search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Lotter prize"

    கேரளாவில் நெல்லையை சேர்ந்தவரிடம் விற்காமல் இருந்த லாட்டரி சீட்டில் ரூ.5 கோடி பரிசு கிடைத்த சம்பவம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    திருவனந்தபுரம்:

    நெல்லை மாவட்டம் கோட்டை கருங்குளம் பகுதியை சேர்ந்தவர் செல்லையா (வயது 50).

    இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தனது மனைவி சுமதி மற்றும் 2 குழந்தைகளுடன் கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள மூவாற்றுப்புழா என்ற இடத்தில் குடியேறினார்.

    மிகவும் ஏழ்மை நிலையில் குடும்பத்தை நடத்தி வந்த செல்லையா வாழ்க்கையை ஓட்டுவதற்காக மொத்த வியாபாரிகளிடம் லாட்டரி சீட்டுகளை வாங்கி அதை நடந்தே சென்று பொது மக்களிடம் விற்று வந்தார்.

    சமீபத்தில் கேரள அரசு வெளியிட்ட காருண்யா பாக்கியஸ்ரீ பம்பர் லாட்டரி சீட்டுகளையும் வாங்கி விற்று வந்தார். குலுக்கலுக்கு முதல் நாள் 4 லாட்டரி சீட்டுகள் மட்டும் விற்பனையாகவில்லை. அவரும் பலரிடமும் லாட்டரி சீட்டை வாங்கிக் கொள்ளும் படி கெஞ்சிக் கேட்டும் யாரும் வாங்கவில்லை.

    இதனால் மனவேதனை அடைந்த செல்லையா அந்த லாட்டரிச்சீட்டுகளுடன் வீட்டிற்கு சென்றுவிட்டார். மறுநாள் லாட்டரி முடிவுகள் வெளியானபோது தான் விற்ற லாட்டரிச்சீட்டிற்கு பரிசு விழுந்து உள்ளதா என்று அவர் பார்த்த போது அவருக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் அவரிடம் விற்காமல் இருந்த ஒரு லாட்டரிச்சீட்டிற்கு முதல் பரிசான ரூ.5 கோடி கிடைத்திருந்தது தெரிய வந்தது.


    உடனே தான் வாங்கிய லாட்டரி  மொத்த வியாபாரியிடம் சென்று தனக்கு பரிசு விழுந்தததை செல்லையா உறுதி செய்துகொண்டார். ரூ.5 கோடி பரிசு பெற்றது பற்றி செல்லையா கூறியதாவது:-

    லாட்டரிச்சீட்டுகளை விற்று ஏழ்மையான நிலையில் வாழ்ந்து வந்த என்னால் எனது குடும்பத்தினரை மகிழ்ச்சியுடன் வைத்துக் கொள்ள முடியவில்லை. பிள்ளைகளையும் சரியாக படிக்க வைக்க முடியவில்லை. லாட்டரி பரிசு மூலம் அவர்களுக்கு நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுப்பேன். சொந்த ஊரில் வீடு கட்டுவேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    கேரளாவில் அதிர்ஷ்டம் இல்லை என்று நினைத்து தொழிலாளி வீசி எறிந்த லாட்டரி சீட்டுக்கு ரூ.10 லட்சம் பரிசு விழுந்துள்ளது. ஆனால் அந்த சீட்டை அவரது நண்பர் எடுத்து தன் பெயரில் டெபாசிட் செய்துள்ளார். #KeralaLottery
    திருவனந்தபுரம்:

    கேரள அரசு லாட்டரிச் சீட்டுகளை அச்சடித்து விற்பனை செய்து வருகிறது. ஓணம் போன்ற பண்டிகை காலங்களில் பம்பர் பரிசு குலுக்கல்களையும் நடத்தி வருகிறது.

    கேரள அரசின் காருண்யா பிளஸ் லாட்டரிச்சீட்டு சமீபத்தில் விற்பனை செய்யப்பட்டது. திருவனந்தபுரம் அருகே பாலோடு பகுதியை சேர்ந்த அஜினு (வயது 35) என்ற தொழிலாளி இந்த லாட்டரிச்சீட்டை வாங்கினார். பரிசு குலுக்கல் அன்று அவர் தனது லாட்டரிச்சீட்டுக்கு பரிசு விழுந்து உள்ளதா? என்று சரிபார்த்தார்.

    சிறிய பரிசில் இருந்து தனது அதிர்ஷ்டத்தை சரிபார்த்தபடி வந்த அவர் ரூ.10 ஆயிரம் பரிசு வரை பார்த்தும் தனது லாட்டரிச் சீட்டுக்கு பரிசு கிடைக்காததால் அந்த லாட்டரிச்சீட்டை கோபத்துடன் கசக்கி எறிந்து விட்டார்.

    ஆனால் அந்த லாட்டரிச் சீட்டுக்கு 2-வது பரிசான ரூ.10 லட்சம் கிடைத்திருந்தது. இது அவரது நண்பர் அனீஸ் கிருஷ்ணனுக்கு தெரிய வந்தது. ஆனால் அவர் அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் அஜினுவிடம் சென்று லாட்டரிச்சீட்டுக்கு பரிசு ஏதும் கிடைத்து உள்ளதா? என்று விசாரித்தார். அப்போதுதான் அவர் அந்த லாட்டரிச்சீட்டை பரிசு கிடைக்கவில்லை என்று நினைத்து கசக்கி எறிந்து விட்டது தெரிய வந்தது.

    உடனே அவர் அந்த லாட்டரிச்சீட்டை தேடி கண்டுபிடித்தார். அதுபற்றி அஜினுவிடம் தெரிவிக்காமல் தனது வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்துவிட்டார். இதற்கிடையில் அஜினு லாட்டரிச்சீட்டு வாங்கிய கடைக்காரர் அவர் வாங்கிய லாட்டரிச்சீட்டுக்கு ரூ.10 லட்சம் பரிசு விழுந்த விவரத்தை தெரிவித்தார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தான் லாட்டரிச்சீட்டை வீசிய இடத்தில் தேடியபோது அது கிடைக்கவில்லை. அப்போது தான் தனது நண்பனே தன்னை ஏமாற்றி லாட்டரிச் சீட்டை எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதுபற்றி அஜினு பாலோடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதுபற்றி அஜினு கூறும் போது, எனது மகள் இதய நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார். அவரது சிகிச்சைக்கு கடன் வாங்கி செலவு செய்து வருகிறேன். லாட்டரியில் பரிசு கிடைத்தால் அதன் மூலம் எனது மகளுக்கு சிகிச்சை அளித்து அவரது உயிரை காப்பாற்ற முடியும். எனவே எனக்கு போலீசார் உதவ வேண்டும் என்றார். #KeralaLottery
    ×