என் மலர்
நீங்கள் தேடியது "love Couple"
- இருவரும் கடந்த 2 வருடமாக காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள்.
- தனது மகளை கோவிந்தசாமி கடத்தி சென்றுவிட்டதாக புகார் அளித்துள்ளனர்.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே சொரக்காப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் கோவிந்தசாமி. இவர் பெங்களுருவில் ஒரு தனியார் மருத்துவமனையில் ஓட்டுனராக பணிபுரிந்து வந்தார். இவருக்கும், அதே மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்த ஐஸ்வர்யாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது.
இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் கடந்த 2 வருடமாக காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள்.
இதனையடுத்து இவர்கள் இருவரும் கடந்த 22-ந் தேதி பெங்களுருவில் உள்ள ஒரு கோவிலில் நண்பர்கள் உதவியுடன் திருமணம் செய்து கொண்டு கோவிந்தசாமியின் சொந்த ஊரான சொரக்காப்பட்டி கிராமத்தில் வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் ஐஸ்வர்யாவின் பெற்றோர்கள் பெங்களுரு காவல் நிலையத்தில் தனது மகளை கோவிந்தசாமி கடத்தி சென்றுவிட்டதாக புகார் அளித்துள்ளனர். இதையறிந்த ஐஸ்வர்யா மற்றும் கோவிந்தசாமி இருவரும் நேற்று மாலை தருமபுரி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்து புகார் மனு அளித்துள்ளனர்.
இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- கவியரசனும், கார்த்திகாவும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.
- நேற்று முன்தினம் திருச்சி மாவட்டம், தொட்டியம் தாலுகா, காட்டுப்புத்தூர் அருகே உள்ள மாயனூர் செல்லாண்டியம்மன் கோவிலில் காதல் ஜோடியினர் திருமணம் செய்து கொண்டனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, பிலிக்கல்பாளையம் அருகே உள்ள சேளூர் செல்லப்பம்பா ளையத்தை சேர்ந்தவர் பூபதி. இவரது மகன் கவியரசன் (வயது 22). இவர் என்ஜினீயரிங் முடித்துள்ளார்.
அண்ணா நகர் அருகே உள்ள நெட்டையாம்பாளையத்தை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகள் கார்த்திகா (21). இவர் பி.சி.ஏ பட்டதாரி.
இவர்கள் இருவரும் உற வினர்கள் என்பதால், இவர்க ளுக்குள் பழக்கம் ஏற்பட்டு கடந்த 4 ஆண்டாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்களது காதல் இரு வீட்டாருடைய பெற்றோருக்கும் தெரிய வந்ததால், எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் கவியரசனும், கார்த்திகாவும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். நேற்று முன்தினம் திருச்சி மாவட்டம், தொட்டியம் தாலுகா, காட்டுப்புத்தூர் அருகே உள்ள மாயனூர் செல்லாண்டியம்மன் கோவிலில் காதல் ஜோடியினர் திருமணம் செய்து கொண்டனர்.
பின்னர் பெற்றோருக்கு பயந்து நேற்று பரமத்திவேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். போலீசார் இரு தரப்பு பெற்றோர்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் இருதரப்பு பெற்றோரும் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனிடையே கார்த்திகா தனது பெற்றோருடன் செல்ல மறுத்து, காதல் கணவருடன் செல்வதாக கூறியதால் அவரை கவியரசனுடன் மகளிர் போலீசார் அனுப்பி வைத்தனர்.
- ராம்குமார் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக இருந்து வருகிறார்.
- நேற்று முன்தினம் இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த சிறு கிராமத்தை சேர்ந்தவர் ராம்குமார்(வயது25). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக இருந்து வருகிறார்.இவரும் அவரது பக்கத்து ஊரான வாணியம்பாளையத்தை சேர்ந்த நிர்மலா (22) என்பவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். நிர்மலாவின் பெற்றோர் மகளை காணவில்லை என்றும் ராம்குமார் கடத்தி சென்றதாகவும் புதுப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தனர். புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் இது குறித்து வழக்கு பதிவு செய்து காணாமல் போன நிர்மலாவை தேடி வந்தனர். இதற்கிடையில் காணாமல் போன நிர்மலா, ராம்குமார் உடன் புதுப்பேட்டை போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தார். புதுப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
- பெற்றோர் எதிர்ப்பு
- கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்
ராணிப்பேட்டை:
ஆற்காடு அடுத்த லாடாவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் நித்யா (வயது 19) இவரும் வாலாஜா அடுத்த பூண்டி பகுதியை சேர்ந்த சந்தோஷ் (23) என்ற வாலிபரும் கடந்த 4 வருடங்களாக காதலித்து வந்தனர்.
2 பேரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களின் காதலுக்கு நித்யாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் நித்யாவிற்கு திருமணம் செய்வதற்காக வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து வந்துள்ளனர்.
இதற்கிடையில் வீட்டை விட்டு வெளியேறிய நித்யா மற்றும் சந்தோஷ் ஆகியோர் கடந்த 22-ந் தேதி பூட்டுத்தாக்கு பகுதியில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.
காதலுக்கு நித்யாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்திருந்ததால் பாதுகாப்பு கேட்டு நேற்று ராணிப்பேட்டை மாவட்டம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் காதல் ேஜாடிகள் தஞ்சம் அடைந்தனர்.
இதை தொடர்ந்து அங்கிருந்த போலீசார் காதல் திருமண ஜோடியை ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.
அதன் பேரில் ராணிப்பேட்டை மகளிர் போலீசார் இரு தரப்பு பெற்றோர்களுக்கும் தகவல் தெரிவித்து போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து சமரசம் செய்ய முயன்றனர்.
இதில் சமரசம் ஏற்படாததால் நித்யா தனது காதல் கணவருடன் அனுப்பி வைத்தனர்.
- காட்டுப்புத்தூர் காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர்
- மணமக்களை மணமகளின் பெற்றோருடன் போலீஸார் அனுப்பி வைத்தனர்.
தொட்டியம்,
கரூர் தாந்தோணிமலையை சேர்ந்த ராஜகோபால் மகன் சசிகுமார் (வயது25), இவரும் காட்டுப்புத்தூர் அருகேயுள்ள மேலமஞ்சமேடு சேர்ந்த பெருமாள் மகள் ஆர்த்தி (25) என்பவரும் கரூரில் உள்ள ஒரு தனியார் டெக்ஸ்டைல்சில் பணிபுரிந்தவர்கள். இவர்கள் இருவரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்நிலையில் இருவரும் பெத்தனூர் முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டு தங்களது குடும்பத்தாரிடமிருந்து பாதுகாப்பு கேட்டு காட்டுப்புத்தூர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் மணமகன் மற்றும் மணமகள் வீட்டாரை காவல் நிலையத்துக்கு வரவழைத்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் மணமகன் வீட்டார் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை என தெரிய வருகிறது. மேலும் மணமகனை விசாரித்ததில் மணமகளுடன் (காதலியுடன்) செல்வதாக உறுதியளித்ததன் பேரில் மணமகள் வீட்டார் சம்மதத்துடன் மணமக்களை மணமகளின் பெற்றோருடன் போலீஸார் அனுப்பி வைத்தனர்.
- முசிறி காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்
- இவர்களது காதலுக்கு இரு வீட்டிலும் எதிர்ப்பு
முசிறி,
முசிறி அடுத்த மேல வெள்ளூர் கிராமத்தை சேர்ந்த சேகர் மகன் ஆறுமுகம்(25) கேட்டரிங் வேலை செய்து வரும் இவரும், மகேந்திரமங்கலம் பகுதியை சேர்ந்த முருகானந்தம் மகள் யோகேஸ்வரி (19) என்பவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்து உள்ளனர். இவர்களது காதலுக்கு இரு வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பியது, இதனால் முசிறி பகுதியில் உள்ள விநாயகர் கோவில் திருமணம் செய்து கொண்ட காதலர்கள் தங்களுக்கு போதிய பாதுகாப்பு வசதி வேண்டி முசிறி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
இது தொடர்பாக முசிறி காவல் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சத்ய விநாயகம் தம்பதியரின் இரு விட்டாரையும் அழைத்து விசாரணை மேற்கொண்டதில் பெண் வீட்டார் சம்மதம் தெரிவிக்கவில்லை எனவும், மாப்பிள்ளை வீட்டார் சம்மதம் தெரிவித்ததின் பேரில் மணமக்களை மாப்பிள்ளை வீட்டாருடன் போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் முசிறி காவல் நிலையத்தில் பரபரப்பாக காணப்பட்டது.
- இன்ஸ்பெக்டர் பாபுஜி தலைமையிலான போலீசார் ஓட்டல் அறையில் சோதனை நடத்தினர்
- குறிப்பிட்ட இடத்தில் ரகசிய கேமராவுடன் இணைந்த கேபிள் துண்டிக்கப்பட்டு இருந்தது.
புதுச்சேரி:
புதுவை 100 அடி சாலை ரெயில்வே மேம்பாலம் அருகே உள்ள தனியார் ஓட்டலில், மூலக்குளத்தை சேர்ந்த வாலிபர், தனது காதலியுடன் அறை எடுத்து தங்கினார்.
அப்போது தங்கியிருந்த அறையில் எலக்ட்ரிக்கல் சுவிட்ச் பாக்ஸில், இன்டர்காம் தொலைபேசியை இணைக்கும் பிளக்பாயிண்டில் ரகசிய கேமரா இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அந்த ரகசிய கேமராவை கழற்றி எடுத்த ஜோடி, உடனடியாக அறையை காலி செய்தது. இது குறித்து ரெசிடென்சி நிர்வாகத்திடம் கேட்டபோது, சரியான பதில் கிடைக்காததால் உருளையன்பேட்டை போலீசில் புகார் அளித்தனர்.
இன்ஸ்பெக்டர் பாபுஜி தலைமையிலான போலீசார் ஓட்டல் அறையில் சோதனை நடத்தினர்.
அப்போது குறிப்பிட்ட இடத்தில் ரகசிய கேமராவுடன் இணைந்த கேபிள் துண்டிக்கப்பட்டு இருந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில், ஓட்டல் மேலாளர் தேங்காய்த்திட்டு வசந்த்நகரை சேர்ந்த ஆனந்த் (வயது25) மற்றும் ஓட்டல் ஊழியர் அரியாங்குப்பம் ஓடை வெளியை சேர்ந்த ரூம் பாய் ஆப்ரகாம் (22) ஆகியோர் மீது இந்திய தண்டனை சட்டம் 354 (சி)பெண்களை ஆபாசமாக படம் பிடித்தல், தகவல் தொழில் நுட்ப பிரிவு 66 (இ) ரகசிய கேமரா பொருத்தி படம் பிடித்தல், கேபிள் மூலம் அனுப்புதல், தடயங்களை மறைத்தல் ஆகிய 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.
மேலும் ஓட்டல் அறையில் தங்குபவர்களை ஆபாசமாக வீடியோ எடுக்க கேமரா மறைத்து வைத்துள்ளனரா அல்லது ரகசிய கேமரா காட்சிகளை நேரடியாக இணையதளம் வழியாக கண்டு ரசித்து வந்தனரா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- பெற்றோருடன் பாச போராட்டம்
- போலீசார் இருவரிடமும் கடிதம் வாங்கிக்கொண்டு அனுப்பி வைத்தனர்
அணைக்கட்டு:
பொள்ளாச்சியில் காணாமல் போன இளம் பெண்ணை தேடி வந்த போலீசார். இதனை அறிந்து வேப்பங்குப்பம் போலீசின் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சமானார்கள். இன்னிலையில் காதலன் தான் வேண்டும் என்று இளம் பெண் போலீஸ் நிலையத்தில் கதறி அழுதார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி நேதாஜி நகர், அசோக் தெரு சேர்ந்த கந்தசாமி என்பவரின் மகள் நாகஜோதி (வயது 22) இளம்பெண் வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் வணிக தெருவை சேர்ந்த முருகன் என்பவரின் மகன் சுரேஷ் (வயது 22) என்பவரை காதலித்து வந்தனர்.
கடந்த 26-ந் தேதி இருவரும் வீட்டை விட்டு வெளியேறி வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள செல்லியம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து பெண்ணின் தாயார் பொள்ளாச்சி போலீஸ் நிலையத்தில் மகளை காணவில்லை என புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து விசாரணையை மேற்கொண்ட போலீசார் அவர்களை தேடி ஒடுகத்தூர் பகுதிக்கு வந்திருந்தனர். இதையடுத்து இளம் ஜோடியான நாகஜோதி மற்றும் சுரேஷ் வேப்பங்குப்பம் போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.
பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பெண்ணை அழைத்து செல்வதாக கூறினார்கள். சுரேஷை விட்டு நாகஜோதி பிரிய மனமில்லாமல் எனக்கு சுரேஷ் தான் வேணும் என்று போலீஸ் நிலையத்தில் கதறி அழுதார்.
இதன் பின் பெண்ணின் உறவினர்கள் நாகஜோதி வேண்டாம் என கூறி இங்கேயை விட்டுவிட்டு பொள்ளாச்சிக்கு சென்றனர்.
வேப்பங்குப்பம் போலீசார் இருவரிடமும் கடிதம் வாங்கிக்கொண்டு வழி அனுப்பி வைத்தனர்.
- போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அங்கிருந்த கருப்பு கொடிகளை அகற்றினர்.
- உடலை உறவினர்கள் பெற்றுக் கொள்ளாமல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
பெரியகுளம்:
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள காந்திநகரைச் சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 22). கூலித் தொழிலாளி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை காதலித்து வந்தார். இவர்கள் வெ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் காதலுக்கு இரு தரப்பு பெற்றோர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காதல் ஜோடிகள் கடந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறினர். காந்தி நகர் அருகே உள்ள மாந்தோப்புக்கு சென்று அங்குள்ள மரத்தில் இருவரும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
இதனால் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் சமாதானம் அடைந்த பெண்ணின் பெற்றோர் உடலை வாங்கிச் சென்றனர். ஆனால் மாரிமுத்துவின் உறவினர்கள் உடலை வாங்கவில்லை. மாரிமுத்துவை தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும். அவரது குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் நேற்று இந்திய ஜனநாயக முற்போக்கு இயக்கத்தினர் பெரியகுளம் அருகே காந்திநகர் கும்பக்கரை பிரிவு பகுதியில் உள்ள வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அங்கிருந்த கருப்பு கொடிகளை அகற்றினர். மேலும் கொடிகளை கட்டியதாக 9 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 8 நாட்களாக மாரிமுத்துவின் உடலை உறவினர்கள் பெற்றுக் கொள்ளாமல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
- 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்
- பெற்றோர்களை வரவழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி அடுத்த நாயன அத்தியூர் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் இவருடைய மகன் சரத் (வயது 23) இவர் வேலூரில் கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.
ஜவ்வாது மலை வசந்தபுரம் பகுதியைச் சேர்ந்த குமார் என்பவரின் மகள் பூஜா (20) இவர் வேலூரில் நர்சிங் முடித்துவிட்டு அங்கேயே தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார்.
இவர்கள் இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த வாரம் சரத்தின் வீட்டிற்கு பூஜா வந்ததாக கூறப்படுகிறது.
பின்னர் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி நேற்று கிருஷ்ணகிரியில் உள்ள முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.
நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர்.
போலீசார் இருவரின் பெற்றோர்களையும் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தி காதல் ஜோடிகளை அனுப்பி வைத்தனர்.
- ஆலங்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்துள்ளனர்
- பெற்றோர்கள் வர மறுத்ததால் சங்கர்-பிரியதர்ஷினிக்கு திருமண வயது தாண்டி விட்டதால் இருவரும் சேர்ந்து வாழ்வதாக எழுதிக்கொடுத்தனர்.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே வன்னியன் விடுதியை சேர்ந்தவர் அழகர் மகன் சங்கர் (வயது 28). இவரும், கொத்தமங்கலத்தை சேர்ந்த ராமநாதன் மகள் பிரியதர்ஷினி (26) என்பவரும் காதலித்து அப்பகுதியில் உள்ள கோவிலில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து இருவரும் பாதுகாப்பு கேட்டு ஆலங்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் தஞ்சம் அடைந்தனர். இதையடுத்து போலீசார் இவர்களின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்தனர். பெற்றோர்கள் வர மறுத்ததால் சங்கர்-பிரியதர்ஷினிக்கு திருமண வயது தாண்டி விட்டதால் இருவரும் சேர்ந்து வாழ்வதாக எழுதிக்கொடுத்தனர். இதையடுத்து போலீசார் அவர்களை அனுப்பி வைத்தனர்.
- 4 பேர் மீது வழக்கு பதிவு
- ஆசை வார்த்தை கூறி தனது மகளை கடத்தியதாக கூறியிருந்தார்.
கடலூர்:
புதுப்பேட்டை அடுத்த சிறுகிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் மகள்கோமதி (19 ) இவர்பிளஸ்-2 படித்து முடித்துவிட்டு வீட்டிலிருந்து வந்தார். கடந்த 3-ந் தேதி இரவு11மணி அளவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கோமதி திடீரென காணாமல் போனார். பல இடங்களில் தேடியும் எங்கும் கிடைக்காததால் அவரது தந்தை ஆறுமுகம் புதுப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
புகாரில் பலாப்பட்டுவை சேர்ந்தர் பாலமுருகன் ஆசை வார்த்தை கூறி தனது மகளை கடத்தியதாக கூறியிருந்தார். இது குறித்து புதுப்பேட்டை போலீஸ் சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் காணாமல் போன கோமதி, பாலமுருகனை திருமணம் செய்து கொண்டு நேற்று மாலை புதுப்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு வந்தனர். அப்போதுஇரு குடும்பத்தை சேர்ந்த மற்றும் ஊர் தரப்பினர்கள் 30 பேர்கள் அங்கு திரண்டனர் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதில் காதல் திருமணத்திற்கு உதவியாக இருந்ததாகபலாப்பட்டு பசுபதி (29), லட்சுமிபதி (31),ஆகிய இருவருக்கும் அடி உதை விழுந்தது இதில் காயமடைந்த இருவரும் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டன இதுகுறித்து பசுபதி கொடுத்த புகாரின் பேரில் சிறு கிராமத்தைச் சேர்ந்த கோகுல்ராஜ், சிவசுப்பிரமணியன், மணிகண்டன்,கிருஷ்ணன் ஆகிய நான்கு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்