search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Lieutenant Governor residence"

    டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் உடன் கவர்னர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த துணை முதல் மந்திரி மனிஷ் சிசோடியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். #AAP #Delhisitinstrike #ManishSisodia
    புதுடெல்லி :

    டெல்லி கவர்னர் அலுவலகத்தில் முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 11-ம் தேதி முதல் தொடர்ந்து 6 நாட்களாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த விவகாரத்தில் பிரதமர் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என சில அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    இதற்கிடையில், தலைநகர் டெல்லியில் நேற்று மாலை ஆம் ஆத்மி மந்திரிகள், பிரமுகர்கள், தொண்டர்கள் என அனைவரும் ஒன்று திரண்டனர். அவர்கள் அனைவரும் பிரதமர் மோடி வீட்டுக்கு பிரமாண்ட பேரணியாக சென்றனர். இதனால் அசம்பாவிதத்தை தவிர்க்கும் பொருட்டு டெல்லியில் உள்ள முக்கியமான 5 மெட்ரோ ரெயில் நிலையங்கள் மூடப்பட்டது.

    இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் உடன் உள்ளிருப்பு போராட்டத்தில் பங்கேற்றவாறே கால வரையற்ற உண்ணாவிரத போராட்டத்திலும் ஈடுபட்ட டெல்லி துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியாவிற்கு இன்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

    இதையடுத்து அவர் உடனடியாக லோக் நாயக் ஜெய் நாராயண் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். இத்தகவலை, அரவிந்த் கெஜ்ரிவால் ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.

    ஏற்கெனவே இவர்களுடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்த டெல்லி மந்திரி சத்யேந்திர குமார் ஜெயினுக்கும் உடல்நலக் குறைவு ஏற்பட்டு இதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #AAP #Delhisitinstrike #ManishSisodia
    டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் உடன் கவர்னர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சுகாதாரத்துறை மந்திரி சத்யேந்திர குமார் ஜெயின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    புதுடெல்லி:

    டெல்லி கவர்னர் அலுவலகத்தில் முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 11-ம் தேதி முதல் தொடர்ந்து 6 நாட்களாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். அவருடன் 3 டெல்லி அமைச்சர்களும் உள்ளனர். இந்த விவகாரத்தில் பிரதமர் தலையிட வேண்டும் என சில அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். 

    இதற்கிடையில், தலைநகர் டெல்லியில் நேற்று மாலை ஆம் ஆத்மி மந்திரிகள், பிரமுகர்கள், தொண்டர்கள் என அனைவரும் ஒன்று திரண்டனர். அவர்கள் அனைவரும் பிரதமர் மோடி வீட்டுக்கு பிரமாண்ட பேரணியாக சென்றனர். ஆம் ஆத்மி பேரணி நடைபெறுவதை முன்னிட்டு, டெல்லியில் உள்ள லோக் கல்யாண் மார்க், பட்டேல் சவுக், மத்திய தலைமை செயலகம், உத்யோக் பவன் மற்றும் ஜன்பத் ஆகிய ரெயில் நிலையங்களின் இரு வாயில்களும் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

    இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் உடன் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த டெல்லி சுகாதாரத்துறை மந்திரி சத்யேந்திர குமார் ஜெயினுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக லோக் நாயக் ஜெய் நாராயண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. #AAP #Delhisitinstrike #SatyendraKumarJain
    ×