search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Lifetime Disqualification"

    பாகிஸ்தானின் வெளியுறவு மந்திரியாக உள்ள ஹவாஜா ஆசிப்பை தகுதிநீக்கம் செய்தது செல்லாது என பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. #KhawajaAsif

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் வெளியுறவு மந்திரியாக உள்ள ஹவாஜா ஆசிப் கடந்த 2013-ம் ஆண்டு நடந்த தேர்தலில் என்.ஏ-110 தொகுதியில் போட்டியிட்டு வென்று தேசிய சபைக்கு சென்றார். அவரை எதிர்த்து முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் தெரீக் இ இன்சாப் கட்சியை சேர்ந்த உஸ்மான் தார் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

    இக்வாமா எனப்படும் ஐக்கிய அமீரக நாட்டின் பணி அனுமதி (work permit) ஆசிப்பிடம் இருக்கிறது. ஆனால், அவர் வேட்புமனுவில் அதனை மறைத்துள்ளார் எனவே ஆசிப்பை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என உஸ்மான் தார் இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். 

    இந்த வழக்கில் கடந்த ஏப்ரல் 26-ம் தேதி தீர்ப்பு வழங்கிய இஸ்லாமாபாத் ஐகோர்ட், அவர் வெற்றி பெற்றது செல்லாது என தீர்ப்பு வழங்கப்பட்டது. இதனால், அவர் தனது பதவியை இழந்தார். 

    இந்த தீர்ப்பை எதிர்த்து ஹவாஜா ஆசிப் பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு நேற்று தீர்ப்பு வழங்கியது. அப்போது ஹவாஜா ஆசிப்பை தகுதிநீக்கம் செய்து முன்னர் வழங்கப்பட்ட தீர்ப்பு செல்லாது என தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர் அடுத்த தேர்தலில் போட்டியிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #KhawajaAsif 
    ×