search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "LGV40ThinQ"

    எல்.ஜி. நிறுவனம் தனது முதல் ஹைப்ரிட் ஸ்மார்ட்வாட்ச் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. எல்.ஜி. வாட்ச் டபுள்யூ7 என இந்த வாட்ச் அழைக்கப்படுகிறது. #LGWatchW7



    எல்.ஜி. நிறுவனம் வி40 தின்க்யூ ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனுடன் எல்.ஜி. வாட்ச் டபுள்யூ7 ஸ்மார்ட்வாட்ச் மாடலையும் அறிமுகம் செய்துள்ளது. 

    எல்.ஜி. நிறுவனத்தின் முதல் ஹைப்ரிட் ஸ்மார்ட்வாட்ச் மாடலாக அமைந்திருக்கும் டபுள்யூ7 கூகுளின் வியர் ஓ.எஸ். மற்றும் வழக்கமான கடிகாரங்களில் உள்ளதை போன்ற முள் அமைப்பு கொண்டுள்ளது. குவார்ட்ஸ் அசைவுகளுடன், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.

    இந்த ஸ்மார்ட்வாட்ச் சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த சோப்ராட் எஸ்.ஏ. உடன் இணைந்து எல்.ஜி. உருவாக்கியிருக்கிறது. இதில் ஆல்டிமீட்டர், பாரோமீட்டர், ஸ்டாப்வாட்ச், டைமர் மற்றும் காம்பஸ் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால் நாள் முழுக்க பேக்கப் வழங்கும் பேட்டரி கொண்டுள்ளது.

    வழக்கமான பயன்பாடுகளில் இரண்டு நாட்கள் வரையிலும், அனலாக்-ஒன்லி (analog-only) மோடில் வைத்தால் மூன்று முதல் அதிகபட்சம் நான்கு நாட்களுக்கு பேக்கப் வழங்கும் என எல்.ஜி. தெரிவித்துள்ளது. ஸ்மார்ட் அம்சங்களை டிசேபிள் செய்த நிலையில், 100 நாட்கள் முதல் அதிகபட்சம் மூன்று மாதங்களுக்கு இயங்கும்.



    எல்.ஜி. வாட்ச் டபுள்யூ7 சிறப்பம்சங்கள்:

    - 1.2 இன்ச் 360x360 பிக்சல் வட்ட வடிவம் கொண்ட எல்.சி.டி. டிஸ்ப்ளே
    - 1.1 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் வியர் 2100 பிராசஸர்
    - 768 எம்.பி. LPDDR3 ரேம்
    - 4 ஜி.பி. eMMC
    - கூகுளின் வியர் ஓ.எஸ்.
    - டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (IP68)
    - அசைவுகள்: 2 ஹேன்ட்ஸ் குவார்ட்ஸ் மூவ்மென்ட் / மைக்ரோ கியர்பாக்ஸ்
    - புளூடூத் 4.2 LE, வைபை, யு.எஸ்.பி. டைப்-சி 2.0
    - சென்சார்கள்: 9-ஆக்சிஸ் (கைரோ/ அக்செல்லோமீட்டர்/ காம்பஸ்), பிரெஷர் சென்சார்
    - 240 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    எல்.ஜி. வாட்ச் டபுள்யூ7 கிளவுட் சில்வர் நிறத்தில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் வழக்கமான 22 எம்.எம். வாட்ச் பேன்ட்களுடன் பொருந்திக் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் எல்.ஜி. வாட்ச் டபுள்யூ7 விலை 450 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ.33,250 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    ×