என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Land bridge"
- வெள்ளம் படிப்படியாக வடிந்ததையொட்டி சாலை சீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
- 400-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இரவு, பகலாக சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் கனமழையால் பல்வேறு இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டது.
கனமழையால் கரைபுரண்டு ஓடிய வெள்ளப்பெருக்கால் ஏரல் பஜார் பகுதி முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியது. மேலும் காட்டாற்று வெள்ளத்தால் ஏரல் தாமிரபரணி ஆற்றுப்பாலம் அடித்து செல்லப்பட்டது.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. வெள்ளம் படிப்படியாக வடிந்ததையொட்டி சாலை சீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் போக்குவரத்தை தொடங்குவதற்காக ஏரல் தாமிரபரணி ஆற்றுப்பாலம் அருகே இருந்த தரைமட்ட பாலத்தை சீரமைக்கும் பணிகள் தொடங்கியது.
இதற்காக 400-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இரவு, பகலாக சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து தற்காலி கமாக அந்த தரைமட்ட பாலம் சீரமைக்கப்பட்டது. இதனைதொடர்ந்து 7 நாட்களுக்கு பின்னர் ஏரல் தரைமட்ட பாலம் வழியாக போக்குவரத்து தொடங்கி உள்ளது.
- கொசஸ்தலை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
- அம்மப்பள்ளி அனை திறப்பால் சாமந்தவாடா தரைப்பாலம் மீண்டும் உடைந்தது.
திருவள்ளூர்:
தமிழக ஆந்திர எல்லையான கிருஷ்ணாபுரம் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு உள்ள அம்மப்பள்ளி அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. ஏற்கனவே மிச்சாங் புயல் காரணமாக பெய்த பலத்த மழையால் அம்மப்பள்ளி அணை நிரம்பியதையடுத்து 200 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டு உள்ளது. இந்த தண்ணீர் அம்மம்பள்ளி அணையில் இருந்து 8 கி.மீட்டர் தூரம் கடந்து தமிழக எல்லையில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் கலக்கிறது. இதனால் தற்போது கொசஸ்தலை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பள்ளிப்பட்டு அடுத்த சொரக்காப்பேட்டை, சாமந்தவாடா, நெடியம், மற்றும் விடியங்காடு வழியாக தண்ணீர் பூண்டி ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது.
கடந்த ஆண்டு பெய்த மழையால் சாமந்தவாடா தரைப்பாலம் சேதம் அடைந்து இருந்தது. இதனை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தற்காலிகமாக சரி செய்து இருந்தனர். அந்த தரைப்பாலம் வழியாக போக்குவரத்து நடைபெற்றது.
இந்தநிலையில் அம்மப்பள்ளி அனை திறப்பால் சாமந்தவாடா தரைப்பாலம் மீண்டும் உடைந்தது. இந்த தரைப்பாலம் முற்றிலும் சேதமடைந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளன. இதனால் அப்பகுதியில் உள்ள 10 கிராமங்கள் துண்டிக்கப்பட்டு உள்ளன. எனவே சாமந்தவாடா தரைப்பாலத்தை உயர்மட்ட பாலமாக அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- பொதுமக்களின் வசதிக்காக புதிய தரைப்பாலம் கட்டித்தர வேண்டும்.
- மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
பரமக்குடி
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு பரமக்குடி-எமனேஸ்வ ரத்தை இணைக்கும் வகை யில் மேம்பாலம் கட்டப்பட் டது. அந்த பாலம் வழியாக தான் பரமக்குடியிலிருந்து இளையான்குடி, சிவகங்கை, காளையார்கோவில், காரைக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, பாண்டிச்சேரி, சென்னை உட்பட பல்வேறு மாவட்டங் கள், மாநிலங்களுக்கு தினந் தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து சென்ற னர்.
இந்நிலையில் கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழைய பாலம் முழுவதுமாக இடிக்கப்பட்டு அதே இடத்தில் புதிய மேம்பாலம் கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. அப்போது புதிய மேம்பால பணிகள் நடைபெறும் போது மக்கள் பயன்படுத்து வதற்காக புதிதாக தற்காலிக தரைப்பாலம் அமைக்கப் பட்டு மக்கள் பயன்படுத்தி வந்தனர்.
கடந்த ஆண்டு வைகை அணையில் இருந்து திறக்கப் பட்ட தண்ணீரில் தற்காலிக தரைப்பாலம் சேதமடைந்து இரண்டாக உடைந்து மக்கள், பாலத்தை பயன் படுத்த முடியாத நிலை இருந்து வருகிறது. இந்நிலை யில் பகல், இரவு நேரங்களில் உடைந்த தரைப்பாலத்தில் நடந்து சென்று மது அருந்தி விட்டு வரும் போது உடைந்த பாலத்தில் போதை ஆசாமி கள் நிலை தடுமாறி விழுந்து இதுவரை 2 பேர் உயிரிழந்து உள்ளனர். எனவே மக்களின் நலன் கருதி உடைந்த பாலத்தை முழுவதுமாக அகற்றிவிட்டு புதிதாக தரைப்பாலம் அமைத்து தர மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
ஆற்றுப்பாலம் அருகே போடப்பட்ட தற்காலிக உடைந்த பாலத்தை முழுவது மாக அகற்றிவிட்டு புதிதாக தரைப்பாலம் கட்டினால் நயினார்கோவில், இளை யான்குடி, எமனேஸ்வரம், வளையனேந்தல், முனை வென்றி, மானாமதுரை, இளையான்குடி ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்கள் பயன்பெறுவார்கள்.
அதே போல் விவசாயிகள் விளைவிக்கக்கூடிய விலை பொருட்களை தங்களது சைக்கிள், இருசக்கர வாக னம் மற்றும் வேன்கள் போன்ற வாகனங்களில் தரைப்பாலம் வழியாக கொண்டு வந்து விற்பனை செய்து வந்தனர்.
காலை, மாலை நேரங்க ளில் சைக்கிள், நடந்து மாணவ-மாணவிகள் அதிக அளவில் செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஆற்றுப்பாலம் அருகே புதிதாக தரைப் பாலம் அமைத்தால் வரும் காலங்களில் போக்குவரத்து நெரிசலை முற்றிலும் தவிர்க்க முடியும்.
மாணவர்கள், விவசாயி கள் பொதுமக்கள் நலன் கருதி பழைய தரைப் பாலத்தை முழுவதுமாக அகற்றிவிட்டு புதிய தலைப்பாலம் கட்டி தர வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
- சிங்கம்புணரி அருகே உள்ள அ.காளாப்பூரில் காட்டாற்று வெள்ளத்தால் தரைப்பாலம் அடிக்கடி மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
- உடனடியாக உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
சிங்கம்புணரி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள அ.காளாப்பூர் அருகில் ஆத்தங்கரைப்பட்டி கிராமம் உள்ளது. இங்கு சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
அ.காளாப்பூரில் இருந்து ஆத்தங்கரைப்பட்டி செல்ல பாலாற்றின் குறுக்கே தரைப்பாலத்தை கடந்து தான் செல்ல வேண்டும். இந்த தரைபாலம் வழியாக 30-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு இருசக்கர வாகனங்கள், கார்களில் கிராம மக்கள் சென்று வருகின்றனர்.
சில வாரங்களாக திண்டுக்கல் கரந்தமலை பகுதிகளில் பெய்த தொடர்மழை காரணமாகவும், சிங்கம்புணரியில் பெய்த கனமழை காரணமாகவும், பாலாற்றில் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் அ.காளா ப்பூர் தடுப்பணையில் தண்ணீர் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
மேலும் அ.காளாப்பூர்- ஆத்தங்கரைப்பட்டி தரைப்பாலம் பாலாற்றின் வெள்ளத்தால் மூழ்கியது. இதனால் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கான போக்குவரத்து தடைபட்டது.இதனால் அபாயம் அறியாமல் இந்த தரைப்பாலத்தின் வழியாக இரு சக்கர வாகனங்கள், கார்கள் மற்றும் கிராம மக்கள் வெள்ள நீரையும் பொருட்படுத்தாமல் கடந்து செல்கின்றனர்.
ஒவ்வொரு முறையும் மழைகாலம், வடகிழக்கு பருவ மழைக்காலம், புயல் காலங்களில் வெள்ளம் ஏற்பட்டு போக்குவரத்து தடைபடுவதால் இந்த பகுதி மக்கள் சுமார் 12 கிலோ மீட்டர் சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இருசக்கர வாகன ஓட்டிகளும் அச்சத்துடன் தரைபாலத்தை கடந்து சென்று வருகின்றனர். ஆத்தங்கரைப்பட்டியில் 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் தரைப்பா லத்தை கடக்க பெற்றோருடன் சென்று வருவதாகவும் அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இங்கு உடனடியாக உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
- கிருஷ்ணகிரி அணை நிரம்பியதும் உபரி நீர் சாத்தனூர் அணைக்கு திறந்துவிடப்படும்.
- கிருஷ்ணகிரி அணை நிரம்பியதும் உபரி நீர் சாத்தனூர் அணைக்கு திறந்துவிடப்படும்.
கடலூர்:
தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ணகிரி அணை நிரம்பியதும் உபரி நீர் சாத்தனூர் அணைக்கு திறந்துவிடப்படும். இந்த தண்ணீர் விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர், பண்ருட்டி வழியாக கடலூர் ஆல்பேட்டையில் கடலில் கலக்கிறது. இந்த ஆற்றை நம்பி ஏராளமான ஏரி குளங்கள் உள்ளது. கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததால் சாத்தனூர், கிருஷ்ணகிரி அணை நிரம்பி வழிந்தது. எனவே தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. ஒட்டுமொத்தமாக ஒரே சமயத்தில் 1.20 லட்சம் கனஅடி நீர் வந்ததால் தென்பெண்ணை ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
ஆற்றின் கழிமுக பகுதியான கடலூர் நகரம் ஆற்று வெள்ளத்தால் கடும் பாதிப்புக்குள்ளானது. குறிப்பாக கடலூர் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. மேலும் ஆற்றங்கரையோரம் உள்ள குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்தது. நாணமேடு, உச்சிமேடு, கண்கடகாடு, தாழங்குடா பகுதி வெள்ளத்தால் சூழப்பட்டது. இதனால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதைத்தொடர்ந்து வெள்ளம் வடிந்ததால் மக்கள் ஓரளவு நிம்மதியடைந்தனர்.
தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் கிருஷ்ணகிரி அணை நிரம்பியது. எனவே உபரி நீர் அணைத்தும் சாத்தனூர் அணைக்கு திறந்து விடப்பட்டது. இந்த அணையும் நிரம்பும் தருவாயில் உள்ளதால் தென்பெண்ணை ஆற்றங்கரையோம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தென்பெண்ணை ஆற்றில் திறந்துவிடப்பட்ட தண்ணீர் சீறிபாய்ந்து நேற்று பன்ருட்டி அருகே கண்டரக்கோட்டை பகுதி வந்து சேர்ந்தது. தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்தபடி உள்ளது. எனவே ஆற்றங்கரை பகுதியில் உள்ள கரைகள் அணைத்தும் பலப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக கடலூர் கலெக்டர் அலுவலகம் எதிரே தரைப்பாலம் பகுதியில் கற்கள் கொட்டப்பட்டு கரைகள் சீரமைக்கும்பணி மும்முரமாக நடந்து வருகிறது. இந்த பணியை மாவட்ட வருவாய்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
- நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
- புதிதாக தற்காலிக தரைப்பாலம் அமைக்கப்பட்டது.
கோவை
கோவை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் நொய்யல் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மேலும் தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்து வருவதால், வெள்ளம் கரைபுரண்டு ஓடி வருகிறது. இதன் காரணமாக சித்திரை சாவடி அணை, சுண்ணாம்பு கால்வாய் தடுப்பணை உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள நீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.இந்நிலையில் வெள்ளலூர் - சிங்காநல்லூர் சாலையில் இருந்த தரைமட்ட பாலம் மழைக்காலங்களில் வெள்ளத்தில் மூழ்குவது வழக்கம். இதனால் போக்குவரத்து தடைபட்டு வந்தது. இதையடுத்து இந்த சாலையில் நொய்யல் ஆற்றின் மீது உயர் மட்ட பாலம் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.
இதற்காக தரைமட்ட பாலம் இடிக்கப்பட்டு, வாகனங்கள் செல்ல புதிதாக தற்காலிக தரைப்பாலம் அமைக்கப்பட்டது. தற்போது பெய்து வரும் மழையால் நொய்யல் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக சிங்காநல்லூர்- வெள்ளலூர் சாலையில் அமைக்கப்பட்டு இருந்த தற்காலிக தரைப்பாலம் மீண்டும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.மாற்றுப் பாதையான ஓண்டிபுதூர்- பட்டணம் சாலையில் உயர்மட்ட பாலம் கட்டுமான பணிகள் நடந்து வருவதால் அந்த சாலையிலும் வெள்ளலூர் பகுதி மக்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும் போத்தனூர் சாலையும் சேதமடைந்து இருப்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்