என் மலர்
நீங்கள் தேடியது "lorry"
- தென்காசி நகராட்சியில் குடிநீர் வினியோகம் செய்வதற்காக புதிய குடிநீர் லாரி வாங்கப்பட்டுள்ளது.
- குடிநீர் லாரி சேவையை நகர்மன்றத்தலைவர் சாதிர் தொடங்கி வைத்தார்.
தென்காசி:
தென்காசி நகராட்சியில் குடிநீர் வினியோகம் செய்வதற்காக ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் சுமார் 6 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட புதிய குடிநீர் லாரி வாங்கப்பட்டுள்ளது.
புதிதாக வாங்கப்பட்டுள்ள இந்த லாரியை பொதுமக்களின் சேவைக்காக நகராட்சி அலுவலகத்தில் வைத்து நகர்மன்ற துணைத்தலைவர் சுப்பையா முன்னிலையில், நகர்மன்றத்தலைவர் சாதிர் தொடங்கி வைத்தார்.
இதில் நகராட்சி ஆணையாளர் பாரிஜான், பொறியாளர் கண்ணன் மற்றும் சுகாதார அலுவலர் முகம்மது இஸ்மாயில், நகர்மன்ற உறுப்பினர்கள் வசந்தி வெங்கடேஸ்வரன், ராமகிருஷ்ண்ணன், முருகன், அபுபக்கர், ஜெயலெட்சுமிசாமி, பூமாதேவி, மகேஸ்வரி, சுனிதா, கார்த்திகா, கல்பனாகங்காதரன், சுல்தான் ஷெரீப்காமில், ஆசிக்முபினாசன்ராஜா, செய்யதுசுலைமான், ரபீக், சுப்பிரமணியன், நாகூர்மீரான், பிரேம்குமார், பொருளாளர் ஷேக்பரீத், வட்ட நிர்வாகிகள் அருணாசலம், சாரதிமுருகன், அருணாச்சலம், மாணவரணி ராஜன், கங்காதரன், சபரிமெஸ்சங்கர், முரளிரஞ்சித் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் துறைசார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- போலீஸ் குடியிருப்புக்குள் லாரியை நிறுத்தி பைப்புகளை திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
- ரூ.90 ஆயிரம் மதிப்புள்ள 30 இரும்பு பைப்புகள் பதுக்கியிருந்தது தெரிய வந்தது.
மதுரை
மதுரை திடீர் நகர் போலீஸ் குடியிருப்பில் இரும்பு பைப்புகள் பாதுகாக்கப்பட்டு வந்தன. மர்ம நபர்கள் 30 இரும்பு பைப்புகளையும் திருடி சென்று விட்டனர். இது குறித்து கான்டிராக்டர் பாண்டி, திடீர் நகர் போலீசில் புகார் செய்தார்.
இன்ஸ்பெக்டர் லோகேசுவரி வழக்குப் பதிவு செய்தார். போலீசார் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.அப்போது போலீஸ் குடியி ருப்புக்குள் லாரியில் இரும்பு பைப்புகளை எடுத்து செல்வது தெரிய வந்தது.
அந்த லாரியின் பதிவெண் பற்றிய விவரம் தெரிய வந்தது. அதன்பேரில் போலீசார் அவனியாபுரம் எம்.எம்.சி காலனியில் பதுங்கி இருந்த வாலிரை பிடித்தனர். அங்கு நிறுத்தப்பட்டிருந்த லாரியில் ரூ.90 ஆயிரம் மதிப்புள்ள 30 இரும்பு பைப்புகள் பதுக்கியிருந்தது தெரிய வந்தது.
இரும்பு பைப்புகளுடன் லாரியையும் பறிமுதல் செய்த போலீசார், பிடி பட்ட வாலிபரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அவர் ஆந்திர மாநிலம், குண்டூர், சிரங்கி பாலத்தை சேர்ந்த தும்மா மார் ரெட்டி (28) என்பது தெரியவந்தது. இவர் வேலை பார்க்கும் நிறுவனம், மதுரையில் புதைவட கம்பிகள் பதிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
அந்த நிறுவனத்துக்கு இரும்பு பைப்புகள் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனை சரி கட்டுவதற்காக அவர்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனாலும் இரும்பு பைப்புகள் கிடைக்க வில்லை. மதுரையில் பல்வேறு பகுதிகளில் தனியார் நிறுவனங்கள், புதைவட கம்பிகள் பதிக்கும் வேலையில் ஈடுபட்டு வருகின்றன. அவற்றில் ஏதேனும் ஒரு கம்பெனியில் உள்ள இரும்பு பைப்புகளை திருடுவது என்று அந்த வாலிபர் முடிவு செய்தார். அவர் லாரியை எடுத்துக் கொண்டு திடீர்நகர் போலீஸ் குடியிருப்புக்குள் லாரியை கொண்டு வந்து பைப்புகளை நைசாக திருடி சென்றது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
- சேலம் அன்னதா னப்பட்டி அருகே மணியனூர் உத்தரப்பன் காடு அடுத்த அம்பேத்கர் நகரில் வசிப்பவர் லாரி மோதி தனியார் நிறுவன ஊழியர் பலியானார்.
- அருகில் இருந்தவர்கள் மீட்டு உடனடியாக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் ஏற்கனவே இறந்துவிட்ட தாக தெரிவித்தனர்.
சேலம்:
சேலம் அன்னதா னப்பட்டி அருகே மணியனூர் உத்தரப்பன் காடு அடுத்த அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் கிரேஸ்குமார் (வயது 37). இவர் நேற்று காலை பள்ளப்பட்டி, மையனூர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது இவருக்கு பின்னால் வந்த லாரி, எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த கிரேஸ்குமாரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு உடனடியாக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கிரேஸ் குமாரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்ட தாக தெரிவித்தனர்.
இதுகுறித்து பள்ளப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து, லாரியை ஓட்டி வந்த தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள பழையூர் தோப்பு பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரன் (42) என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கண்டெய்னர் லாரி மோதி வாலிபர் பலியானார்.
- கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் முன்னால் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது பலமாக மோதியது.
திருமங்கலம்
திருவள்ளூர் மாவட்டம் புத்தாகரம் பகுதியைச் சேர்ந்தவர் காளியப்பன் மகன் ஈஸ்வரன் (வயது24). இவர் நெல்லையில் உள்ள தனது நண்பரை சந்திக்க மோட்டார் சைக்கிளில் சென்றார். அவர் திருமங்கலம் அருகே நான்கு வழிச்சாலையில் குதிரைசாரிகுளம் அருகே சென்றபோது, எதிர்பாராத விதமாக முன்னால் சென்ற கண்டெய்னர் லாரி மீது மோட்டார் சைக்கிள் பலமாக மோதியது.
இதில் படுகாயம் அடைந்த ஈஸ்வரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்து பற்றி அறிந்த போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து ஈஸ்வரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து தொடர்பாக ஈஸ்வரனின் தாய் மாரியம்மாள் திருமங்கலம் நகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் சரக்குகளை தேக்கி வைக்கும் குடோன்கள் மற்றும் லாரி செட்டுகள் இயங்கி வருகிறது.
- 500-க்கும் மேற்பட்ட டாரஸ் லாரிகள் போக்குவரத்து நெருக்கடி மிகுந்த சாலையில் வரிசையாக ஒன்றன்பின் ஒன்றாக நிறுத்தி வைக்கப்படுகிறது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் உப்பாற்று ஓடை ரவுண்டானா முதல் முத்தை யாபுரம் வரை குடியிருப்பு பகுதியில் ஏராளமான சரக்குகளை தேக்கி வைக்கும் குடோன்கள் மற்றும் லாரி செட்டுகள் இயங்கி வருகிறது.
போக்குவரத்து நெருக்கடி
இதன் காரணமாக எப்போதும் பரபரப்பாக காணப்படக் கூடிய திருச்செந்தூர் சாலையில் பள்ளி-கல்லூரி,தொழில் நிறுவனங்கள்,வணிக வளாகங்கள், பல ஆயிரக்கணக்கான வீடுகள் இருக்கக்கூடிய பகுதியில் மிகப்பெரிய போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது.
மேலும் மாதம் தோறும் குடோன்களில் சரக்குகளை இறக்க மற்றும் ஏற்றி செல்ல வரும் 500-க்கும் மேற்பட்ட டாரஸ் லாரிகள் போக்குவரத்து நெருக்கடி மிகுந்த சாலையில் வரிசையாக ஒன்றன்பின் ஒன்றாகவும், குறுக்கும் நெடுக்கமாகவும் நிறுத்தி வைக்கப்படுகிறது,இதன் காரணமாக மிகக் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அவசரமாக செல்லக்கூடிய இருசக்கர வாகன ஒட்டிகள் மற்றும் வாகனங்கள் விபத்து களில் சிக்கி வருகின்றனர்.
புகை மண்டலம்
மேலும் நெருக்கடி மிகுந்த சாலைகளில் டாரஸ் லாரிகள் மிக அதிவேகத்தில் செல்வதால் சாலையில் குவிந்து கிடக்கும் மணல்கள் தூசி புகை மண்டலமாக மாறி வருகிறது.
இதனால் நுரையீரல் சுவாச பாதிப்புகளுக்கு ஆளாகி வருகின்றனர். இது குறித்து மாவட்ட மாநகர நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட பாரதீய ஜனதா கட்சி பொதுச் செயலாளர் உமரி சத்தியசீலன் மற்றும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- வன அலுவலர்கள், ஊழியர்கள் ரோந்து சென்றபோது ஒரு லாரியை நிறுத்தி சோதனை செய்தனர்.
- உரிய அனுமதியுடன் தேக்கு மரங்களைகொண்டு செல்வது விசாரணையில் தெரிய வந்தது.
நெல்லை:
களக்காடு- முண்டந் துறை புலிகள் காப்பகம், அம்பை வனக்கோட்டத்திற் குட்பட்ட பகுதிகளில் வன அலுவலர்கள்- ஊழியர்கள் ரோந்து சென்றனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு லாரியை நிறுத்தி சோதனை செய்தனர்.அதில் தேக்கு மர தடிகள் இருந்தன.
இது தொடர்பாக விசாரித்த போது அவை கட்டளை மலை எஸ்டேட் பகுதியில் தனியார் ஒருவருக்கு சொந்தமான இடத்தில் காற்றில் விழுந்த பட்டு போன தேக்கு மரங்களை அப்புறப்படுத்த உரிய அனுமதி பெற்று கொண்டு செல்வது தெரிய வந்தது. எனினும் அந்த தடி மரங்களில் சொத்து குறியீடு இல்லாத காரணத்தினால் ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
- தனியார் ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
- விபத்து குறித்து வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வெள்ளகோவில் :
திருவாரூர் மாவட்டம் கோவில்பத்து என்ற பகுதியை சேர்ந்த பரணி (வயது 20) என்பவர் வெள்ளகோவில் பகுதியில் தங்கி ஓயி எந்திரம் மெக்கா னிக்காக வேலை செய்து வந்தார். நேற்று இரவு கோவை -திருச்சி ரோட்டில் வெள்ளகோவில் அருகே உள்ள சொரியங்கிண த்துப்பாளையம் பிரிவு ரோடு அருகே பைக்கில் சென்ற போது பரமத்தி யிலிருந்து திருப்பூரை நோக்கி வந்த டிப்பர் லாரி பரணி மீது மோதியது, இதனால் பலத்த அடிபட்ட பரணியை அருகில் இருந்தவர்கள் மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். டாக்டர்கள் பரிசோதித்த போது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவி த்தனர்.
இந்த விபத்து குறித்து வெள்ள கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி, சப் இன்ஸ்பெ க்டர் கே. ராசு ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- அக்கம் - பக்கம் உள்ளவர்கள் மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
- விபத்து குறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள பருவாய் ஊராட்சி ஆறாகுளம் பகுதியை சேர்ந்தவர் வேலுச்சாமி (வயது 55) விவசாயி. நேற்று இவர் பல்லடம் மாணிக்காபுரம் பகுதியில் உள்ள உறவினரை பார்க்க ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார்.ஸ்கூட்டர் பல்லடம்- மாணிக்காபுரம் ரோடு அம்மாபாளையம் பிரிவு அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த லாரி எதிர்பாராதவி தமாக இவர் மீது மோதியது.இதில், பலத்த காயமடை ந்தவரை அக்கம் - பக்கம் உள்ளவர்கள் மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு ள்ளனர்.
- சாலையோரம் நின்ற லாரி மீது ஆட்டோ மோதி விபத்து ஏற்பட்டது.
- காயம் அடைந்தவர்களை மதுரை அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
வாடிப்பட்டி
கோவையில் இருந்து திராட்சை பழங்களை ஏற்றிக்கொண்டு லாரி மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட்டுக்கு வந்தது. அங்கு பழங்களை இறக்கி விட்டு மீண்டும் கோவை செல்வதற்காக மதுரையில் இருந்து புறப்பட்டது.
மதுரை- திண்டுக்கல் தேசிய நான்கு வழிச்சாலையில் இன்று காலை சமயநல்லூர் அருகே உள்ள கட்டப்புளிநகர் கருப்பு கோவில் முன்பு லாரியை நிறுத்திவிட்டு டிரைவர் குளிக்க சென்றார்.
அப்போது சமயநல்லூரில் இருந்து பிஸ்கட் தொழிற்சாலையில் வேலை பார்க்கும் மீனா, மலர்விழி வள்ளியம்மாள் மற்றும் ஒருவரை ஏற்றிக்கொண்டு ஷேர் ஆட்டோ நகரிக்கு சென்று கொண்டிருந்தது. இதை டிரைவர் முருகன் ஓட்டினார்.
அந்த ஆட்டோ எதிர்பாராத விதமாக சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரியின் பின்புறம் மோதியது.
இதில் ஆட்டோவின் மேற்கூரை சேதமடைந்தது. இதில் பயணம் செய்த 5 பேரும் ஈடுபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்தனர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து இடுபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர்.
இந்த விபத்து குறித்து தகவலறிந்த சமயநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கேசவ ராமச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படு காயம் அடைந்தவர்களை மதுரை அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
- அலங்காநல்லூர் அருகே லாரி மோதி தொழிலாளி பலியானார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே குமாரத்தை சேர்ந்தவர் ஜெயசூர்யா (வயது25), கட்டிட தொழிலாளி. இவர் இரு சக்கர வாகனத்தில் பாசிங்காபுரம் பகுதியில் இருந்து குமாரம் நோக்கி வந்து கொண்டிருந்தார். ரங்கராஜபுரம் அருகே வந்தபோது எதிரே வந்த சரக்கு லாரி ஜெயசூர்யா ஓட்டி வந்த பைக் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
இச்சம்பவம் குறித்து அலங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.
- தடுமாறி விழுந்த அந்த பெண் மீது லாரி டயர் ஏறியது.
- உயிரிழந்த பெண் ரம்மதபுரத்தை சேர்ந்த மாதவி என்பது விசாரணையில் தெரியவந்தது.
நெல்லை:
ராதாபுரம் அருகே சீலாத்திகுளத்தில் இருந்து முடவன்குளத்திற்கு செல்லும் சாலையில் இன்று காலை கனரக வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. எதிரே ஒரு பெண் மொபட்டில் வந்து கொண்டிருந்தார். எதிர்பாராதவிதமாக லாரியின் பின்பக்க டயரில் மொபட் சிக்கியது.
இதில் தடுமாறி விழுந்த அந்த பெண் மீது லாரி டயர் ஏறியது. இதனால் சம்பவ இடத்திலேயே அந்த பெண் ரத்த வெள்ளத்தில் பலியானார். உடனே லாரி டிரைவர் அங்கேயே லாரியை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
தகவல் அறிந்த ராதாபுரம் போலீசார் அங்கு விரைந்த சென்றனர். விபத்தில் சிக்கி இறந்த பெண் யார் என்று விசாரணை நடத்தியதில், அவர் திசையன்விளை அருகே உள்ள ரம்மதபுரத்தை சேர்ந்த மாதவி(வயது 45) என்பதும், அவர் தெற்கு கள்ளிகுளம் அருகே ஆறுபுளியில் ஒரு பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து ராதாபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- சரக்கு லாரி ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளி பேருந்தின் பின்புறமாக பக்கவாட்டில் மோதியது.
- விபத்தில் பள்ளி பேருந்தில் பயணித்த 6ம் வகுப்பு மாணவன் , 7-ம் வகுப்பு மாணவி ஆகிய இருவர் காயம் அடைந்தனர்.
பல்லடம் :
பல்லடம் - தாராபுரம் சாலையில் தனியார் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. நேற்று மாலை பள்ளி முடிந்து மாணவ, மாணவிகள் 25க்கும் மேற்பட்டோரை பள்ளி வேனில் ஏற்றிக்கொண்டு கோவை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்ற பள்ளி பேருந்து பனப்பாளையத்தில் இருந்து பெத்தாம்பாளையம் செல்லும் சாலையில் வலது ஓரமாக திரும்ப முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது சென்னையில் இருந்து கோவை நோக்கி வந்த சரக்கு லாரி ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளி பேருந்தின் பின்புறமாக பக்கவாட்டில் மோதியது.அதன் பின்னரும் நிற்காமல் அருகே உள்ள பெருமாள் கோவில் சுற்று சுவரில் மோதி நின்றது.
இந்த விபத்தில் பள்ளி பேருந்தில் பயணித்த 6ம் வகுப்பு மாணவன் , 7-ம் வகுப்பு மாணவி ஆகிய இருவர் காயம் அடைந்தனர். மேலும் பேருந்தில் பயணித்த 20க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து அங்கு விரைந்து சென்ற பல்லடம் போலீசார் விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். மேலும் விபத்துக்குள்ளான பள்ளி வேனில் இருந்த மாணவ, மாணவிகளை மாற்று வாகனம் மூலம் அனுப்பி வைத்தனர்.
விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் ராஜா என்பவரை பிடித்து பல்லடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இதே போல் பல்லடம் - தாராபுரம் சாலை பிரிவு அருகே தேனி மாவட்டம் குமுளியில் இருந்து 25க்கும் மேற்பட்ட பயணிகளுடன் கோவை மேட்டுப்பாளையம் நோக்கி சென்ற அரசுப் பேருந்து ஒன்று முன்னாள் சென்ற சொகுசு காரின் பின்புறமாக மோதி விபத்து ஏற்பட்டது .இதில் சொகுசு கார் ரோட்டோர பள்ளத்தில் கவிழ்ந்து அப்பளம் போல் நொறுங்கியது. காரை ஓட்டி வந்த ஓட்டுநர் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். பல்லடத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்த இரு வேறு சாலை விபத்துக்கள் குறித்து பல்லடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.