search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Macbook Pro 2018"

    ஆப்பிள் நிறுவனத்தின் 2018 மேக்புக் ப்ரோ 13-இன்ச் மற்றும் 15-இன்ச் மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. புதிய சாதனங்கள் குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #MacBookPro2018



    ஆப்பிள் நிறுவனத்தின் 2018 மேக்புக் ப்ரோ 13 இன்ச் மற்றும் 15 இன்ச் மாடல்கள் டச் பார் வசதியுடன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. 

    இரண்டு ஆப்பிள் சாதனங்களிலும் 8-ம் தலைமுறை இன்டெல் கோர் பிராசஸர்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் 15-இன்ச் மாடலில் 6-கோர்கள் 70% வரை வேகமாக இயங்கும் என்றும் 13-இன்ச் மாடல் முந்தைய தலைமுறை மாடலுடன் ஒப்பிடும் போது இருமடங்கு வேகமாக இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



    இவற்றுடன் 32 ஜிபி மெமரி, ட்ரூ டோன் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருப்பதால் சிறப்பான அனுபவம் பெற முடியும் என்பதோடு மூன்றாம் தலைமுறை கீபோர்டு வழங்கப்பட்டிருக்கிறது. ஆப்பிள் நிறுவனத்தின் T2 சிப் கொண்ட முதல் மேக்புக் ப்ரோ மாடல்கள் இது ஆகும். 

    முன்னதாக இந்த சிப் ஐமேக் ப்ரோ மாடலில் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த சிப் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு வசதியை வழங்குவதோடு, செக்யூர் பூட் மற்றும் என்க்ரிப்டெட் ஸ்டோரேஜ் உள்ளிட்டவற்றை வழங்குகிறது. இத்துடன் இந்த சிப் மேக் சாதனங்களில் முதல் முறையாக சிரி (Hey Siri) அம்சத்தையும் வழங்குகிறது.



    15 இன்ச் மேக்புக் ப்ரோ (2018)

    - 6-கோர் இன்டெல் கோர் i7 மற்றும் i9 பிராசஸர்கள்
    - அதிகபட்சம் 2.9 ஜிகாஹெர்ட்ஸ் 4.8 ஜிகாஹெர்ட்ஸ் வரை டர்போ பூஸ்ட்
    - 32 ஜிபி DDR4 மெமரி
    - சக்திவாய்ந்த ரேடியான் ப்ரோ டிஸ்கிரீட் கிராஃபிக்ஸ் மற்றும் 4 ஜிபி வரை வீடியோ மெமரி
    - அதிகபட்சம் 4TB வரையிலான SSD ஸ்டோரேஜ்
    - ட்ரூ டோன் டிஸ்ப்ளே தொழில்நுட்பம்
    - ஆப்பிள் T2 சிப்
    - டச் பார் மற்றும் டச் ஐடி



    13 இன்ச் மேக்புக் ப்ரோ (2018)

    - குவாட்கோர் இன்டெல் கோர் i5 மற்றும் i7 பிராசஸர்கள்
    - அதிகபட்சம் 2.7 ஜிகாஹெர்ட்ஸ் மற்றும் 4.5 ஜிகாஹெர்ட்ஸ் வரை டர்போ பூஸ்ட்
    - இருமடங்கு eDRAM
    - இன்டெல் ஐரிஸ் ப்ளஸ் இன்டகிரேடெட் கிராஃபிக்ஸ் 655 மற்றும் 128 எம்பி eDRAM
    - அதிகபட்சம் 2TB வரை SSD ஸ்டோரேஜ்
    - ட்ரூ டோன் டிஸ்ப்ளே தொழில்நுட்பம்
    - ஆப்பிள் T2 சிப்
    - டச் பார் மற்றும் டச் ஐடி

    புதிய 13 இன்ச் மற்றும் 15 இன்ச் மேக்புக் ப்ரோ (2018) மாடல்களின் விலை ரூ.1,49,900 ( அமெரிக்காவில் 1799 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ.1,23,150) மற்றும் ரூ.1,99,900 (அமெரிக்காவில் 2399 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ.1,64,220) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

     

    ஆப்பிள் 2018 மேக்புக் ப்ரோ மாடல்களின் விற்பனை இம்மாதத்திலேயே தேர்வு செய்யப்பட்ட ஆப்பிள் விற்பனையாளர்களிடம் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேக்புக் ப்ரோ மாடல்களுக்கு ஏற்ற லெதர் ஸ்லீவ்களையும் ஆப்பிள் அறிமுகம் செய்திருக்கிறது.

    13 இன்ச் மற்றும் 15 இன்ச் மேக்புக் ப்ரோ சேடிள் பிரவுன், மிட்நைட் ப்ளு நிறங்களில் லெதர் ஸ்லீவ்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் விலை 179 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.12,260) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆப்பிள் லெதர் ஸ்லீவ்கள் உயர் ரக லெதர் மூலம் உருவாக்கப்பட்டு இருப்பதோடு மென்மையான மைக்ரோஃபைபர் லைனிங் செய்யப்பட்டுள்ளது. #MacBookPro2018 #Apple
    ×