search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Land document"

    • வருடத்தில் 3 தவணைகளாக தலா ரூ. 2ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.6ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது.
    • ஆவணங்களை சரிபார்ப்பு பணிகளை வரும் 31-ந் தேதிக்குள் முடிக்க வேண்டும்.

    மூலனூர் :

    மூலனூர் வேளாண்மை உதவி இயக்குனர் நிர்மலா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- பாரத பிரதமரின் விவசாயிகளுக்கான கவுரவ ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தில் வருடத்தில் 3 தவணைகளாக தலா ரூ. 2ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.6ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. மூலனூர் வட்டாரத்தில் 5 ஆயிரம் விவசாயிகள் பயன் பெற்று வருகின்றனர். இந்த ஆண்டு மே மாதம் வரை பயனாளிகளில் வங்கிக் கணக்கில் தொகை செலுத்தப்பட்டுள்ளது.

    ஆகவே விவசாயிகள் தங்களின் நில உடமைகளுக்கான பட்டா, சிட்டா, ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல் மற்றும் வங்கி கணக்கு புத்தகத்தின் நகல் ஆகிய கிராமத்திற்கு சரிபார்ப்பு பணிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள அலுவலர்களை சந்தித்து பதிவேற்றம் செய்ய வேண்டும். இதில் மூலனூர் எடைக்கல்பாடி மற்றும் தூரம்பாடி வருவாய் கிராமங்களுக்கு சசிகுமார், கிளாங்குன்டல், குமாரபாளையம் கிராமங்களுக்கு தேசிங்கு, பொன்னிவாடி, பெரமியம், வெள்ளவாவிபுதூர் வருவாய் கிராமங்களுக்கு பாலசுப்பிரமணி, கன்னிவாடி, எரசினம் பாளையம், முளையாம்பூண்டி ,சேனாபதி பாளையம், தட்டாரவலசு வருவாய் கிராமங்களுக்கு வெங்கடேஷ், அரிக்கரன் வலசு, நஞ்சை தலையூர் ,புஞ்சை தலையூர் வருவாய் கிராமங்களுக்கு குமார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    காளிபாளையம் வருவாய் கிராமத்திற்கு செல்வராஜ், சின்னமருதூர் வருவாய் கிராமத்திற்கு அப்துல் ஜலீல் ராஜா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆகவே அந்தந்த கிராம விவசாயிகள் தங்களுக்கு நியமிக்கப்பட்ட அலுவலர்களை சந்தித்து ஆவணங்களை சரிபார்ப்பு பணிகளை வரும் 31-ந் தேதிக்குள் முடிக்க வேண்டும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    ×