என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » land slide
நீங்கள் தேடியது "land slide"
தொடர் மழை மற்றும் மண்சரிவால் ஏற்காட்டுக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளது.
ஏற்காடு:
ஏழைகளின் ஊட்டி எனப்படும் ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்துவருகிறது. இதனால் கடந்த 10 நாட்களுக்கு முன்பு சேலம்-ஏற்காடு மலைப்பாதை, குப்பனூர் மலைச்சாலை ஆகிய 2 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. கடந்த வாரம் மலைப்பாதையில் ராட்சத பாறை உருண்டு விழுந்தது. இதனால் ஏற்காட்டுக்கு வாகன போக்குவரத்து தடைபட்டது. அதிகாரிகள் விரைந்து வந்து மலைப்பாதையை சரி செய்தனர்.
இந்த நிலையில் நேற்று காலையில் இருந்து நள்ளிரவு வரை ஏற்காட்டில் கன மழை கொட்டியது. இதனால் ஏற்காட்டில் இருந்து குப்பனூர் செல்லும் சாலையில் 7 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.
சாலை ஓரங்களில் மண், மற்றும் சிறு பாறைகள் உருண்டு விழுந்துள்ளது. இதனால் அவ்வழியாக வாகனங்களில் செல்ல பொதுமக்கள் அச்சமடைகின்றனர். மண்சரிவு ஏற்பட்ட இடங்களில் மணல் மூட்டைகளை அடுக்கி மேலும் மண் சரிவு ஏற்படாத வண்ணம் பணி செய்யப்படுவதாக நெடுஞ்சாலை துறையினர் கூறினர். தொடர் மழை மற்றும் மண்சரிவால் ஏற்காட்டுக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளது. இதனால் எப்போதும் சுற்றுலா பயணிகள் நிறைந்து பரபரப்பாக காணப்படும் ஏற்காடு ஒண்டிகடை பகுதி, அண்ணா பூங்கா ஏரி பூங்கா, மற்றும் படகு இல்ல பகுதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. இதனால் சுற்றுலா பயணிகளை நம்பி உள்ள சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மழை தொடர்ந்தால்
மலை பாதையில் மேலும் சில இடங்களில் மண்சரிவு ஏற்ப்பட வாய்ப்புள்ளது. தொடர் மழையால் காப்பி விவசாய தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீரின் உரி செக்டாரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். #UriLandslide
ஜம்மு:
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உரி செக்டாரில் உள்ள எல்லைக்கோடு பகுதியில் ராணுவ வீரர்கள் நேற்று ரோந்துப்பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ராணுவ வீரர்கள் இருவர் சிக்கிக்கொண்டனர்.
உடனடியாக அப்பகுதிக்கு விரைந்த பாதுகாப்பு படையினர் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் இறங்கினர். இதில் ராணுவ அதிகாரி ஒருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டார். மற்றொரு ராணுவ வீரர் பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்த ராணுவ அதிகாரி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். #UriLandslide #tamilnews
×

X