search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Lokayukta committee members"

    தமிழ்நாட்டில் லோக் ஆயுக்தா குழு உறுப்பினர்களை 8 வாரத்தில் தேர்வு செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #Lokayukta #SC
    புதுடெல்லி:

    அரசு ஊழியர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்டோர் ஊழலில் ஈடுபட்டால் அவர்களை விசாரணை வரம்புக்குள் கொண்டு வருவதற்காக மத்திய அரசு கடந்த 2013-ம் ஆண்டு லோக் ஆயுக்தா சட்டத்தை இயற்றியது.

    இதன் மூலம் அனைத்து மாநில அரசுகளும் லோக் ஆயுக்தா அமைப்பை நிறுவ வழிவகை செய்யப்பட்டது. தமிழக அரசு இதுவரை லோக் ஆயுக்தாவை அமைக்கவில்லை. தமிழகத்தில் இன்னும் லோக் ஆயுக்தா ஏன் அமைக்கவில்லை? என்று சுப்ரீம் கோர்ட்டு பலமுறை கண்டனம் தெரிவித்தது.

    இதுகுறித்து தமிழக தலைமைச் செயலாளர் சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். அதில் “லோக் ஆயுக்தா அமைக்கும் பணிகள் நிறைவடைந்து விட்டன. உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் பணி மட்டுமே தாமதமாகிக் கொண்டே இருக்கிறது. அந்த பணியும் விரைவில் முடிந்துவிடும். எனவே 8 வார கால அவகாசம் வேண்டும்” என்று கோரப்பட்டு இருந்தது.



    இதை சுப்ரீம் கோர்ட்டு இன்று ஏற்றுக் கொண்டது. தமிழகத்தில் லோக் ஆயுக்தா குழு உறுப்பினர்களை 8 வாரத்துக்குள் தேர்வு செய்ய வேண்டும் என்றும் அதற்கு அடுத்த 4 வாரத்துக்குள் லோக் ஆயுக்தா குழு உறுப்பினர்களை தமிழக அரசு நியமிக்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #Lokayukta #SC

    ×