காடு கடுக்கன்குளம் உன்னிகிருஷ்ணன் குழுவினரின் பூஜை மற்றும் தாயம் வகை செண்டை மேளம் நிகழ்ச்சியும், பின்னர் ஸ்ரீஅய்யப்பன் சரித்திரம் உடுக்கை பாட்டு நிகழ்ச்சியும் நடந்தது. செண்டைமேளம் முழங்க நடந்த இந்த விழா கேரள பாரம்பரிய முறைப்படி நடந்தது. நிகழ்ச்சிகளில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • புற்றுக்கோவிலில் பவுர்ணமி சிறப்பு விளக்கு பூஜை நடைபெற்றது.
    • மாலை 7 மணிக்கு 108 பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கு பூஜை செய்தனர்.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்மாள் புற்றுக்கோவிலில் பவுர்ணமி சிறப்பு விளக்கு பூஜை நடைபெற்றது. இதனையொட்டி காலையில் கணபதி பூஜையுடன் தொடங்கி கோடி சக்தி விநாயகர், வள்ளி தேவசேனா சமேத கல்யாண முருகன் சுவாமி அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகள் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. மாலை 7 மணிக்கு 108 பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கு பூஜை செய்தனர். பூஜைகளை அர்ச்சகர் சுப்பிரமணிய அய்யர் செய்தார். இவ்விழாவில் கோவில் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் சுற்று வட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு இனிப்பு பிரசாதமாக வழங்கப்பட்டது ஏற்பாடுகளை வீரவாஞ்சிநகர் திருவிளக்கு பூஜை குழுவினர் செய்திருந்தனர்.

    • மூலவருக்கு மூலிகைகளால் அபிஷேகம்
    • பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது

    வந்தவாசி:

    வந்தவாசி அடுத்த சென்னாவரம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அய்யப்பன் கோவிலில் விளக்கு பூஜை வழிபாடு வெகு விமரிசையாக நடைபெற்றது.

    முன்னதாக அய்யப்பனுக்கு பல்வேறு மூலிகைகளால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு அய்யப்பன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதை தொடர்ந்து வந்தவாசி சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பு விளக்கு பூஜை நடைபெற்றது. பின்னர் பக்தி பாடல்களை பாடினர்.

    இதைத் தொடர்ந்து மங்கல மேள வாத்தியங்கள் முழங்க ஸ்ரீ அய்யப்பனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்த சிறப்புமிக்க விளக்கு பூஜையில் திரளான அய்யப்ப பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    • விளாத்திகுளம் சக்தி வராகி சித்தர் கோவிலில் அம்மனுக்கு விரலி மஞ்சள் மாலை அணிந்து பெண்கள் வழிபாடு நடத்தினர்
    • விளக்கு பூஜையில் கலந்து கொண்ட ஒவ்வொரு பெண்களுக்கும் கோவில் நிர்வாகம் சார்பாக புடவை வழங்கப்பட்டது.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் சக்தி வராகி சித்தர் கோவில் புரட்டாசி மாத கடைசி வெள்ளிகிழமையன்று அம்மனுக்கு விளக்கு பூஜை நடைபெற்றது. இதில் அம்மனுக்கு விரலி மஞ்சள் மாலை அணிந்தும், பஜனை பாடியும் பெண்கள் பக்தியோடு வழிபாடு நடத்தி வந்தனர். விளக்கு பூஜையில் கலந்து கொண்ட ஒவ்வொரு பெண்களுக்கும் கோவில் நிர்வாகம் சார்பாக விளக்கு பூஜைக்கு தேவையான பொருள்களோடு சேர்ந்து புடவை வழங்கப்பட்டது.

    ×