search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "liquor bottle"

    • விபத்தில் லாரி டிரைவர் மற்றும் கிளீனியர் லேசான காயமடைந்தனர்.
    • மற்றொரு லாரி கொண்டு வரப்பட்டு மீதமுள்ள மது பாட்டில்களை ஏற்றி அனுப்பி வைத்தனர்.

    தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் இருந்து ரூ.30 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டு இருந்தது.

    போயன்பள்ளி அருகே உள்ள பால்பண்ணை சாலையில் சென்று கொண்டிருந்தபோது லாரியின் டயர் திடீரென வெடித்தது. கட்டுப்பாட்டு இழந்து சாலையின் நடுவில் உள்ள தடுப்பில் மோதி கவிழ்ந்தது.

    லாரி கவிழ்ந்ததில் அதில் இருந்த மது பாட்டில்கள் பெட்டி பெட்டியாக சாலையில் சிதறியது. உடைந்த மது பாட்டில்களில் இருந்து மது சாலையில் ஆறாக ஓடியது. இந்த விபத்தில் லாரி டிரைவர் மற்றும் கிளீனியர் லேசான காயமடைந்தனர்.

    மது பாட்டில்கள் சாலையில் சிதறி கிடப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் போட்டி போட்டு பெட்டி பெட்டியாக மது பாட்டில்களை அள்ளிச் சென்றனர்.

    தகவல் அறிந்த போயன்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மது பாட்டில்களை எடுத்துக் கொண்டு இருந்த பொதுமக்களை விரட்டியடித்தனர்.

    மேலும் பொதுமக்கள் மது பாட்டில்களை எடுத்துச் செல்லாதவாறு லாரியை சுற்றிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர் மற்றொரு லாரி கொண்டு வரப்பட்டு மீதமுள்ள மது பாட்டில்களை ஏற்றி அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்தில் 15 சதவீத மது பாட்டில்கள் உடைந்து வீணானதாக போலீசார் தெரிவித்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் சிக்கிய லாரியிலிருந்து மது பாட்டில்களை பொதுமக்கள் அள்ளிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மது அருந்திவிட்டு காலி பாட்டில்களை ரோட்டில் வீசிச் செல்வதால் மனிதர்கள் மட்டுமின்றி கால்நடைகளும் பாதிக்கிறது.
    • தமிழகம் முழுவதும் அனைத்து மதுக்கடைகளிலும் ஏப்ரல் முதல் செயல்படுத்தும் பணியில் டாஸ்மாக் ஈடுபட்டுள்ளது.

    சென்னை:

    தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம் சார்பில் 4820 மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. மது பிரியர்கள் மது அருந்திவிட்டு காலி பாட்டில்களை ரோட்டில் வீசிச் செல்வதால் மனிதர்கள் மட்டுமின்றி கால்நடைகளும் பாதிக்கிறது.

    இதைத்தொடர்ந்து நீதி மன்ற உத்தரவின்படி காலி மது பாட்டில்களை மதுக் கடைகளில் திரும்ப பெறும் திட்டத்தை செயல்படுத்த டாஸ்மாக் முடிவு செய்தது. இந்த திட்டம் தற்போது பரீட்சார்த்த முறையில் நீலகிரி, பெரம்பலூர், கோவை, தர்மபுரி, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டது.

    அந்த மாவட்டங்களில் மதுபானங்கள் விற்கும் போது அதிகபட்ச சில்லறை விலையுடன் கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. காலி பாட்டில்களை மதுக்கடையில் கொடுத்தவுடன் 10 ரூபாய் திரும்ப வழங்கப்படும்.

    இந்த திட்டத்தை தமிழகம் முழுவதும் அனைத்து மதுக்கடைகளிலும் ஏப்ரல் முதல் செயல்படுத்தும் பணியில் டாஸ்மாக் ஈடுபட்டுள்ளது. அந்த அடிப்படையில் சென்னை மண்டலத்திற்கு உட்பட்ட திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு 7 மாவட்டங்களில் இத்திட்டத்தை செயல்படுத்த டெண்டர் விடப்பட்டுள்ளது.

    டெண்டர் எடுக்கின்றவர்கள் காலி பாட்டில்களை திரும்ப பெற்று மீண்டும் பயன்படுத்த மொத்தமாக மதுபான தயாரிப்பு நிறுவனங்களுக்கு வழங்கும். டாஸ்மாக் மதுக்கடைகளில் திரும்ப கொடுக்கப்படும் ஒவ்வொரு காலி பாட்டில்களுக்கும் ரூ.10 வழங்கப்படும்.

    இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறுகையில், "அனைத்து மதுக்கடைகளிலும் ஒப்பந்த நிறுவனங்கள் வழியாக மதுபாட்டில் திரும்ப பெறப்படும். இதற்கான டெண்டர் விடப்பட்டுள்ளது. 28-ந்தேதி டெண்டர் இறுதி செய்யப்பட்டு காலி மதுபாட்டில் திரும்ப பெறப்படும் திட்டம் தொடங்கப்படும்" என்றார்.

    • சாலமனுக்கும், பால்ராஜிக்கும் இடப்பிரச்சினை இருந்து வருகிறது.
    • பால்ராஜிடம், மது பாட்டிலை மறைத்து வைத்தது குறித்து கிருஷ்ணகுமாரி தட்டி கேட்டார்.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள நெடுவிளையை சேர்ந்தவர் சாலமன். இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த பால்ராஜ்க்கும் (44) இடப்பிரச்சினை இருந்து வருகிறது. இந்நிலையில் பிரச்சினைக்குரிய இட்த்தில் பால்ராஜ் மது பாட்டிலை மறைத்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதனை பார்த்த சாலமன், அவரது மனைவி கிருஷ்ணகுமாரியிடம் (40) கூறி உள்ளார்.

    சம்பவத்தன்று கிருஷ்ணகுமாரி வீட்டின் பின்புறம் பூக்கள் பறித்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த பால்ராஜிடம், கிருஷ்ணகுமாரி மது பாட்டிலை மறைத்து வைத்தது குறித்து தட்டி கேட்டார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த பால்ராஜ், கிருஷ்ணகுமாரியை தாக்கினார். இதில் காயமடைந்த கிருஷ்ண குமாரி சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்து வமனை யில் அனுமதிக்கப்பட்டார்.

    இதுபற்றி களக்காடு போலீ சில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பால்ராஜை தேடி வருகிறார்.

    • ரோந்து பணியில் ஈடுபட்டார்.
    • மதுபாட்டில் விற்பனை செய்தது போலீசாருக்கு தெரிய வந்தது.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சூர்யா தியாகதுருகம் உதயமாம்பட்டு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ஆசிர்வாதம் (வயது 44) என்பவர் தனது வீட்டின் பின்புறம் அரசு அனுமதியின்றி மதுபாட்டில் விற்பனை செய்தது போலீசாருக்கு தெரிய வந்தது. அவரிடமிருந்து 7 மதுபாட்டில் பறிமுதல் செய்த போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

    இதேபோல் பெரியமாமாட்டு பஸ் நிறுத்தம் அருகே அரசு அனுமதியின்றி மது பாட்டில் விற்பனை செய்த நபர் போலீசாரை கண்டதும் தப்பி ஓடினார். அங்கிருந்த 17 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் விசாரணையில் பெரியமாம்பட்டு பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் (35) என்பது தெரியவந்தது. அவர் மீது வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய நபரை வலை வீசி தேடி வருகின்றனர்.

    • மோட்டார் சைக்கிளில்கள் மதுபாட்டில்கள் கடத்திய பெண் உள்பட 2 பேரை கைது செய்தனர்.
    • கீழக்குயில்குடி சமணர்மலை பகுதியில் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.

    மதுரை

    மதுரை அருகே உள்ள நாகமலை புதுக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் மற்றும் போலீசார் கீழக்குயில்குடி சமணர்மலை பகுதியில் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.

    அப்போது அந்த வழியாக வெள்ளை சாக்குடன் மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை மறித்து சோதனை செய்ததில் மதுபாட்டில்கள் வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து மதுபாட்டில்களை கடத்தி வந்த கீழக்குயில்குடியை சேர்ந்த முருகன் (வயது 42) என்பவரை கைது செய்தனர்.

    அவரிடமிருந்த 40 மது பாட்டில்கள், விற்பனைக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. முருகனிடம் மதுபாட்டில்களை வாங்கி வருமாறு கூறிய அமிர்த வள்ளி (52) என்பவரும் கைது செய்யப்பட்டார்.

    • சண்முகராஜ் மதுபாட்டிலை உடைத்து மாரிச்சாமியை குத்தினார்.
    • படுகாயமடைந்த மாரிச்சாமியை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் கட்டபொம்மன் தெருவை சேர்ந்தவர் மாரிச்சாமி (வயது 42). இவரும், கோட்டையூர் பசும்பொன் 2-வது தெருவை சேர்ந்த சண்முக ராஜ் (36) என்ப வரும் நண்பர்கள். இருவருக்கும் குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்றுமுன்தினம் இருவரும் வாசுதேவநல்லூர் காமராஜ் சிலை பின்புறம் மது குடித்துள்ளனர்.

    அப்போது இருவருக்கும் பணம் கொடுக்கல்-வாங்கலில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த சண்முகராஜ் மதுபாட்டிலை உடைத்து மாரிச்சாமியை குத்தினார். இதில் மாரிச்சாமிக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

    படுகாயமடைந்த மாரிச்சாமியை அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் மீட்டு தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து வாசுதேவநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் வழக்குப்பதிவு செய்து சண்முகராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • திருமங்கலம் அருகே 300 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • சின்னசாமி என்பவரிடம் 200 மது பாட்டில்கள் இருந்தன.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே சிந்துப்பட்டி போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட வாகைக்குளம் பிரிவில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த அறிவழகன் என்பவரை பிடித்து சோதனை செய்த போது அவரிடம் 135 மது பாட்டில்கள் இருந்தன. அதைத் தொடர்ந்து அந்த பகுதிக்கு வந்த சின்னசாமி என்பவரிடம் 200 மது பாட்டில்கள் இருந்தன.

    மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • மே தினம் முன்னிட்டு மதுபான கடைகளுக்கு அரசு விடுமுறைவிடப்பட்டுள்ளது.
    • மது பாட்டிலை அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தது. தெரிய வந்தது.

    அந்தியூர்,

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் சுற்றுவட்டார பகுதிகளில்அந்தியூர் தவிட்டுப்பாளையம் பிரம்மதேசம் மூலக்கடை பள்ளியபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் டாஸ்மார்க் மதுபான கடை செயல்பட்டு வருகிறது

    இந்த நிலையில் இன்று மே தினம் முன்னிட்டு மதுபான கடைகளுக்கு அரசு விடுமுறைவிடப்பட்டுள்ளது இந்த நிலையில் நேற்று கடைகளில் மது பாட்டிலை வாங்கி வைத்து அதிக விலைக்கு விற்று வருவதாக அந்தியூர் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது

    இதனை அடுத்து அந்தியூர் சப் இன்ஸ்பெக்டர் கார்த்தி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்

    அப்போதுபள்ளிபாளையம் பகுதியில் சுப்பிரமணியம் (52) என்பவர் கைகளில் வைத்துக்கொண்டு மது பாட்டிலை அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது

    அவரை பிடித்து அந்தியூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து அவர் வைத்திருந்த மது பாட்டலையும் பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகின்றார்கள்

    • வனவிலங்குகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
    • பயணிகளுக்கு மத்தியில் இயற்கையை அளிக்கும் சிலரும் இருப்பது தான் வேதனையாக உள்ளது.

    கோத்தகிரி,

    மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் அதிகமாக பயன்படுத்தும் சாலையாக இருந்து வருகிறது கோத்தகிரி மேட்டுப்பாளை யம் சாலை. இந்த சாலையில் பயணிக்கும் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் பயணிகள் இயற்கை அழகை ரசித்தவாறே வாகனங்களை இயக்குவது வழக்கம்.

    குறிப்பாக பவானிசாகர் மற்றும் மேட்டுப்பாளையம் காட்சி முனையில் பகல் மற்றும் இரவு நேரங்களில் சுற்றுலா பயணிகள் நின்று கொண்டு இயற்கை அழகை ரசித்து செல்வதுண்டு.

    ஆனால் இயற்கையை ரசித்து செல்லும் சுற்றுலா பயணிக ளுக்கு மத்தியில் இயற்கையை அளிக்கும் சிலரும் இருப்பது தான் வேதனையாக உள்ளது.

    காரணம் இங்கு வரும் உள்ளூர் மற்றும் வெளியூர் பயணிகள் குறிப்பிட்ட சில இடங்களில் தங்களின் வாகனங்களை சாலையோ ரம் நிறுத்தி விட்டு மது அருந்து கின்றனர்.

    அவ்வாறு மது அருந்திய பின்னர் பாட்டில்களை அங்கேயே போட்டு விட்டு சென்று விடுகிறார்கள். இவர்கள் மதுபாட்டி ல்களை வீசும் பகுதி யானை வழித்தட மாகவும், மற்ற வனவிலங்குகள் நடமாடும் பகுதியாகவு ம் உள்ளது.

    இதனால் யானைகள் மற்றும் பிற வன விலங்குகள் அந்த பகுதியில் வர முடியாமல் போய்விடுகி ன்றன.

    இதே போன்று காட்டின் சாலைகளில் மது பாட்டிகள், பாலிதீன் கவர்களை போட்டு விட்டு செல்வதனால் காலப்போ க்கில் வனங்களில் உள்ள வன விலங்குகள் அழியும் நிலையும் காணப்படும்.

    எனவே வன அதிகாரிகள் இது போன்று செயல் படுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

    • பாண்டிச்சேரிக்கு கறிக்கோழி கொண்டு சென்று விட்டு வேனில் மீண்டும் பொங்கலூர் வந்துள்ளார்.
    • 11 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் தொட்டம்பட்டியைச் சேர்ந்த பழனிசாமி என்பவரது மகன் செல்லமுத்து (வயது30). இவர் பாண்டிச்சேரிக்கு கறிக்கோழி கொண்டு சென்று விட்டு வேனில் மீண்டும் பொங்கலூர் வந்துள்ளார்.

    அப்போது வேன் காட்டூர் அருகே வந்தபோது காமநாயக்கன்பாளையம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். செல்லமுத்து ஓட்டி வந்த வேனை சோதனையிட்டதில் அதில் பாண்டிச்சேரியில் இருந்து வாங்கி வந்த 11 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனைத் தொடர்ந்து செல்லமுத்துவை கைது செய்த போலீசார் மது பாட்டில் மற்றும் மது பாட்டில் கடத்தி வந்த வேன் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். செல்லமுத்து மீது வழக்கு பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை செய்து வருகிறார்கள்.

    ராமேசுவரத்தில் காரில் கடத்திய 500 மதுபாட்டில்கள்களை பறிமுதல் செய்த போலீசார் 2 வாலிபர்களை கைது செய்தனர்.
    ராமேசுவரம்:

    பாம்பன் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாயா ராஜலட்சுமி தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி விசாரித்தபோது அதில் இருந்த 2 பேரும் முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அந்த காரை சோதனையிட்டபோது அதில் 10 பெட்டிகளில் 500 மதுபாட்டில்கள் இருந்தன.

    விசாரணையில் அவர்கள் அரியமான் கிராமத்தை சேர்ந்த இருள்வேல் (வயது 24), சாத்தக்கோன்வலசை கிராமத்தை சேர்ந்த தங்கப்பாண்டியன்(22) என்பதும், ராமேசுவரம் பகுதியில் கள்ளத்தனமாக விற்பனை செய்வதற்காக கொண்டு சென்றதும் தெரியவந்தது. அதனை தொடர்ந்து போலீசார் அந்த 2 வாலிபர்களையும் கைது செய்ததுடன் மதுபாட்டில்களையும், அவர்கள் வந்த காரையும் பறிமுதல் செய்தனர்.
    சிதம்பரம் அருகே காரில் கடத்தப்பட்ட 1680 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிதம்பரம்:

    புதுவையில் இருந்து சிதம்பரம் வழியாக தஞ்சாவூருக்கு காரில் மதுபாட்டில்கள் கடத்தப்படுவதாக மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் மதுவிலக்கு போலீசார் சிதம்பரம் அருகே வாகன சோதனை நடத்தி கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக கார் ஒன்று வேகமாக வந்தது. அந்த காரை போலீசார் வழிமறித்து சோதனை நடத்தினர். அந்த காரில் 35 அட்டைபெட்டிகள் இருந்தனர். அதனை பிரித்து பார்த்தபோது அதில் மதுபாட்டில்கள் அடுக்கி வைக்கபட்டிருந்தன. அதனை பிரித்து பார்த்தனர். அதில் மொத்தம் 1,680 மதுபாட்டில்கள் இருந்தன.

    இதனைத்தொடர்ந்து போலீசார் காரில் இருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் தஞ்சையை சேர்ந்த அறிவழகன்(27), புதுவை மாநிலம் அரியாங்குப்பத்தை சேர்ந்த அய்யப்பன்(25) என்பதும் தெரியவந்தது.

    2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் காரில் இருந்த மதுபாட்டில்களையும், காரையும் பறிமுதல் செய்தனர். #tamilnews
    ×