search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "lashes"

    • இதே காரணத்திற்காக கடந்த வருடம் மஹ்சா அமினி, அதிகாரிகளால் தாக்கப்பட்டு உயிரிழந்தார்
    • அதிகாரிகள் தாக்கியதில் அர்மிடாவிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாக நண்பர்கள் தெரிவித்தனர்

    மேற்காசியாவில் உள்ள அரபு நாடான ஈரானில் பெண்களுக்கு ஆடை கட்டுப்பாடுகள் தீவிரமாக அமலில் உள்ளது. இச்சட்டத்தை மீறும் பெண்களுக்கு கசையடியும், அபராதமும் தண்டனையாக உள்ளது. அந்நாட்டிற்கு வருகை தரும் அயல்நாட்டு பெண்களும் உடல் வெளியே தெரியும்படியான ஆடைகள் அணிவது தடை செய்யப்பட்டுள்ளது.

    சுமார் 1 வருடத்திற்கு முன் மஹ்சா அமினி (Mahsa Amini) எனும் இள வயது பெண் ஆடை கட்டுப்பாட்டை மீறியதாக  அந்நாட்டின் மத கட்டுப்பாட்டு அமலாக்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு விசாரணையின் போது மர்மமான முறையில் இறந்தார். இதனையடுத்து அந்நாட்டில் பெரும் போராட்டம் நடைபெற்றது. உலகளவில் பெண் உரிமை ஆர்வலர்கள் ஈரான் அரசின் பழமைவாத கட்டுப்பாடுகளை கடுமையாக விமர்சித்தனர்.

    இந்நிலையில் ஈரானின் கெர்மன்ஷா (Kermanshah) பகுதியை சேர்ந்த 16 வயதான அர்மிடா கராவந்த் (Armita Garawand) எனும் சிறுமி, ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள ஷோஹடா (Shohada) மெட்ரோ ரெயில் நிலைய சுரங்க நடைபாதையில் (subway) தனது நண்பர்களுடன் நடந்து வந்து கொண்டிருந்தார்.

    அப்போது அவரது உடையை கண்டு, அந்நாட்டின் மத கட்டுப்பாட்டு அமலாக்க பெண் அதிகாரிகள் அர்மிடா ஆடை கட்டுப்பாட்டை மீறியதாக குற்றம் சாட்டி அவரை தடுத்து நிறுத்தினார். அதற்கு பிறகு அவர்களால் அர்மிடா விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டார். ஆனால், சிறிது நேரத்தில் அச்சிறுமி மயக்கமடைந்து 'கோமா' நிலைக்கு சென்று விட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது அச்சிறுமி டெஹ்ரானின் ஃபாஹர் (Fajr) மருத்துவமனையில் கடும் பாதுகாப்புக்கிடையே சிகிச்சை பெற்று வருகிறாள்.

    அச்சிறுமி குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக கோமா நிலைக்கு சென்று விட்டதாக அதிகாரிகள் தெரிவித்தாலும் அச்சிறுமியின் நண்பர்கள் இதனை மறுத்தனர். மத கட்டுப்பாட்டு அதிகாரிகளால் அச்சிறுமி கடுமையாக தாக்கப்பட்டதாகவும், அவளுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அதனால் மயங்கியதாகவும் குற்றம்சாட்டினர்.

    இதையடுத்து, கடந்த ஆண்டை போல் போராட்டம் வெடிப்பதை தடுக்க ஈரான் காவல்துறை தயார் நிலையில் உள்ளது.

    பெட்ரோலிய அமைச்சகம் என்ன கடவுளா? எங்களை வேலை இல்லாதவர்கள் என்று நினைத்துக் கொண்டார்களா? என்று சுப்ரீம் கோர்ட்டு காட்டமாக கேள்வி விடுத்தது. #SupremeCourt #PetroleumMinistry
    புதுடெல்லி:

    டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்திய பகுதிகளில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தக்கோரி, எம்.சி.மேத்தா என்ற சுற்றுச்சூழல் ஆர்வலர், கடந்த 1985-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, தொழிற்சாலை எரிபொருளாக பயன்படுத்தப்படும் ‘பெட் கோக்’ இறக்குமதிக்கு தடை விதித்தது பற்றி மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் பிரமாண மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று கடந்த மே மாதம் உத்தரவிட்டு இருந்தது.

    மேலும், டெல்லி சாலைகளில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்கு காலவரையறை நிர்ணயித்து, அறிக்கை தாக்கல் செய்யுமாறு டெல்லி அரசுக்கு உத்தரவிட்டு இருந்தது.

    இந்நிலையில், இந்த மனு, நீதிபதிகள் மதன் பி.லோகுர், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.என்.எஸ்.நட்கர்னி, பெட் கோக் இறக்குமதிக்கு தடை விதித்த விவகாரம் பற்றி மத்திய பெட்ரோலிய அமைச்சகம் நேற்று (அதாவது, நேற்றுமுன்தினம்)தான் தங்களிடம் தெரிவித்ததாக கூறினார்.

    அதைக்கேட்ட நீதிபதிகள், மத்திய பெட்ரோலிய அமைச்சகத்தை கடுமையாக விமர்சித்தனர். அவர்கள் கூறியதாவது:-

    பெட்ரோலிய அமைச்சகம் என்ன கடவுளா? அவர்கள் என்ன சூப்பர் அரசா? இந்திய அரசை விட உயர்ந்தவர்களா? அவர்கள் எப்போது விரும்புகிறார்களோ, அப்போதுதான் பதில் சொல்வார்களா? பெட்ரோலிய அமைச்சகத்தின் பெயரை ‘கடவுள்‘ என்று மாற்றி வைத்துக்கொள்ள சொல்லுங்கள்.

    எங்கள் உத்தரவுக்கு கீழ்ப்படிய மாட்டார்களா? கீழ்ப்படிய விரும்பாவிட்டால், அப்படியே இருக்கட்டும். சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் வேலை இல்லாதவர்கள், தங்களுக்கு இன்னும் கால அவகாசம் அளிப்பார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்களா? அவர்களின் கருணையில்தான் நாங்கள் இருக்கிறோமா?

    அவர்களின் செயல்பாடு எங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இந்த வழக்கின் தாமதத்துக்கு அவர்களின் மெத்தனம்தான் காரணம். அதனால், பெட்ரோலிய அமைச்சகத்துக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கிறோம்.

    இத்தொகையை 13-ந் தேதிக்குள் சுப்ரீம் கோர்ட்டு சட்ட பணிகள் ஆணையத்தில் செலுத்த தவறினால், அபராத தொகை அதிகரிக்கப்படும்.

    அதுபோல், நாங்கள் உத்தரவிட்டபடி, டெல்லி அரசு, நிலவர அறிக்கையை தாக்கல் செய்யவில்லை. அதன் வக்கீலும் ஆஜராகவில்லை. ஆகவே, டெல்லி அரசுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது.

    இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

    அடுத்தகட்ட விசாரணையை 16-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.  #SupremeCourt #PetroleumMinistry #Tamilnews 
    ×