என் மலர்
நீங்கள் தேடியது "loksabha election"
- 42 இடங்களை கொண்ட மேற்கு வங்காளத்தில் இரண்டு இடங்களை மட்டுமே காங்கிரஸ்க்கு ஒதுக்க திரிணாமுல் காங்கிரஸ் முடிவு.
- காங்கிரஸ் அதிகமான இடங்களில் போட்டியிட விரும்புவதால் காங்கிரஸ்- மம்தா கட்சி இடையே மோதல் ஏற்படும் நிலை.
2024 மக்களவையில் பா.ஜனதாவை தோற்கடிப்பதற்காக எதிர்க்கட்சிகள் INDIA (இந்திய தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணி- Indian National Developmental Inclusive Alliance) கூட்டணியை உருவாக்கியுள்ளன.
இந்தியா கூட்டணியில் 26 கட்சிகளுக்கு மேல் இடம் பிடித்துள்ளன. விரைவில் தேர்தல் வர இருப்பதால் 543 தொகுதிகளில், எத்தனை இடங்களில் யார் யார் போட்டியிடுவது என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சி தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. இதற்காக ஒரு குழுவை அமைத்துள்ளது.
ஏனென்றால் பெரும்பாலான மாநிலங்களில் அந்தந்த மாநில கட்சிகள் வலுவாக உள்ளன. இதனால் காங்கிரஸ் போட்டியிடும் இடங்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த சிக்கலை தீர்ப்பதற்காக குழு அமைக்கப்பட்டுள்ளது.
தொகுதி பங்கீடு சிக்கல் மேற்கு வங்காளத்தில் எதிரெலிக்கிறது. 42 இடங்களை கொண்ட மேற்கு வங்காளத்தில் காங்கிரஸ் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்படும் என திரிணாமுல் காங்கிரஸ் கறாராக தெரிவித்து விட்டது. காங்கிரஸ் கட்சியோ நாங்கள் பிட்சை கேட்கவில்லை. எங்களுடைய முழுப்பலத்துடன் போட்டியிடுவோம் எனத் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் காங்கிரஸ் ஒவ்வொரு மாநில கட்சிகளை தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த அழைத்து வருகிறது.
அந்த வகையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் அழைப்பு விடுத்துள்ளதாக தெரிகிறது. ஆனால், தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் எங்கள் கட்சி சார்பில் பிரதிநிதிகள் கலந்த கொள்ளமாட்டார்கள். எங்களது நிலைப்பாட்டை தெரிவித்துவிட்டோம் என திரிணாமுல் கட்சி கூறிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஒருவேளை காங்கிரஸ்- திரிணாமுல் காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக முடியவில்லை என்றால் இரண்டு கட்சிகளும் அங்கே எதிர்த்து போட்டியிடும் சூழ்நிலை உருவாகும்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தம் 48 தொகுதிகள் உள்ளன. உத்தவ் தாக்கரேயின் சிவசேனா 22 இடங்களில் போட்டியிடுவதாக தெரிவித்தது. இதனால் காங்கிரஸ் கட்சி தேசியவாத காங்கிரஸ், சிவசேனா கட்சிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது.
- மாநில கட்சிகளுடன் காங்கிரஸ் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.
- ஒருங்கிணைப்பாளராக யாரை நியமிக்கலாம் என்பதில் இன்னும் முடிவு எடுக்கப்படாமல் உள்ளது.
இந்திய பாராளுமன்ற மக்களவை தேர்தல் விரைவில் வரவிருக்கிறது. பா.ஜனதாவை எதிர்த்து போட்டியிட இந்தியா கூட்டணி உருவாகியுள்ளது. தற்போது தொகுதி பங்கீடு குறித்து காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டிருந்தது.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மட்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை. மற்ற கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.
இந்த நிலையில் இன்று காலை 11.30 மணிக்கு காணொலி காட்சி மூலம் இந்தியா கூட்டணியின் ஆலோசனை கூட்டம் நடைபெற இருக்கிறது. கூட்டணியின் உள்ள கட்சிகளின் தலைவர்கள் மற்றும் கட்சி பிரதிநிதிகள் இதில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
இந்த கூட்டத்தில் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை முக்கிய இடம் பிடிக்கும் எனத் தெரிகிறது. மேலும், இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் யார் என்பதும் முடிவு செய்ய இருப்பதாக தெரிகிறது.
ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் நிதிஷ் குமார் ஒருங்கிணைப்பாளராக நியமிக்க வேண்டும் என விரும்புகிறது. அதேவேளையில் திரிணாமுல் காங்கிரஸ் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இதுகுறித்து முக்கிய முடிவு எடுக்கப்படலாம்.
இந்தியா கூட்டணி உருவாவதற்கு நிதிஷ் குமார்தான் முக்கிய காரணம். இதனால் கடந்த கூட்டத்தின்போது ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டத்தின் பாதிலேயே வெளியேறியதாக கூறப்பட்டது. ஆனால் நிதிஷ் குமார் கட்சியினர் அதை மறுத்தனர்.

கடந்த கூட்டத்தின்போது, காங்கிரஸ் கட்சி டிசம்பர் மாதத்திற்குள் தொகுதி பங்கீடு குறித்து முடிவு எடுக்க வேண்டும் என கூட்டணியில் உள்ள சில கட்சிகள் கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
டெல்லி, பஞ்சாப், மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம், உத்தர பிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்களில் தொகுதி பங்கீடு குறித்து இறுதி முடிவு எடுக்க காங்கிரஸ்க்கு கடும் சவாலாக இருக்கும்.
- ஐபிஎல் போட்டி மார்ச் முதல் மே வரையில் நடத்தப்படுவது வழக்கம்.
- பாராளுமன்ற தேர்தல் இருப்பதால் போட்டிக்கான அட்டவணையை வெளியிட முடியாமல் இருக்கிறது பிசிசிஐ.
ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. ஆண்டுதோறும் இந்தப் போட்டி மார்ச் முதல் மே மாதம் வரை நடத்தப்படுகிறது.
17-வது ஐ.பி.எல். டி20 போட்டிக்கான அட்டவணை இதுவரை அறிவிக்கப்படவில்லை. பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) போட்டி அட்டவணையை அறிவிக்க முடியாமல் இருக்கிறது.
இந்த நிலையில் ஐ.பி.எல். போட்டி மார்ச் 22-ந்தேதி முதல் மே 26-ந்தேதி வரை நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
பாராளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகே ஐ.பி.எல். போட்டி அட்டவணை வெளியிடப்படும் என்று தெரிகிறது.
இது தொடர்பாக பி.சி.சி.ஐ. நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-
நாங்கள் ஐ.பி.எல். அட்டவணை பற்றி விவாதித்தோம். பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தேதிகள் குறித்து உள்துறை அமைச்சகம் மற்றும் தேர்தல் ஆணையத்தின் தகவலுக்காக காத்திருப்பது தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. ஐ.பி.எல். போட்டி நடைபெறும் நேரத்தில்தான் தேர்தல் வருகிறது.
ஐ.பி.எல். போட்டிகள் இந்தியாவில்தான் நடைபெறும். வேறு நாட்டுக்கு மாற்றுவது பற்றி எந்த யோசனையும் இல்லை. தேர்தல் தேதிக்காக காத்திருக்கிறோம். ஏனென்றால் அதன் அடிப்படை பாதுகாப்பு மற்றும் இதர ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்க வேண்டும்.
முழுப் போட்டியையும் இந்தியாவில் நடத்துவதில் நாங்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறோம். இது தொடர்பாக விரைவில் பேச்சுவார்த்தை நடத்துவோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- பாஜகவை எதிர்கொள்ள காங்கிரசுக்கு மம்தா சவால்.
- இஸ்லாமிய வாக்காளர்களை தூண்டிவிடுவதற்காக யாத்திரைக்கு வந்துள்ளனர்.
மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி இன்று காங்கிரசுக்கு எதிராக கடுமையான கருத்துகளை முன்வைத்தார்.
மேலும், இந்தியின் இதயப் பிரதேசமான மாநிலங்களில் பாஜகவை எதிர்கொள்ள காங்கிரசுக்கு மம்தா சவால் விடுத்தார்.
காங்கிரஸின் பாரத் ஜோடோ யாத்திரையில் ராகுல் காந்தி, மாநிலத்தின் ஆறு மாவட்டங்களில் பயணித்ததையும் மம்தா விமர்சித்தார்.

இதுகுறித்து மம்தா பானர்ஜி மேலும் கூறியதாவது:-
நாடு முழுவதும் பாஜக முக்கிய எதிர்க்கட்சியாக இருக்கும் 300 இடங்களில் காங்கிரஸ் போட்டியிட வேண்டும் என்று நான் முன்மொழிந்தேன். ஆனால் அவர்கள் அதை ஏற்க மறுத்துவிட்டனர்.
இப்போது, இஸ்லாமிய வாக்காளர்களை தூண்டிவிடுவதற்காக அவர்கள் மாநிலத்திற்கு வந்துள்ளனர்.
காங்கிரஸ் 300 இடங்களில் போட்டியிட்டால் குறைந்தது 40 இடங்களையாவது பெறுவார்களா என்பது எனக்கு சந்தேகம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பாஜக சார்பில் ஜி.கே.வாசன் சுமார் அரைமணி நேரம் பேச்சுவார்த்தை.
- முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் நேற்றிரவு சந்தித்த நிலையில் சந்திப்பு.
டெல்லியில் பாராளுமன்ற வளாகத்தில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன்- பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் சந்தித்துள்ளனர்.
அப்போது, பாராளுமன்ற மக்களை தேர்தலில் கூட்டணி குறித்து பாஜக சார்பில் ஜி.கே.வாசன் சுமார் அரைமணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்று காலை பாமக நிறுவனர் ராமதாஸ் உடன் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் நேற்றிரவு சந்தித்த நிலையில், ஜி.கே.வாசன்- அன்புமணி ராமதாஸ் சந்தித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதாசாகு கடிதம் எழுதியிருந்தார்.
- இணை தேர்தல் அதிகாரிகளாக ஸ்ரீகாந்த் மற்றும் அரவிந்தன் நியமனம்.
பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்திற்கு கூடுதல் தேர்தல் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி, கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரியாக சங்கர்லால் குமாவத் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இணை தேர்தல் அதிகாரிகளாக ஸ்ரீகாந்த் மற்றும் அரவிந்தன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக, கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரிகளை நியமனம் செய்ய வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதாசாகு கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- கடமையுணர்வோடு ஓய்வின்றி உழைப்போம்.
- நாற்பதும் நமதே! நாடும் நமதே! என்பதை உறுதிசெய்வோம்.
வரும் பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணியை வெற்றி பெற செய்வோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டிருப்பதாவது:-
நாற்பதும் நமதே! நாடும் நமதே! என்பதை உறுதிசெய்யும் விதமாக மிக எழுச்சியோடு பிரமாண்டமாகத் தமிழ்நாடெங்கும் நடந்தேறியுள்ளன 'உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்'பொதுக்கூட்டங்கள்!
வெற்றிகரமாக இந்தக் கூட்டங்களை ஒருங்கிணைத்த மாவட்டக் கழகச் செயலாளர்கள் – கழக முன்னணியினர் என அனைவர்க்கும் பாராட்டுகள்! நன்றி!
2024 தேர்தல் வெற்றியை நோக்கிய நம் பயணத்தில் அடுத்த நூறு நாட்களும் மிக முக்கியமானவை. கடமையுணர்வோடு ஓய்வின்றி உழைப்போம்; இந்திய கூட்டணியை வெற்றி பெறச் செய்வோம்!
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
- எப்போதும் தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் இருப்பேன் என்று பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தெரிவித்தார்.
- நிதிஷ் குமாரின் இந்த உறுதியை கேட்ட பிரதமர் மோடி குலுங்கி குலுங்கி சிரித்தார்.
பீகார் மாநிலம் அவுரங்காபாத்தில் முதல்வர் நிதிஷ் குமாருடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று 21,400 கோடி ரூபாய் மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
அப்போது பேசிய பீகார் முதல்வர் நிதிஷ்குமார், வரும் மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 400-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என்று நம்புவதாக தெரிவித்தார்.மேலும் இனி எப்போதும் தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் இருப்பேன் என்று பிரதமருக்கு உறுதியளிக்கிறேன் என்றும் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தெரிவித்தார்.
நிதிஷ் குமாரின் இந்த உறுதியை கேட்ட பிரதமர் மோடி குலுங்கி குலுங்கி சிரித்தார்.
பீகாரின் முதலமைச்சராக பதவி வகிக்கும் நிதிஷ் குமார் கடந்த பிப்ரவரியில், ராஷ்டீரிய ஜனதாதள கட்சி தலைமையிலான மகா கூட்டணியில் இருந்து விலகி, பின்னர் பாஜகவுடன் இணைந்து கூட்டணி அமைத்து மீண்டும் முதலமைச்சரானார். கடந்த 10 ஆண்டுகளில் 7 முறை அவர் கூட்டணி மாறியுள்ளார் என்பது குறியப்படத்தக்கது.
- காங்கிரஸ் எம்.பி விஜய் வசந்த் உள்பட பலர் கலந்துக் கொண்டனர்.
- இளைஞர்கள் மத்தியில் காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் பேசினார்.
நாகரர்கோவிலில் இன்று, கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் எம்.பி விஜய் வசந்த் உள்பட பலர் கலந்துக் கொண்டனர்.

இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் டைசன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் லெனின் பிரசாத், அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் லாரன்ஸ், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொது செயலாளர் கே.ஜி. ரமேஷ் குமார் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பொதுக்கூட்டத்தில் பேசிய விஜய் வசந்த்," வரும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற இளைஞர்கள் பங்களிப்பு அதிகமாக இருக்க வேண்டும்" என்று குறிப்பிட்டார்.
- சர்வதேச எல்லைகள் கண்காணிப்பு மேலும் தீவிரப்படுத்தப்படும்.
- ஜம்மு காஷ்மீரில் 86.9 லட்சம் வாக்களார்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஜம்மு காஷ்மீரில் ஆய்வு நடத்திய பிறகு தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தகவல் தெரிவித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலை நடத்த தயாராக உள்ளோம். அதற்கான பணிகள் முழுவீச்சுடன் நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் தங்களது முழு ஒத்துழைப்பை அளிக்க வேண்டும்.
போலிச் செய்திகள் பரவுவதை தடுக்க அனைத்து மாவட்டங்களிலும் சமூக ஊடகப் பிரிவு ஏற்படுத்தப்படும்.
மக்களவை தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மாநில எல்லைகள் மற்றும் சர்வதேச எல்லைகள் கண்காணிப்பு மேலும் தீவிரப்படுத்தப்படும்.
ஜம்மு காஷ்மீரில் மக்களவைத் தேர்தலில் அனைத்து கட்சிகளுக்கும் சமமான வாய்ப்பு உறுதி செய்யப்படும்.
போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் அனைவருக்கும் சமமான மற்றும் போதிய பாதுகாப்பு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
ஜம்மு காஷ்மீரில் 86.9 லட்சம் வாக்களார்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
தேர்தல் பத்திர தரவுகள் நிச்சயம் குறித்த காலத்திற்குள் வெளியிடப்படும்.
எப்போதும் வெளிப்படைத் தன்மைக்கு ஆதரவாகவே உள்ளோம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.
- மக்களவை தேர்தலோடு சில மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தலும் நடைபெறவுள்ளது.
- ஜூன் 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
இந்தியாவில் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறும் என நேற்று தலைமை தேர்தல் ஆணையர்கள் ராஜீவ் குமார் அறிவித்தார்.
அதன்படி, வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கும் தேர்தல் ஜூன் 1-ம் தேதி முடிவடைகிறது.
மேலும், மக்களவை தேர்தலோடு சில மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தலும் நடைபெறவுள்ளதால், அம்மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டது.
மக்களவை, சட்டமன்ற மற்றும் இடைத்தேர்லுக்கு ஜூன் 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், அருணாச்சல பிரதேசம், சிக்கிமில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, சட்டப்பேரவைக்கு ஜூன் 4ம் தேதிக்கு பதிலாக ஜூன் 2ம் தேதியே வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மக்களவை தேர்தலுக்கு ஏற்கனவே அறிவித்தபடி ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
- மார்ச் 31ம் தேதி வரையிலான முதற்கட்ட பிரசார பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
- மார்ச் 24ம் தேதி மாலை 4 மணிக்கு திருச்சியில் பிரசாரம் செய்கிறார்.
7 கட்டங்களாக நடைபெற உள்ள மக்களவை தேர்தல் முதற்கட்டமாகவும், ஒரே கட்டமாகவும் தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19ம் தேதி அன்று நடைபெறுகிறது.
பெரும்பாலான கட்சிகள் தங்களின் கூட்டணியை முடிவு செய்துள்ள நிலையில், பிரசாரத்தையும் தொடங்கியுள்ளன.
இந்நிலையில், அதிமுக வரும் மார்ச் 31ம் தேதி வரையிலான முதற்கட்ட பிரசார பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, மார்ச் 24ம் தேதி மக்களவை தேர்தல் பிரசாரத்தை அதிமுக பொச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடங்குகிறார்.
மார்ச் 24ம் தேதி மாலை 4 மணிக்கு திருச்சியில் பிரசாரம் செய்கிறார்.
மார்ச் 26ம் தேதி மாலை 4 மணிக்கு தூத்துக்குடியிலும், அன்று இரவு 7 மணிக்கு திருநெல்வேலியிலும் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார்.
மார்ச் 27ம் தேதி மாலை 4 மணிக்கு கன்னியாகுமரியிலும், இரவு 7 மணிக்கு தென்காசி (தனி), 28ம் தேதி விருதுநகர், ராமநாதபுரத்திலும் பிரசாரம் செய்கிறார்.
தொடர்ந்து, 29ம் தேதி காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூரிலும் பிரசாரம் மேற்கொள்கிறார்.