என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » love letters
நீங்கள் தேடியது "love letters"
பாகிஸ்தான் தேசியநாளையொட்டி இம்ரான் கானுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்த நிலையில் அந்நாட்டுக்கு காதல் கடிதங்கள் எழுதுவதை நிறுத்துங்கள் என காங்கிரஸ் அறிவுறுத்தியுள்ளது. #PMModi #loveletters #Congress
புதுடெல்லி:
லாகூர் ஒப்பந்தத்தை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் மார்ச் 23-ந்தேதி பாகிஸ்தான் தேசியதினம் கொண்டாடப்படுகிறது.
அதைதொடர்ந்து பிரதமர் நரேந்திரமோடி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு வாழ்த்து செய்தி அனுப்பி உள்ளார். அதில், ‘‘தேசிய தினம் கொண்டாடும் பாகிஸ்தான் மக்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.
துணை கண்டத்தில் பயங்கரவாதம் மற்றும் வன்முறை இன்றி ஜனநாயகம், அமைதி மற்றும் செல்வசெழிப்புடன் மக்கள் இணைந்து வாழும் நேரம் இது’’ என தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, காங்கிரஸ் கட்சியின் மூத்த செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ள பதிவில், ‘பாகிஸ்தான் கட்டவிழ்த்து விடும் பயங்கரவாதத்தை பற்றி ஒரு வார்த்தைகூட குறிப்பிடாமல் பாகிஸ்தான் பிரதமருக்கு நமது 56 அங்குலம் மார்புக்காரர் (மோடி) வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார்.
அவரது புஜபலம் மற்றும் அழுகாச்சி நாடகம் இந்திய பத்திரிகையாளர்கள் மற்றும் மக்களுக்கு மட்டும்தான். பாகிஸ்தானுக்கு காதல் கடிதங்கள் எழுதுவதை அவர் நிறுத்திக்கொள்ள வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்னர் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு எல்லைப்பகுதி தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பாகிஸ்தான் அரசுக்கு முன்னர் கடிதங்கள் வாயிலாக கண்டனம் தெரிவித்து வந்தபோது ‘காதல் கடிதங்கள் எழுதுவதை முதலில் நிறுத்துங்கள்’ என்று மோடி விமர்சித்து வந்தது நினைவிருக்கலாம். #PMModi #loveletters #Congress

இந்நிலையில், அந்நாட்டுக்கு காதல் கடிதங்கள் எழுதுவதை நிறுத்துங்கள் என பிரதமர் மோடியை காங்கிரஸ் அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக, காங்கிரஸ் கட்சியின் மூத்த செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ள பதிவில், ‘பாகிஸ்தான் கட்டவிழ்த்து விடும் பயங்கரவாதத்தை பற்றி ஒரு வார்த்தைகூட குறிப்பிடாமல் பாகிஸ்தான் பிரதமருக்கு நமது 56 அங்குலம் மார்புக்காரர் (மோடி) வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார்.
அவரது புஜபலம் மற்றும் அழுகாச்சி நாடகம் இந்திய பத்திரிகையாளர்கள் மற்றும் மக்களுக்கு மட்டும்தான். பாகிஸ்தானுக்கு காதல் கடிதங்கள் எழுதுவதை அவர் நிறுத்திக்கொள்ள வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்னர் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு எல்லைப்பகுதி தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பாகிஸ்தான் அரசுக்கு முன்னர் கடிதங்கள் வாயிலாக கண்டனம் தெரிவித்து வந்தபோது ‘காதல் கடிதங்கள் எழுதுவதை முதலில் நிறுத்துங்கள்’ என்று மோடி விமர்சித்து வந்தது நினைவிருக்கலாம். #PMModi #loveletters #Congress
×

X