என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Lucid Motors"
- இரு மாடல்களிலும் ஒரே மாதிரியான முன்புற பம்ப்பர் உள்ளது.
- இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 708 கி.மீ. ரேன்ஜ் வழங்குகிறது.
அமெரிக்காவை சேர்ந்த எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர் லுசிட் மோட்டார்ஸ் தனது முதல் எஸ்.யு.வி. மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. கிராவிட்டி என அழைக்கப்படும் புதிய எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடல் லாஸ் ஏஞ்சல்ஸ் ஆட்டோ விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. 2016-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஏர் செடான் மாடலை அடுத்து லுசிட் மோட்டார்ஸ் அறிமுகம் செய்த இரண்டாவது மாடல் இது ஆகும்.
புதிய லுசிட் கிராவிட்டி மாடல் இரண்டு மற்றும் மூன்றடுக்கு இருக்கை அமைப்புகளில் கிடைக்கிறது. இந்த காரின் உற்பத்தி பணிகள் 2024 வாக்கில் துவங்கும் என்று தெரிகிறது. தோற்றத்தில் இந்த கார் ஏர் செடான் மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இரு மாடல்களிலும் ஒரே மாதிரியான முன்புற பம்ப்பர் மற்றும் ஹெட்லேம்ப்கள் வழங்கப்படுகின்றன.
இதன் பின்புறத்தில் மெல்லிய டிசைன், கிளாஸ் ரூஃப், நீண்ட ஓவர்ஹேங், கூர்மையான சி பில்லர், ரியர் ஸ்பாயிலர் வழங்கப்பட்டு இருக்கிறது. உள்புறம் இரண்டு ஸ்கிரீன்கள் உள்ளன. இதில் ஒன்று 34 இன்ச் அளவில் கர்வ்டு டிஸ்ப்ளே ஆகும். இது ஸ்டீரிங் வீலின் மேல்புறமாக பொருத்தப்பட்டு இருக்கிறது. மற்றொரு ஸ்கிரீன் டேஷ்போர்டின் மத்தியில் உள்ளது.
இத்துடன் 22 ஸ்பீக்கர்கள் கொண்ட சவுண்ட் சிஸ்டம், ஆம்பியன்ட் லைட்டிங், இருக்கைகளில் மசாஜ் வசதி வழங்கப்படுகிறது. இந்த எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடல் ஐந்து இருக்கைகள் மற்றும் ஆறு அல்லது ஏழு இருக்கைகள் என மூன்றுவித இருக்கை அமைப்புகளில் கிடைக்கிறது. இதில் உள்ள டூயல் மோட்டார் செட்டப் ஆல் வீல் டிரைவ் ஆப்ஷனை வழங்குகிறது.
இவை 792 ஹெச்.பி. பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 3.67 நொடிகளில் எட்டிவிடும். இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 708 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது.