search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Lord Shiva"

    திருப்பாலத்துறை பாலைவனநாதர் கோவிலில் சூரியகதிர் சிவன் மீது படும் அற்புத நிகழ்வு நடந்தது.
    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் திருப்பாலத்துறை பாலைவனநாதர் கோவிலில் நீண்ட ஆண்டுக ளுக்கு பிறகு வைகாசி ஞாயிறை முன்னிட்டு ஐந்து நிமிடம் சாமி மீது சூரியகதிர் படும் அற்புத நிகழ்வு நடந்தது. இதனை அறிந்த பக்தர்கள் கோவிலுக்கு சென்று பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் சூரிய பூஜை செய்து வழிபட்டனர்.

    நிகழ்ச்சியில் கோவில் செயல் அலுவலர் ஹரிஷ் குமார், தக்கார் லட்சுமி, கோயில் கணக்கர் சங்கரமூர்த்தி, கிராமமக்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • குரு வேறு; தட்சிணாமூர்த்தி வேறு என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.
    • பொருளாதாரம் உயரவேண்டுமானால் குருவை வழிபடவேண்டும்.

    ஆதிபரம்பொருளாகிய இறைவன் தன் சக்தியை பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் என மூன்று அம்சங்களாக்கினார்.

    பிரம்மதேவர் படைப்புத் தொழிலில் தனக்கு உதவிபுரிய சப்த ரிஷிகளை உருவாக்கினார். அந்த ஏழு ரிஷிகள் மூலம் மனித, அசுர இனங்கள் தோன்றின. அந்த ஏழு ரிஷிகளில் ஆங்கிரஸ முனிவரின் மகன்தான் பிரகஸ்பதி எனும் வியாழ பகவான்.

    பிரகஸ்பதி குருவானது எப்படி?

    வாழ்வில் உயர்ந்த இடத்தை அடையவேண்டும் என்று லட்சியம் கொண்ட பிரகஸ்பதி நான்கு வகை வேதங்களையும் கற்று, பல யாகங்களும் ஹோமங்களும் செய்தார். அஸ்வமேத யாகம் போன்ற சிறந்த யாகங்களை நூற்றுக்கும்மேல் செய்தார். இப்படி சிறப்பான ஹோமங்களைச் செய்து மிகச்சிறந்த முறையில் தேர்ச்சி பெற்றவர்களில் ஒருவர்தான் தேவர்களுக்கு குருவாக முடியும். அதன்படி தேர்வு பெற்று பிரகஸ்பதி தேவர்களுக்கு குருவானார்.

    அத்துடன் அவர் திருப்தி அடைந்துவிடவில்லை. தேவ குருவைவிட சிறப்பான இடத்தை அடைய மேலும் பல அரிய ஹோமங்களும் யாகங்களும் செய்ததுடன், திட்டை தலத்துக்கு வந்து, அங்கு கோவில் கொண்டுள்ள வசிஷ்டேஸ்வரரைக் குறித்து கடுந்தவம் புரிந்தார். அவர் தவத்துக்கு மெச்சிய சிவபெருமான் அவருக்கு நவகிரக பதவியை வழங்கினார்.

    அதன்படி நவகிரகங்களில் சுபகிரகமான குரு பகவானாக ஏற்றம் பெற்றார். அது முதற்கொண்டு திட்டையில் சுவாமி சந்நிதிக்கும், அம்பாள் சந்நிதிக்கும் இடையில் குரு பகவான் தனிச்சந்நிதியில் அருள்பாலித்து வருகிறார்.

    சிவபெருமானின் ஞானவடிவமான தட்சிணாமூர்த்தி ஆதிகுரு என அழைக்கப்படுகிறார்.

    இவரை வழிபடுபவர்களுக்கு அருளையும், ஞானத்தையும் வழங்கக்கூடியவர். எல்லா சிவன் கோவில்களிலும் தென் கோஷ்டத்தில் இவர் எழுந்தருளியிருப்பார். குரு பகவான் இல்லாத திருக்கோவில்களில் தட்சிணாமூர்த்தியையே குருவாக பாவித்து வழிபடுகின்றனர். ஆனால் குரு வேறு; தட்சிணாமூர்த்தி வேறு என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். குருவுக்கு செய்யும் பரிகாரங்களை குருவுக்கே செய்யவேண்டும்.

    குருவால் ஏற்படும் தோஷங்களுக்கு குருவையே வழிபடவேண்டும். உலகம் முழுவதும் உள்ள பணம், பொன் விஷயங்களுக்கு குருவே அதிபதி. எனவே பொருளாதாரம் உயரவேண்டுமானால் குருவை வழிபடவேண்டும். உங்களுக்கு பொருள் வந்துவிட்டது. அடுத்தது என்ன, திருமணம்தானே? அதற்கும் குருவின் அருள் வேண்டும்.

    குரு பலம்

    ஒருமுறை பார்வதி தேவியானவர் பூவுலகில் பிறந்து, சிவபெருமானை திருமணம் செய்துகொள்ள கடுந்தவம் புரிந்தார். நாட்கள் கடந்துகொண்டே இருந்தன. ஆனால் திருமணம் கைகூடி வரவில்லை. தேவர்கள் சிவ பெருமானிடம் சென்று தேவியை மணந்து கொள்ளவேண்டுமென்று முறையிட்டனர். அப்போது சிவன், "தேவியைத் திருமணம் செய்துகொள்ள நானும் தயாராகவே இருக்கிறேன். ஆனால் என்ன செய்வது? தேவிக்கு இன்னும் குரு பலம் வரவில்லையே' என்றார். உலக அன்னையான தேவிக்கே குரு பலம் இருந்தால்தான் திருமணம் நடைபெறும் எனும்போது சாமான்யர்களான நம் நிலை என்ன? எனவே திருமணம் தடைப்படுபவர்கள் அவர் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் திட்டைக்கு வந்து சுவாமி, அம்பாளை தரிசனம் செய்து, குரு பகவானை அபிஷேகம், அர்ச்சனை செய்து வணங்கினால், திருமணத்தடை விலகும் என்பது ஐதீகம்.

    சரி; பொருள் சேர்ந்துவிட்டது. திருமணமும் ஆகிவிட்டது. குழந்தை வரம் கிடைக்க வில்லை. அப்போதும் குரு பகவானையே வழிபடவேண்டும். ஏனென்றால் குரு பகவான் புத்திரகாரகன் என்று அழைக்கப்படுகின்றார்.

    அவர் அருள் இருந்தால்தான் குழந்தை பிறக்கும்.

    நவீன விஞ்ஞான ஆய்வுகளும் இதையே கூறுகின்றன. வியாழகிரகத்திலிருந்து வரும் மஞ்சள் நிறமான மீத்தேன் கதிர்கள்தான் உயிரினங்கள் உண்டாகக் காரணமென்று அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    வித்யாகாரகன் குரு பகவான்

    குருவருளால் பொருள், திருமணம், குழந்தைச் செல்வம் என எல்லாம் பெற்று விட்டீர்கள். அந்தக் குழந்தை நல்லபடியாகப் படித்து முன்னேற வேண்டும் அல்லவா? அதற்கும் குரு பகவான்தான் அருளவேண்டும். கல்வியில் முன்னேற்றம், வேத வேதாந்த சாஸ்திர அறிவு, நல்ல புத்தி, ஞாபக சக்தி அனைத்தையும் வழங்குபவர் குரு பகவான்தான். அப்படி நல்லபடியாகப் படித்துத் தேறிய குழந்தைகளுக்கு உரிய பதவியை வழங்குபவரும் குரு பகவான் தான். அவர் அருளால்தான் அரசியல் தொடர்பான சட்டமன்ற உறுப்பினர், நாடாளு மன்ற உறுப்பினர், அமைச்சர் ஆகிய பதவிகள் கிடைக்கும். அதுபோலவே நீதிபதிகள், வழக்கறிஞர்கள், வங்கிகள் மற்றும் முக்கியமான நிர்வாகத் துறைகளில் உயர் பதவிகளில் இருப்பவர்கள் அனைவரும் குரு அருள் பெற்றவர்களாகவே இருப்பார்கள்.

    குரு பார்க்க கோடி நன்மை

    நவகிரகங்களில் முழுமையான சுப கிரகம் குரு பகவான் ஒருவரே. சந்திரன் சுபரானாலும் இவர் வளர்பிறையில் மட்டுமே சுபராகக் கருதப்படுவார். புதன் சுபகிரகங்களோடு சேரும்போது மட்டுமே சுபர். அசுப கிரகங்களோடு சேரும்போது பாபத் தன்மை அடைந்துவிடுவார். சுக்கிரன் சுப கிரகமானாலும் அவர் அசுர இனத்தில் பிறந்ததால் அவரை முழு சுபராக ஏற்பதில்லை. எனவே, தேவகுருவான குரு பகவானே முழுச்சுபராக கருதப்படுகின்றார்.

    சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது ஆகிய ஐந்து கிரகங்களையும் முழு பாப கிரகங்களாக ஜோதிட சாஸ்திரம் நிர்ணயித்துள்ளது. இந்த ஐந்து கிரகங்களினால் வரும் தோஷங்களைக் கட்டுப்படுத்துகிற சக்தி முழு சுபகிரகமான குரு பகவானுக்கு உண்டு. குருவின் 5, 7, 9-ஆம் பார்வைகள் சிறப்பாகச் சொல்லப்படுகிறது. எனவேதான் "குரு பார்க்க கோடி தோஷம் விலகும்', "குரு பார்க்க கோடி நன்மை' என்று பழமொழிகள் உருவாகின.

    • சென்னிமலை மலை கோவிலுக்கு செல்லும் பார்க் ரோட்டில் வைகை கரை அமைக்கப்பட்டிருந்தது.
    • கைலாசநாதர், சிவகாசி அம்மாள் மற்றும் வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியசுவாமி சகடை தேரில் எழுந்தருளி வைகை கரைக்கு வந்தனர்.

    சென்னிமலை:

    மதுரை மாநகரில் முன்பு ஒரு காலத்தில் வந்தி அம்மையார் என்ற மூதாட்டி, பிட்டு அமுது சமைத்து அதை விற்று பிழைத்து வந்தார்.

    வைகை நதியில் வெள்ள ப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் துன்பம் அடைந்து பாண்டிய அரசனிடம் முறையிட்டனர். அப்போது அரசன் உடனடி–யாக மந்திரியை அழைத்து வீட்டுக்கு ஒருவர் வைகை கரைக்கு சென்று கரையை அடைக்க வேண்டும் என உத்தரவிட்டான்.

    வந்தி மூதாட்டி தன்னுடைய முதுமை காரணமாக வேலைக்கு செல்ல முடியாமல் கூலிக்கு ஆள் தேடியும் கிடைக்க வில்லை. பிறகு தான் எந்நேரமும் போற்றும் சிவபெருமானை வணங்கி கொண்டிருந்தார்.

    அப்போது சுந்தரேச பெருமான் கூலி ஆளாக வந்தி மூதாட்டி முன்பு நின்று, தான் பிட்டு உணவையே கூலியாக பெற்று கொள்வதாக கூறி வேலைக்கு சென்று வைகை கரையை அடைத்தார். இறுதியில் வந்தி மூதாட்டி க்கும் பாண்டிய மன்னனுக்கும் சிவபெருமான் தரினசமாக காட்சியளித்தார்.

    அந்த நாளே ஆவணி மாத மூல நட்சத்திர நாளாக கருதப்படுவது உண்டு. சென்னிமலையில் உள்ள கைலாசநாதர் கோவிலில் இவ்விழா கடந்த 42 வருடங்களாக நடைபெற்று வருகிறது. இந்த வருட விழா நேற்று காலை 10 மணிக்கு கைலாசநாதருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    சென்னிமலை மலை கோவிலுக்கு செல்லும் பார்க் ரோட்டில் வைகை கரை அமைக்கப்பட்டிருந்தது. மாலை 4.20 மணிக்கு வைகை கரைக்கு கைலாசநாதர், சிவகாசி அம்மாள் மற்றும் வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியசுவாமி சகடை தேரில் எழுந்தருளி வைகை கரைக்கு வந்தனர்.

    சென்னிமலை முருகன் கோவில் தலைமை குருக்கள் ஸ்ரீலஸ்ரீ ராமநாத சிவாச்சாரியார் மற்றும் மதி சிவாச்சாரியார் தலைமையில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    ஓதுவார் மூர்த்தி ஆனந்த் சிவபெருமானின் பிட்டுத் திருவிளையாடல் குறித்து பாடல்களை பாடினார். இதில் ஏராளமாக பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

    • சென்னி மலை கைலாசநாதர் கோவிலில் பிட்டு திருவிழா கடந்த 42 வருடங்களாக நடைபெற்று வருகிறது.
    • இதைதொடர்ந்து ஓதுவார் மூர்த்தி ஆனந்த் சிவபெருமானின் பிட்டுத் திருவிளையாடல் குறித்து பாடல்களை பாடி வழிபாடு நடக்கும்.

    சென்னிமலை:

    மதுரை மாநகரில் முன்பு ஒரு காலத்தில் வந்தி அம்மையார் என்ற மூதாட்டி, பிட்டு அமுது சமைத்து அதை விற்று பிழைத்து வந்தார். வைகை நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் துன்பம் அடைந்து பாண்டிய அரசனிடம் முறையிட்டனர்.

    அப்போது அரசன் உடனடியாக மந்திரியை அழைத்து வீட்டுக்கு ஒருவர் வைகை கரைக்கு சென்று கரையை அடைக்க வேண்டும் என உத்தர விட்டார். வந்தி மூதாட்டி தன்னுடைய முதுமை காரணமாக வேலைக்கு செல்ல முடியாமல் கூலிக்கு ஆள் தேடியும் கிடைக்க வில்லை.

    இதையடுத்து அவர் சிவபெருமானை வணங்கி கொண்டிருந்தார். அப்போது சுந்தரேச பெருமான் கூலி ஆளாக வந்தி மூதாட்டி முன்பு நின்றார். தான் பிட்டு உணவையே கூலியாக பெற்று கொள்வதாக கூறி வேலைக்கு சென்று வைகை கரையை அடைத்தார்.

    இதை தொடர்ந்து வந்தி மூதாட்டிக்கும் பாண்டிய மன்னனுக்கும் சிவ பெரு மான் தரிசனமாக காட்சி அளித்தார். அந்த நாளே ஆவணி மாத மூல நட்சத்திர நாளாக கருதப்படுகிறது.

    இதையொட்டி சென்னி மலை கைலாசநாதர் கோவிலில் பிட்டு திருவிழா கடந்த 42 வருடங்களாக நடைபெற்று வருகிறது.

    இதையொட்டி இந்த ஆண்டுக்கான பிட்டு திருவிழா வருகிற 5-ந் தேதி (திங்கட்கிழமை) நடக்கிறது.

    அன்று காலை 10 மணிக்கு கைலாசநாதருக்கு சிறப்பு அபிஷேகம் நடை பெறுகிறது. சென்னிமலை கோவிலுக்கு செல்லும் பார்க் ரோட்டில் வைகை கரை அமைக்க ப்பட்டு மாலை 3.20 மணிக்கு வைகை கரைக்கு கைலாச நாதர், அலமேலுமங்கை மற்றும் வள்ளி தெய்வானை யுடன் சுப்பிரமணியசுவாமி தேரில் அருள் பாலிக்கிறார்.

    இதைதொடர்ந்து ஓதுவார் மூர்த்தி ஆனந்த் சிவபெருமானின் பிட்டுத் திருவிளையாடல் குறித்து பாடல்களை பாடி வழிபாடு நடக்கும்.

    இதற்கான ஏற்பாடுகளை பிட்டு திருவிழா குழு தலைவர் ஜெயலட்சுமி பரமானந்தன் தலைமையில் செய்து வருகின்றனர். 

    • பிரதோஷத்தை முன்னிட்டு அபிஷேக பூஜை, சிறப்பு யாகம், ஆராதனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
    • காமாட்சிபுரம் ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் சிறப்பு பூஜைகளை நடத்தி வைத்தார்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள சித்தம்பலம் நவகிரக கோட்டையில் பிரதோஷத்தை முன்னிட்டு அபிஷேக பூஜை, சிறப்பு யாகம், ஆராதனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    பிரதோஷத்தை முன்னிட்டு அம்மையப்பர் கோவில் திருவீதி உலா நடைபெற்றது. காமாட்சிபுரம் ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் சிறப்பு பூஜைகளை நடத்தி வைத்தார். இதேபோல பல்லடம் பொங்காளியம்மன் கோவில், அருளானந்த ஈஸ்வரர் கோவில், மாதப்பூர் முத்துக்குமாரசாமி மலைக்கோவில் உள்ளிட்ட சிவன் கோவில்களில் பிரதோசத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    இதில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமியை வழிபட்டனர்.

    • பிரதோச நாளில் கோவிலுக்கு சென்று வணங்குவது சிறந்த பலன் அளிக்கும் என முன்னோர்கள் கூறுகின்றனர்.
    • குரு பகவான் பிரதோசத்தை முன்னிட்டு அபிசேக பூஜை,சிறப்பு யாகம் ஆராதனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    பல்லடம் :

    பல்லடம் பகுதியில் உள்ள சிவாலயங்களில் பிரதோசத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. சிவாலயங்களில் பிரதோசதினத்தில் சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம்.

    சிவபெருமானை தினமும் வணங்கினாலும் பிரதோச நாளில் கோவிலுக்கு சென்று வணங்குவது சிறந்த பலன் அளிக்கும் என முன்னோர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில் பல்லடம் அருகே உள்ள சித்தம்பலம் நவகிரக கோட்டையில் குரு பகவான் பிரதோசத்தை முன்னிட்டு அபிசேக பூஜை,சிறப்பு யாகம் ஆராதனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பிரதோசத்தை முன்னிட்டு அம்மையப்பர் கோவில் திருவீதி உலா நடைபெற்றது. காமாட்சிபுரம் ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் சிறப்பு பூஜைகளை நடத்தி வைத்தார். இதேபோல பல்லடம் பொங்காளியம்மன் கோவில், அருளானந்த ஈஸ்வரர்கோவில், மாதப்பூர் முத்துக்குமாரசாமி மலைக்கோவில் உள்ளிட்ட சிவாலயங்களில் பிரதோசத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவபெருமானை வழிபட்டனர்.

    சிவபெருமான் உருவத்தில் இம்ரான் கான் படம் சித்தரிக்கப்பட்டது இந்துக்களின் மனதை புண்படுத்தியதால், இன்ரான்கான் மீது எம்.பி. ரமேஷ் லால் மத அவமதிப்பு புகாரளித்துள்ளார். #ImranKhan
    இஸ்லாமாபாத்:

    முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான்கான் படம் சிவபெருமான் வேடத்தில் சமூக வலை தளங்களில் வெளியிடப்பட்டது.

    இதற்கு பாகிஸ்தானில் இந்துக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மத உணர்வை புண்படுத்துவதாக கூறி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

    இந்த நிலையில் பாகிஸ்தானை சேர்ந்த இந்து மத எம்.பி. ரமேஷ் லால், இம்ரான்கான் மீது மத அவமதிப்பு புகார் தெரிவித்துள்ளார். இவர் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவராக இருக்கிறார்.

    சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி மியான் சாகிப் நிகார் மற்றும் ராணுவ தலைமை நீதிபதி உமர் ஜாவீத் பஜ்வா ஆகியோரிடம் மேல் முறையீடு செய்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறும்போது, “சிவபெருமான் உருவத்தில் இம்ரான்கான் சித்தரிக்கப்பட்டது பாகிஸ்தானில் வாழும் ஆயிரக்கணக்கான இந்துக்களின் மனதை புண்படுத்திவிட்டது. இது மத அவமதிப்பாகும். இதன் மீது அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என கருதுகிறேன்” என தெரிவித்துள்ளார். #ImranKhan #LordShiva
    ×